முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் SDPI கட்சியினர் நேற்று மக்களுக்கு நன்றி தெருவித்தனர்.





முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனாப்.அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு 1927 வாக்குகள் அளித்தமைக்கு தனது நன்றியை முத்துப்பேட்டை மக்களுக்கு தெருவிக்கும் விதம் நேற்று நன்றி தெருவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருதங்காவெலி, வெள்ளைக்குலத்தான்கரை, பேட்டை, தெற்குத் தெரு, மரைக்காயர் தெரு, பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகர், புது காளியம்மன் கோவில் தெரு, செம்படவான் காடு, ஆ,நே,பள்ளி, மேலும் அனைத்து இடங்களிலும் உள்ள வார்டு மக்களுக்கு தனது நன்றியை அப்போது அவர் தெருவித்தார். இதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய SDPI யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய ஜனாப்.அபூபக்கர் சித்திக் அவர்கள், அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகளை சீர் செய்யும் பணிகள் உடனே நிறைவேற்றி தரப்படும் என்றும், அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைகளை சரிசெய்து மாணவர்களின் அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் மாற்று குடிநீர் ஆகியவை கிடைக்க செய்து மேலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் ஒழி ஏற்றுவதற்காக முறையான பேரூராட்சி நிர்வாகத்தினரை அணுகுவதெனவும், A,B,C சொத்து வரி விதிப்பு இருக்கக்கூடிய முறைகேடுகளை களைந்து தமிழக அரசு ஆணையின் அடிப்படையில் ABC மண்டல பிரிவை அமல்படுத்த முயற்ச்சி செய்வோம் என்றும், இப்படிப்பட்ட பல்வேறு முறைகேடுகளை களைந்து சரியான ரீதியில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற அரப்போராட்டங்கள் மூலம் மக்கள் பணியாற்றுவோம் என்றும்,ஒருகால் பேரூராட்சி நிர்வாகம் கவன குறைவு மற்றும் அலட்சியமாக செயல்படும் பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி அரப் போராட்டங்களின் மூலமாக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவோம் என்றும் அப்போது அவர் உரைநிகள்தினார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

Riporter Ilyas, ASNS. Abdul Bari, EK. Munavar Khan, Abu Marvaa

முத்துப்பேட்டையில் கேட்பாரற்று கிடக்கும் பட்டறைக் குளம்? ஓர் பார்வை:






முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் நகரத்தின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளதுதான் பட்டறைக்குலம். கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து தரப்பு மக்களும் பயன்பட்டு வந்தன. இதில் ஆண்,பெண் ஆகிய இருபாலரும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்த பட்டறைக்குலம் முத்துப்பேட்டை மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றி வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியின் (selection grade panjayath) பேரூராட்சியின் அலட்சியப் போக்கால் சீரழிந்து சின்னாபின்னமாகி சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு விட்டது. இதற்க்கு மிக முக்கிய காரணம் அக்குளத்தில் உள்ள ஓரங்களில் அமைந்துள்ள கடைகள் யாவும் தங்களுடைய கழிவுநீர்களை மேற்படி குளத்திலே விடுகிறார்கள். மேலும் இந்த குளக்கரையில் குடியிருப்பவர்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை பார்க்கும் போது மிக வேதனையான ஒரு விசயமாக இருக்கின்றது. இந்த விஷயம் குறித்து பலமுறை முத்துப்பேட்டை பேரூராட்சிக்கும், பொது பணித்துரைக்கும் தகவல் தெருவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 1 ஆண்டுக்கு முன்பு இந்த குளத்தை முறையாக தூறு வாரியும், சுத்தம் செய்தும் தர வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் பொது பணித்துரையால் முத்துப்பேட்டை பஞ்சாயத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரைக்கும் எந்த பணிகளும் தொடங்கவில்லை என்றும் இந்த பணிக்ககாக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது என்று முத்துப்பேட்டை மக்களின் மத்தியில் ஒரு கேள்விக்குறியாகத்தான் இன்றுவரையும் இருந்து வருகிறது. மேலும் முத்துப்பேட்டை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இதனை தூர்வாரி, சுத்தம் செய்து மேலும் ஆக்கிரமிப்புகளை நீக்கி மீண்டும் மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே முத்துப்பேட்டை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. பொறுத்திருந்து பாப்போம் இவர்கள் பொது மக்களை மதிப்பார்களா என்று?
source from muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்,அபு மர்வா


நன்றி - EK .அப்துல் அஜீஸ்

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை..








முத்துப்பேட்டை,அக்டோபர் 26 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மிக சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களிடம் சென்று இது குறித்து கேட்டார். பின்னர் பதிலளித்த அவர்கள், அம்மாவாசை என்பதால் இன்று அனைவரும் காலை 5 மணியளவில் எழுந்து என்னை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, மங்களம் வாத்தியம் பாடி, பட்டாசுகளை வெடித்து, பலகாரம் இனிப்புகளை சாமிக்கு படைத்தது அனைத்து உறவினர்களுக்கும் பறுமாரிய சம்பவம் மிக சிறப்பாக இருந்தது என்றும், மேலும் இன்று தீபாவளி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் தெருவித்தார்கள். மேலும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் முத்துப்பேட்டை நண்பர்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் தங்களுடைய தீபாவளி நல்வாத்துக்களை தெருவித்துக்கொண்டார்கள். இதில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்,பெண், ஆகிய ஆனைவரும் தங்களுடைய குடுபத்தோடு பட்டாசுகளை வெடித்து சிறப்பாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மேலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு முத்துப்பேட்டையில் அதிகமாக பட்டாசுகள் விற்பனை செய்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெருவித்தார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், AKL .அப்துல் ரஹ்மான்,ASNS.அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டை:பேரூராட்சி தேர்தலில் பணம் பலம்தான் வெற்றிபெற்றது! SDPI தகவல்!




முத்துப்பேட்டை,அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கட்சி பணம் பலத்தைக் கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்று SDPI - யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய சித்திக் மச்சன் என்கிற திரு. அபூபக்கர் சித்திக் அவர்கள் இதனைத் தெருவித்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு 1927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு உயர்த்தி தந்த அனைத்து முத்துப்பேட்டை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெருவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார். மேலும் இத்தனை வாக்குகளை பெறுவது என்பது ஒரு சாதாரண விசயம்மல்ல என்றும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து சமுதாய மக்கள்களுக்கும், வெளிநாட்டுவாழ் நண்பர்களுக்கும் எனது மணமார்ந்த நன்றியையும் சலாத்தையும் தெருவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். 

இந்த தேர்தலில் மக்களின் ஒரு மித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு SDPI கட்சியானது பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டது என்றும், அவற்றில் சிலவற்றை நான் இங்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன் என்றும், அதில் சாதாரண பெட்டிக் கடை வைத்திருப்பவர்களிலிருந்து, பெரிய மளிகை கடை வைத்திருப்பவர்கள் வரை, அனைத்து பால் வியாபாரிகளும், டீக்கடை வைத்திருப்பவர்களிலிருந்து பெரிய ஹோட்டல் வைத்திருப்பவர்கள் வரை, எல்லா வற்றிருக்கும் மேலாக வெளி நாட்டில் வாழக்கூடிய அனைத்து மக்களும் ஒரு முறை இரு முறை அல்ல சுமார் 15 முதல் 20 முறைகளுக்கு மேலாக தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கும் தொடர்ந்து முயற்ச்சி செய்தது ஒருமித்த கருத்தை எட்ட வைத்துள்ளார்கள். 

அதாவது இந்துக்கள், முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள், தலித்கள், மேலும் ஆட்டோ ஒட்டுனர்களிளிருந்து கார், வேன் ஓட்டுனர்கள் வரை SDPI - யின் வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தார்கள். ஆனால் தனது வெற்றிக்கு இறைவனின் நாட்டம் இல்லை என்று தான் சொல்லவேண்டும் மேலும், இந்த தோல்வியில் கூட நமக்கு இறைவன் மிகப் பெரிய வெற்றியை வைத்துள்ளான் என்று அவர் தெருவித்தார். மனிதன் என்ற அடிப்படையில் பார்க்கும்போது ஆசைகளும், அவசரமும் இருக்கத்தான் செய்யும், ஆனால் நமக்கு இறைவன் நன்மையையே நாடுவான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இரண்டு விசயங்களை மக்கள் மத்தியில் சமர்பிக்க கடமைப்பட்டுள்ளேன். 

அவற்றில் முதலாவது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து நம்முடைய வேகம் அனைத்தும் அரசியல் கட்சிகளையும் விஞ்சி சென்று கொண்டிருந்த போதுதான், நக்கீரனின் நச்சு கருத்து போஸ்டர்கள் ஓட்டப்படுகிறது என்றும் ஃபாசிசத்திருக்கு எதிராக தன்னுடைய பத்திரிக்கையை நடத்தி வரக்கூடிய நக்கீரன் கோபால் அவர்களின் பத்திரிகையில் ஃபாசிசத்தின் பிராமணர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை அறியாத வண்ணம் "முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தல்" இந்துவா? முஸ்லிமா? என்ற நச்சு கருத்தை விதித்துள்ளார்கள் என்றும், இவற்றை அனைத்து மக்களும் சித்திக்க வேண்டும் என்றும் அவர் தெருவித்தார். இந்த போஸ்டர்கள் எப்பொழுதாவது நாக்கீரன் மூலம் ஒட்டப்பட்டுள்ளதா என்று பாத்தால் இல்லை என்றும் இது ஒரு திட்டமிட்ட சதிதான் என்றும் அவர் தெருவித்தார்.

இரண்டாவதாக தேர்தலில் தோர்க்க போகிறோம் என்ற நிலையை நன்கு அறிந்திருந்தும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களையும், சொந்தகாரவர்களையும் நிர்பந்தத்திற்கு உட்படுத்தி வறட்டு கவுரவத்தாலும், அலட்சியத்தாலும் முஸ்லிம்களுடைய ஓட்டுகளை பிரித்தது நம்முடைய பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும், அவர் தெருவித்தார். ஏனெனில் சுயேச்சை வேட்பாளர்களாக 4 பேர் முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப் பட்டனர். 4 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் பெற்ற வாக்குகள் 775 மேலும் முஸ்லிம் லீக், ம.ம.க. போன்ற கட்சிகள் பெற்ற வாக்குகள் 172 + 396 = 568 இது போன்ற நமது வாக்குகள் சுமார் 1343 (இதில் விடுதலை சிறுத்தையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை) வாக்குகளை நாம் வீணாக்கி உள்ளோம் என்பதை வரும் காலங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெருவித்தார். 

அதே போல் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு தே.மு.தி.க. கட்சி சார்பாக திரு.பத்மநாதன் அவர்கள் போட்டியிட்டார்கள், அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 115 ஆகும் என்றும், 39 MLA க்கள் தங்கள் வசம் இருந்தாலும் கூட்டுசதியில் பங்கெடுத்துல்லதை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும் என்றும் அவர் தெருவித்த்வர். இந்த தேர்தலில் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக திருந்துவார்கள் என நான் நம்புகிறேன் தோல்வியுற்றது வெற்றியின் முதல் படிதான் என்றும், ஏனெனில் 1927 வாக்குகளை கொடுத்த மக்களுக்கு நாம் ஒரு ருபாய் கூட பணம் கொடுக்கவில்லை என்றும் இதுவே மிகப்பெரிய வெற்றிதான் என்றும் அவர் தெருவித்தார்.

2328 வாக்குகள் பெற்றிருக்கக்கூடிய அ.தி.மு.க. வாக இருக்கட்டும், இன்ன பிற கட்சிகளாக இருக்கட்டும் 90 சதவீதம் பணம் கொடுத்து பெற்றதுதான் உண்மை என்பதை அவர்களும் உணர்வார்கள், என்றும் அவர் தெருவித்தார். மேலும், இனி நமது மக்கள் களப்பணியின் வேகத்தால் பணம் கொடுத்து ஓட்டு பெறுவதை உடைத்தெறிந்து உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட உறுதி பூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த நாம் கடமை பட்டுள்ளோம் என்றும் அவர் தெருவித்தார். அதே போல் தேர்தல் களத்தில் SDPI க்கு ஒத்துழைப்பு அளித்தது போல் இனிவரும் காலங்களில் நாம் முன்னெடுத்து செல்லும் மக்கள் நல போராட்டங்களுக்கும் ஆதரவை அன்போடு எதிர்பார்கிறேன் என்றும் அப்போது அவர் தெருவித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டையில் தொடர்ந்து இரண்டு நாள் மழை!



முத்துப்பேட்டை, அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தமிழ் நாடு வானிலை ஆராய்ச்சியின் இயக்குநர் திரு.ரமணனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கேட்டதற்கு பதிலளித்த அவர், வடமேற்கு பருவமழை தற்பொழுது ஆரம்பித்துள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் விவசாயம் செய்யக் கூடிய மக்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள். எங்களால் தற்போது விவசாயம் செய்ய முடியாது என்றும் அவ்வாறு செய்தால் நஷ்டம் எங்களை சூழ்ந்து கொள்ளும் என்றும் அவர்கள் கூறினார்கள். மேலும் விவசாயம் செய்யக் கூடிய மக்களுக்கு அறிவுரையாக மழைகாலங்களில் கரும்பு விவசாம் செய்தால் மிக நன்றாக இருக்கும் என்றும் அப்போது அவர்கள் தெருவித்தார்கள்.

கடாபியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யமாட்டோம்: புரட்சியாளர்கள் அறிவிப்பு


திரிபோலி,அக்டோபர் 23 : லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற சந்தேகம் வலுத்திருக்கும் வேளையில் அவரது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யமாட்டோம் என புரட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.கடாபியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு தேவை இல்லை என மிஸ்ருத்தா ராணுவ கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஃபாதி அல் பஸாகா எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதர ராணுவ கமாண்டர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கத்தாஃபியின் மரணம் தொடர்பாக விசாரணை தேவை என ஐ.நாவும், அவரது குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ள சூழலில் போஸ்ட் மார்ட்டம் நடத்தப்படும் என செய்தி வெளியாகியிருந்தது.அதேவேளையில் கத்தாஃபியின் உடலை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. மிஸ்ருத்தாவில் ஒரு இறைச்சிக் கடையில் உள்ள ப்ரீசரில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறந்த உடலை பார்ப்பதற்காக ஏராளமானோர் வருகை தருகின்றனர். ஸிர்த்தில் கொல்லப்பட்ட கத்தாஃபியின் மகன் முஃதஸிமின் உடலும் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடலை அடக்கம் செய்வது குறித்து விவாதிக்க திரிபோலியில் புரட்சியாளர்களின் ராணுவ கமாண்டர் அப்துல் ஹகீம் பெல்ஹாஜ் மிஸ்ருத்தாவிற்கு வருகிறார்.கத்தாஃபியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என புரட்சியாளர்கள் குழு தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் பெங்காசியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் அவர். மேலும் சில தினங்கள் கத்தாஃபியின் உடல் பாதுகாக்கப்படும் என எண்ணெய்வள அமைச்சர் அலி தர்ஹூனி தெரிவித்துள்ளார். கத்தாஃபியின் பிறந்த நாடான ஸிர்த்திலோ அல்லது மிஸ்ருத்தாவிலோ அவரது உடல் அடக்கம் செய்யப்படும். அடக்கஸ்தலம் புண்ணியஸ்தலமாக மாறும் வாய்ப்பு இருப்பதால் கடலில் உடலை அடக்கம் செய்யவும் ஆலோசித்து வருகின்றனர். இல்லையெனில் ரகசியமாக அவரது உடல் அடக்கம் செய்யப்படும். கத்தாஃபியின் ரகசிய புலனாய்வு அதிகாரி அப்துல்லா அல் ஸனூஸி வடக்கு நைஜீரியாவிற்கு சென்றுள்ளதாக செய்தி கூறுகிறது.நேற்று நடப்பதாக அறிவித்திருந்த சுதந்திர பிரகடனம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெங்காசியில் நிகழ்ச்சி நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஜூனில் தேர்தல் நடத்துவதாக திட்டமிட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல் ஜோர்டானில் தெரிவித்தார். புதிய அரசியல் சட்டத்தை தயார் செய்தல், அதன் மீது மக்கள் விருப்பவாக்கெடுப்பு நடத்துதல், அரசை உருவாக்குதல் ஆகிய பணிகள் தங்களின் முன்னால் உள்ள முக்கிய பணிகள் என அவர் தெரிவித்தார். இம்மாதம் 31-ஆம் தேதி லிபியாவில் பணியை நிறுத்துவோம் என நேட்டோ அறிவித்துள்ளது.அதேவேளையில் 20 ஆயிரம் கோடி டாலர் சொத்து கத்தாஃபிக்கு பல்வேறு நாடுகளில் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் வெளியிட்ட புள்ளிவிபரத்தைவிட கத்தாஃபியின் சொத்து இரண்டு மடங்காகும். இதில் பணம், தங்கம், நிலம் ஆகியன அடங்கும்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டை: MP, MLA ,தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நாளை தொடக்கம் :


முத்துப்பேட்டை,அக்டோபர் 23 : திருவாரூர் மாவட்டம் முழுவதும் MP /MLA தேர்தலுக்கான வாக்களர் பட்டியல் திருத்தப்பணி நாளை தொடங்க உள்ளது. எனவே 01 .01 .2012 ஆம் தேதியன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் (31 .12 .1993 மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்கள்) அனைவரும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட 24 .10 .2011 முதல் 08 .11 .2011 வரை (30 .10 .2011 மற்றும் 06 .11 .2011 Sunday உட்பட) குடியிருக்கும் பகுதிக்கு தொடர்புடைய வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் (DESIGNATED OFFICER ) சென்று வாக்களர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான விண்ணப்பங்கள் பெற்று அவற்றை ஆதாரங்களுடன் இணைத்து முழுமையாக பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலில் சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அறிவிப்பு
மாவட்ட ஆட்சித் தலைவர்
திருவாரூர்

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,

முத்துப்பேட்டை, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களின் 1 முதல் 18 வார்டு வாரியாக வாக்கு பெற்ற விபரம்:






முத்துப்பேட்டை,அக்டோபர் 22 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலை போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் 1 முதல் 18 வரை உள்ள வார்டுகளில் தான் பெற்ற வாக்குகளை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அன்பார்ந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் தங்களுடைய கருத்துகளை தவறாமல் இந்த இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1 முதல் 18 வரையுள்ள 13 தலைவர் வேட்பாளர்களின் வாக்கு விபரம்:

(1) SDPI கட்சியின் வேட்பாளர் ஜனாப்.அபூபக்கர் சித்திக், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:1926
(1) வது வார்டு: 11 , (2) வது வார்டு:89,(3) வது வார்டு:192,(4) வது வார்டு:38,(5) வது வார்டு:29,(6) வது வார்டு:106,(7) வது வார்டு:257,(8) வது வார்டு:163,(9) வது வார்டு:229 (10) வது வார்டு:16,(11) வது வார்டு:6,(12) வது வார்டு:76,(13) வது வார்டு:354,(14) வது வார்டு:6,(15) வது வார்டு:164 (16) வது வார்டு:153 (17) வது வார்டு:31 (18) வது வார்டு:16
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(2) VC கட்சியின் வேட்பாளர் ஜனாப்.அப்துல் சலீம், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:218
1) வது வார்டு: 15 , (2) வது வார்டு:7 (3) வது வார்டு:21 (4) வது வார்டு:0 (5) வது வார்டு:3 (6) வது வார்டு: 8(7) வது வார்டு:9 (8) வது வார்டு:5(9) வது வார்டு:4 (10) வது வார்டு: 18(11) வது வார்டு:17 (12) வது வார்டு:30 (13) வது வார்டு:6 (14) வது வார்டு:27 (15) வது வார்டு:6 (16) வது வார்டு:2 (17) வது வார்டு:38 (18) வது வார்டு:2
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(3) ADMK கட்சியின் வேட்பாளர் திரு.கோ.அருணாச்சலம், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:2328
(1) வது வார்டு: 151 , (2) வது வார்டு:162 (3) வது வார்டு:151 (4) வது வார்டு:182 (5) வது வார்டு:254 (6) வது வார்டு:28 (7) வது வார்டு:58 (8) வது வார்டு:70(9) வது வார்டு:29 (10) வது வார்டு:69 (11) வது வார்டு:135 (12) வது வார்டு:197 (13) வது வார்டு:93 (14) வது வார்டு:363 (15) வது வார்டு:9 (16) வது வார்டு:42 (17) வது வார்டு:209 (18) வது வார்டு:108
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(4) சுயேச்சை கட்சி வேட்பாளர் ஜனாப்.சஹாப்தீன், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:251
(1) வது வார்டு: 2 , (2) வது வார்டு:9 (3) வது வார்டு:43 (4) வது வார்டு:0 (5) வது வார்டு:12 (6) வது வார்டு:26 (7) வது வார்டு:44 (8) வது வார்டு:19(9) வது வார்டு:29 (10) வது வார்டு: 2(11) வது வார்டு:6 (12) வது வார்டு:5 (13) வது வார்டு:13 (14) வது வார்டு:35 (15) வது வார்டு:13 (16) வது வார்டு:25 (17) வது வார்டு:6 (18) வது வார்டு:4
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(5) BJP கட்சியின் வேட்பாளர் திரு.செல்வக்குமார், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:1332
(1) வது வார்டு: 224 , (2) வது வார்டு:30 (3) வது வார்டு:4 (4) வது வார்டு:68 (5) வது வார்டு:58 (6) வது வார்டு:5 (7) வது வார்டு:4 (8) வது வார்டு:0(9) வது வார்டு: 1(10) வது வார்டு:280 (11) வது வார்டு:98 (12) வது வார்டு:212 (13) வது வார்டு:2 (14) வது வார்டு:125 (15) வது வார்டு:0 (16) வது வார்டு:6 (17) வது வார்டு:96 (18) வது வார்டு:119
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(6) DMK கட்சியின் வேட்பாளர் ஜனாப்.தமீம், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:1491
(1) வது வார்டு: 117 , (2) வது வார்டு:98 (3) வது வார்டு:82 (4) வது வார்டு:117 (5) வது வார்டு:47 (6) வது வார்டு:70 (7) வது வார்டு:64 (8) வது வார்டு:50(9) வது வார்டு:95 (10) வது வார்டு:10 (11) வது வார்டு:97 (12) வது வார்டு:71 (13) வது வார்டு:72 (14) வது வார்டு:30 (15) வது வார்டு:107 (16) வது வார்டு:98 (17) வது வார்டு:176 (18) வது வார்டு:90
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(7) DMDK கட்சியின் வேட்பாளர் திரு.பத்மநாதன், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:115
(1) வது வார்டு: 4 , (2) வது வார்டு:23 (3) வது வார்டு:7 (4) வது வார்டு:2 (5) வது வார்டு:12 (6) வது வார்டு:0 (7) வது வார்டு:15 (8) வது வார்டு:1(9) வது வார்டு:1 (10) வது வார்டு:4 (11) வது வார்டு:2 (12) வது வார்டு:4 (13) வது வார்டு:2 (14) வது வார்டு:1 (15) வது வார்டு:2 (16) வது வார்டு:2 (17) வது வார்டு:26 (18) வது வார்டு:7
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(8) IUML கட்சியின் வேட்பாளர் ஜனாப்.முஹைதீன் அடுமை, அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:192
(1) வது வார்டு: 4 , (2) வது வார்டு:3 (3) வது வார்டு:28 (4) வது வார்டு:9 (5) வது வார்டு:3 (6) வது வார்டு:5 (7) வது வார்டு:22 (8) வது வார்டு:10(9) வது வார்டு:25 (10) வது வார்டு:1 (11) வது வார்டு:0 (12) வது வார்டு:4 (13) வது வார்டு:33 (14) வது வார்டு:2 (15) வது வார்டு:26 (16) வது வார்டு:9 (17) வது வார்டு:4 (18) வது வார்டு:4
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(9) MMK கட்சியின் வேட்பாளர் ஜனாப்.முஹம்மது மாலிக், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:395
(1) வது வார்டு: 13 , (2) வது வார்டு:14 (3) வது வார்டு:16 (4) வது வார்டு:17 (5) வது வார்டு:5 (6) வது வார்டு:24 (7) வது வார்டு:48 (8) வது வார்டு:42(9) வது வார்டு:56 (10) வது வார்டு:7 (11) வது வார்டு:4 (12) வது வார்டு:15 (13) வது வார்டு:50 (14) வது வார்டு:1 (15) வது வார்டு:40 (16) வது வார்டு:19 (17) வது வார்டு:12 (18) வது வார்டு:12
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(10) சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.லெப்பை தம்பி, அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:173
(1) வது வார்டு: 6 , (2) வது வார்டு:0 (3) வது வார்டு:1 (4) வது வார்டு:4 (5) வது வார்டு:11 (6) வது வார்டு:9 (7) வது வார்டு:8 (8) வது வார்டு:15(9) வது வார்டு:16 (10) வது வார்டு:3 (11) வது வார்டு:4 (12) வது வார்டு:39 (13) வது வார்டு:13 (14) வது வார்டு:6 (15) வது வார்டு:6 (16) வது வார்டு:12 (17) வது வார்டு:27 (18) வது வார்டு:5
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(11) சுயேச்சை வேட்பாளர் திரு.ஜெயச்சந்திரன், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:489
(1) வது வார்டு: 87 , (2) வது வார்டு:59 (3) வது வார்டு:4 (4) வது வார்டு:11 (5) வது வார்டு:9 (6) வது வார்டு:1 (7) வது வார்டு:1 (8) வது வார்டு:0(9) வது வார்டு:0 (10) வது வார்டு:39 (11) வது வார்டு:123 (12) வது வார்டு:4 (13) வது வார்டு:6 (14) வது வார்டு:46 (15) வது வார்டு:2 (16) வது வார்டு:0 (17) வது வார்டு:36 (18) வது வார்டு:65
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(12) சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.ஹாரூன், அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:163
(1) வது வார்டு: 8 , (2) வது வார்டு:36 (3) வது வார்டு:87 (4) வது வார்டு:8 (5) வது வார்டு:1 (6) வது வார்டு:10 (7) வது வார்டு:13 (8) வது வார்டு:6(9) வது வார்டு:9 (10) வது வார்டு:12 (11) வது வார்டு:9 (12) வது வார்டு:1 (13) வது வார்டு:50 (14) வது வார்டு:1 (15) வது வார்டு:6 (16) வது வார்டு:2 (17) வது வார்டு:8 (18) வது வார்டு:8
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

(13) சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.ஹாஜா மைதீன் , அவர்கள் 1 முதல் 18 வரையான அனைத்து வார்டுகலிலும் தான் பெற்ற வாக்குகளின் விபரம்:மொத்த வாக்கு:102
(1) வது வார்டு: 6 , (2) வது வார்டு:4 (3) வது வார்டு:2 (4) வது வார்டு:3 (5) வது வார்டு:2 (6) வது வார்டு:3 (7) வது வார்டு:11 (8) வது வார்டு:5(9) வது வார்டு:6 (10) வது வார்டு:13 (11) வது வார்டு:8 (12) வது வார்டு:1 (13) வது வார்டு:10 (14) வது வார்டு:4 (15) வது வார்டு:6 (16) வது வார்டு:5 (17) வது வார்டு:13 (18) வது வார்டு:3
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டை உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட 18 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி: ஒரு பார்வை!


முத்துப்பேட்டை, அக்டோபர் 22 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ௧ முதல் ௧௮ வார்டு வரை போட்டியிட்ட வேட்பாளர்களின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக இடத்தை அ.தி.மு.க. கட்சி பெற்றுள்ளது. அதில் அ.தி.மு.க. 6 , தி.மு.க. 4 , சுயேச்சை 3 , எஸ்.டி.பி.ஐ. 2 ,பி.ஜெ.பி.1, ம.தி.மு.க. 1 , காங்கிரஸ். 1 ,ஆகிய கட்சிகள் அனைத்து வார்டுகலிலும் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளன.

1 முதல் 18 வெற்றி பெற்ற வேட்பாளரின் விபரம்:

1 வது வார்டு BJP . மாரிமுத்து - 345
2 வது வார்டு ADMK . தீபா - 219
3 வது வார்டு ADMK . அப்துல் வஹாப் - 310
4 வது வார்டு ADMK அய்யாப்பன் - 188
5 வது வார்டு ADMK . சந்திரா - 336
6 வது வார்டு DMK . ஜெய்புநிஷா - 164
7 வது வார்டு SELF . ஜபருல்லாஹ் - 337
8 வது வார்டு SDPI . பஜாரியா அம்மாள் - 224
9 வது வார்டு SDPI . பாவா பகுருதீன் - 316
10 வது வார்டு SELF . கிருஷ்ணன் - 198
11 வது வார்டு DMK . ரேத்தினகுமார் - 236
12 வது வார்டு ADMK . சேவியர் - 254
13 வது வார்டு ADMK . நாசர் - 237
14 வது வார்டு ADMK . பாக்கிய லட்சிமி - 228
15 வது வார்டு சுயேச்சை. தம்பி மறைகையர் - 159
16 வது வார்டு காங்கிரஸ். ஆதம் மாலிக் - 182
17 வது வார்டு DMK . செல்வி - 274
18 வது வார்டு MDMK மதியழகன் - 99

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS.அப்துல் பாரி ,EK.முனவ்வர் கான்

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அ.தி.மு.க.




முத்துப்பேட்டை,அக்டோபர் 21 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க.வின் வேட்பாளர் திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் 2328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து SDPI யின் வேட்பாளர். அபூபக்கர் சித்திக் அவர்கள் 1926 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார், இதனைத் தொடர்ந்து DMK யின் வேட்பாளர். தமீம் அவர்கள் 1491 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிஜேபி யின் வேட்பாளர் திரு.சிவக்குமார் அவர்கள் 1332 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் பின்பு வெற்றி பெற்று தனது கட்சியாலருடன் முன்னகை முகத்துடன் வெளியில் வந்த காட்சி இதோ
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டை வாக்கு எண்ணிக்கை இன்னும் சில மணி நேரத்தில்!!!


முத்துப்பேட்டை, அக்டோபர் 21: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் திருவாரூர் மாவட்டம் நோக்கி புறப்பட்டு கொண்டு இருகிறார்கள். இவர்கள் யாவரும் இந்திய நேரம் சரியாக 8 மணியளவில் திருவாரூர் மாவட்டத்தை அடைந்துவிட வேண்டும். சரியாக 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். அதில் 1 வது வார்டு முதல் 18 வார்டுவரை எண்ணுவார்கள்.
குறிப்பு
1 வது வார்டை எடுத்துக் கொண்டால் அதில் தலைவர் மற்றும் கவுன்சிலர் அந்த முறையில் எண்ணப்படும்.

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

மவுத்து அறிவிப்பு:"லே.மு.மு. முஹம்மத் ஜான்"


முத்துபேட்டை, அக்டோபர் 19 : பட்டுக்கோட்டை ரோடு மர்ஹும் LMM .முஹைதீன் பக்கீர் அவர்களின் மகனும், சின்ன கட்சி மரைக்காயர் தெரு மர்ஹும் மூ.ஆ.சே. அப்துல் காசிம் அவர்களின் மருமகனும், அந்தமான் நே. மு.மு. அப்துல் லத்திப், மர்ஹும் நே. மு.மு. ஜகபர் அலி ஆகியோரின் சகோதரரும், கமருள் ஜமால், முஹம்மத் முஹைதீன், அலி அக்கபர் ஆகியோரின் தகப்பனாரும் M .பசீர் அகமத் அவர்களின் மாமனாருமாகிய "லே.மு.மு. முஹம்மத் ஜான்" அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னாஹ் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).அன்னாரின் ஜனாசா இன்று 20.10.2011. மாலை 4 மணியளவில் கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்.

L .S .M .முஹம்மத் யூசுப் & சகோதரர்கள்

ஆர்.எஸ்.எஸ். தனது கிளைகலை ஐ.ஐ.டி,மற்றும் ஐ.ஐ.எம்.களில் விரிவாக்க திட்டம்!!!


மும்பை,அக்டோபர் 19 : ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பெரு நகரங்களில் தங்களுடைய அமைப்பை வேரூன்ற செய்வதற்காக முக்கிய நகரங்களுக்காக தனித்தனியே இணையத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நகரங்களிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரைவில் இணையதளங்களை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக தனது வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பிரசாரக்குகளாக பணிபுரிய இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பிரசாரக் என்றால் திருமணம் புரியாமல் வேறு எந்த பணிகளுக்கும் செல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இதற்கு பல இளைஞர்கள் விரும்பாததால் ஆர்.எஸ்.எஸ் தற்போது தன்னுடைய செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனி பிரச்சாரக்குகள் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அந்த அமைப்பிற்காக முழு நேர ஊழியர்களாக பணி புரிந்தால் போதுமானது என்றும் பிறகு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் பிரசாரக்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பணிகளை தொடர சமூக சேவை அமைப்புகள் என்ற முகமூடியில் நடத்தும் கிளைகளின் மூலம் பிரசாரக்குகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,அச்ன்ஸ்.அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை மண்ணை சாலையில் திடீர் தீ விபத்து!!!



முத்துபேட்டை,அக்டோபர் 19 : திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் மண்ணை சாலையில் வாக்கு என்னும் அருகாமையில் சின்ராஜ் என்பவரது இரும்பு கடை இருந்து வந்தது. இந்த கடையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயனைப்பு துறைக்கு தகவல் தெருவிக்கப்பட்டது அவர்கள் உடனே வந்து அத்தீயை அனைத்தனர்.அந்தகடை எரிந்து சாம்பலாயின. இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பார்,EK .முனவ்வர் கான்,AKL . அப்துல் ரஹ்மான்.

முத்துபேட்டையில் நடைபெற்ற வாக்கு விபரங்கள் 1 முதல் 18 வார்டு! ஒரு பார்வை!




முத்துப்பேட்டை, அக்டோபர் 18 : திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 1 முதல் 18 வரைக்கான வார்டுகளின் வாக்குப் பதிவுகள் பற்றிய தகவலை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று திருவாரூர் மாவட்டம் தேர்தல் ஆணையத்திடம் கேட்டறிந்த விபரங்கள் பின் வருமாறு. முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள மக்களின் மொத்த வாக்குகள் 13 ,183 ஆகும், இதில் ஆண்கள் தரப்பில் 3948 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், மேலும் பெண்கள் தரப்பில் 5197 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், மேலும் முத்துப்பேட்டையில் 9145 மொத்த ஓட்டுகள் 65 சதவீதம் பதிவாகி உள்ளதாகவும் தெருவித்தார். வார்டு வாரியான வோட்டுகளின் விபரம் பின் வருமாறு.

வார்டு வாரியான ஆண், பெண் ஒட்டு பதிவுகளின் விபரம்:

1 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 842 , அதில் ஆண்கள் தரப்பில்: 314 பெண்கள் தரப்பில்: 334 , மொத்தம் பதிவானவை: 648

2 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 779 , அதில் ஆண்கள் தரப்பில்: 209 பெண்கள் தரப்பில்: 325 , மொத்தம் பதிவானவை:534

3 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை:840, அதில் ஆண்கள் தரப்பில்: 264 பெண்கள் தரப்பில்: 344, மொத்தம் பதிவானவை:598

4 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 601, அதில் ஆண்கள் தரப்பில்:253 பெண்கள் தரப்பில்: 206, மொத்தம் பதிவானவை: 459

5 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 642, அதில் ஆண்கள் தரப்பில்: 202 பெண்கள் தரப்பில்: 244 , மொத்தம் பதிவானவை: 446

6 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 563, அதில் ஆண்கள் தரப்பில்: 126 பெண்கள் தரப்பில்: 169, மொத்தம் பதிவானவை: 295

7) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 886, அதில் ஆண்கள் தரப்பில்: 220 பெண்கள் தரப்பில்: 334, மொத்தம் பதிவானவை: 554

8 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை:626, அதில் ஆண்கள் தரப்பில்: 147 பெண்கள் தரப்பில்:239, மொத்தம் பதிவானவை: 386

9 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 789, அதில் ஆண்கள் தரப்பில்: 185 பெண்கள் தரப்பில்: 315 , மொத்தம் பதிவானவை: 500

10 ) வது வார்டு;
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 637, அதில் ஆண்கள் தரப்பில்: 227 பெண்கள் தரப்பில்: 247 , மொத்தம் பதிவானவை: 474

11 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 599, அதில் ஆண்கள் தரப்பில்: 128 பெண்கள் தரப்பில்: 259, மொத்தம் பதிவானவை: 387

12 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 856, அதில் ஆண்கள் தரப்பில்: 313 பெண்கள் தரப்பில்: 346 , மொத்தம் பதிவானவை: 659

13 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 1001, அதில் ஆண்கள் தரப்பில்: 255 பெண்கள் தரப்பில்: 404 , மொத்தம் பதிவானவை: 659

14) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 856, அதில் ஆண்கள் தரப்பில்: 313 பெண்கள் தரப்பில்: 346 , மொத்தம் பதிவானவை: 659

15 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை:599, அதில் ஆண்கள் தரப்பில்: 128 பெண்கள் தரப்பில்: 259 , மொத்தம் பதிவானவை: 387

16 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 572, அதில் ஆண்கள் தரப்பில்: 147 பெண்கள் தரப்பில்: 228, மொத்தம் பதிவானவை:375

17 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 889, அதில் ஆண்கள் தரப்பில்: 309 பெண்கள் தரப்பில்: 373, மொத்தம் பதிவானவை: 682

18 ) வது வார்டு:
மொத்த வாக்கின் எண்ணிக்கை: 606, அதில் ஆண்கள் தரப்பில்: 208 பெண்கள் தரப்பில்: 225, மொத்தம் பதிவானவை: 443
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை: பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களின் ஓட்டு ஒரு பார்வை!














முத்துப்பேட்டை,அக்டோபர் 18 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களும் மிக சிறப்பாக தனது வாக்குகளை பதிவு செய்தார்கள். முத்துப்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக 8 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் பேட்டை பள்ளி, மதியலன்காரம் பள்ளி, ஆ.நே.பள்ளி, புதுத்தெரு பள்ளி, யூனியன் அலுவலகம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செம்படவன் காடு பள்ளி, மருதன்காவெளி பள்ளி ஆகும். மேலும் அதில் 1 முதல் 18 வரைக்கான அந்தந்த வார்டுக்குரிய வாக்காளர்கள் மிகசிறப்பாக வாக்களித்துவிட்டு சென்றனர். மேலும் சென்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்று கணித்துவிட முடிந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களிடமும் நிலவி வருகிறது. வருகிற 22 .10 .2011 ஆம் தேதி அன்று வெற்றி வாய்ப்புகள் தெரியவரும். இதனால் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை கட்சி வேட்பாளர்களுக்கு மத்தியில் ஓர் பரபரப்பான சூழ்நிலையில்தான் காணப்படுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் யார் வெல்வார்கள் என்று?
www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)