முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தின் 20 ஆண்டுகால கனவு நினைவாகியும் அவல நிலை.








முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, மாவட்டத்தின் கடைக்கோடி ஊராகும், இந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் லகூன் எனும் தீவுகள் நிறைந்த அலையாத்தி காடுகள், முத்துப்பேட்டை தர்ஹா, மற்றும் கோவில்கள் என சுற்றுலா தளங்கள் நிறைந்த பகுதியாகும். இதுக்கு எடுத்துக் காட்டாக புதிய பேருந்து நிலையம் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் 1990 ல் கட்டி
திறக்கப்பட்டது என்றாலும் இன்னும் அதை புதிய பேருந்து நிலையம் என்று தான் அனைத்து மக்களாலும் அழைக்கப்படுகிறது. மேலும் இன்னும் முறையாக செயல் படாததால் ஒவ்வொரு ஆட்சிகாலத்திலும் ஒவ்வொரு வருடத்திலும் புதிப்பிக்கப்பட்டு இந்த பேருந்து நிலையத்தை நடைமுரைப்படுத்துவார்கள்.

சில நாட்கள், சில மாதங்கள் ஆனதும் பழைய குருடி கதவ திரடி என்ற பல மொழிக்கொப்ப மறுபடியும் பேருந்துகள் இங்கு வந்து செல்லாமல் இருந்தது. இதனால் புதிய பேருந்து வளாகம் அப்படியே வெறிச்சோடி போகிவிடும், மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும். இதுதான் இந்த புதிய பேருந்து நிலையத்தின் 20 வருட பரிதாப நிலையாகும். ஆனால் .தி.மு.. ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கம் போல் இந்த புதிய பேருந்து நிலையத்தை முறைபடுத்த எண்ணியபோது முத்துப்பேட்டை நகரத்தில் உள்ள பொது நல அமைப்புகள் சீரமைத்து போட்டால் பத்தாது என்றும், இவற்றை நிரந்தரமான நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு படி பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தை முழுமையாக சீரமைத்து, சில சகல வசதிகளுடன் சில மாதங்களுக்கு முன்பு புது பொலிவுடன் திறக்கப்பட்டது.

இதில் காவல்துறை, போக்குவரத்து துறை உதவியுடன் பேருந்துகளும் முறையாக உள்ளே வந்து சென்றது. இதன் மூலம் சுமார் இருபது ஆண்டுகால கனவு நனவாகியதை கண்டு பொது மக்களும், பயணிகளும் மற்றும் அப்பகுதி வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி அடைந்த சில மாதங்களில் மகிழ்ச்சியில் "இடி" விழுந்தது போல் பேருந்துகள் இங்கு சரிவர வராமல் போனதுடன் இதனால் பயணிகளின் கூட்டம் குறைந்தது. இதனால் பழைய நிலைக்கு பேருந்து நிலையம் திரும்பி விடுமோ என்ற கேள்விக்குறியில் உள்ளது.

மேலும் பேருந்து நிலையம் புதுபிக்கும் போது பெயரளவில் போடப்பட்ட சாலை கப்பிசாலையாக மாறி ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும் மேலும் சேரும், சகதிமாகவும் மாறி பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. பேருந்து நிலையத்துக்குள் வரும் பயணிகள், மற்றும் இரண்டு சக்கரத்தில் வருபவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள் இதனால் பயணிகள் பேருந்து நிலையத்தில் கூட்டம் மிக குறைவாகத்தான் காணப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம், மறைவாக இருப்பதால் பயணிகளுக்கு தெரியாத வகையில் அமைத்திருந்தாலும் அவற்றை பார்பதற்கு ஆட்கள் இல்லாததால் இலவசமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் மாற்று திறநாளிகளுக்கு கட்டப்பட்ட கழிப்பறையும் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தா.மு... நிருவாகயும் சமூக ஆர்வலருமான P. உலக நாதன் அவர்கள் கூறியதாவது, தமிழ் நாட்டில் எந்த ஒரு பேருந்து நிலையமும் முத்துப்பேட்டை பேருந்து நிலையம் போல் குண்டு குழியுமாக மிக மோசமான நிலையை காண முடியாது என்றும், 1990 ல் திறக்கப்பட்ட பின் பேருந்தே செல்லாமல் மோசமான நிலை உருவாகி உள்ளது என்றும், சென்ற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நலச்சங்கம் முயற்சியால் பஸ் மறியல் செய்து பேருந்து நிலையம் உயிர் பெற்று வரும் நிலையில் மழைக்காலம் தொடங்கி விட்டதால் சேரும் சகதியும், குண்டும், குழியுமாக காட்சி தருகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஓட்டுனர்கள் வேதனையுடன் பேருந்தை இயக்குவதுடன் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் பேரூராட்சி நிர்வாகம் இன்னும் நடவடிக்கை எடுக்காதது பேருந்து நிலையம் மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுமோ என்று மக்களுடன் நாங்களும் ஏங்குகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வர்த்தகக் கழக கெளரவ தலைவர் இரா. திருஞானம் அவர்கள் கூறியதாவது, பேருந்து நிலையம் நடைமுரைபடுத்தியத்தில் வியாபாரிகள் மிகுந்த சந்தோசம் அடைந்தார்கள் என்றும், அந்த பகுதியும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் எனவே இவற்றை பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து அவற்றை தக்க வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள் கூறியதாவது,

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை தர்ஹா டிரஸ்டி முதன்மை அரங்காவலர் S.S. பாக்கர் அலி அவர்கள் கூறியதாவது, தர்ஹா, லகூன் சிறப்பு மிக்க பகுதிகளின் சுற்றுலா தளமாக காணப்படும் இந்த ஊருக்கு அடையாள சின்னமாக இந்த பேருந்து நிலையம் காணப்படுகின்றன என்றும், தற்போதைய நிலைமையை காணும் பொது வரும் சுற்றுலா பயணிகள் கேவலமாக நினைக்கும் நிலமை உருவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் கோ.அரூனாச்சலம் அவர்கள் கூறியதாவது,

பேருந்து நிலையங்கள் இல்லாத எத்துணையோ ஊர்கள் இருக்கும் வேளையில் இருக்கின்ற இந்த பேருந்து நிலையத்தை நடைமுறையில் தக்க வைத்துக்கொள்வதுதான் புத்திசாலி தனம் ஆகும். சென்ற ஆட்சியில் இந்த நகரத்தை தனி தாலுக்காவாக அறிவித்து விரைவில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இதில் இந்த பேரூராட்சியை நகராட்சியாகவும் மாற்ற திட்டமும் பரிசீலனையில் இருக்கும் இந்த வேளையில் இந்த பேருந்து நிலையம் சுற்று புறமும் சிமெண்ட் சாலையாகவும் மாற்றி, சுற்று சுவரும் எழுப்பி சுற்றுப்புற காலி இடங்களில் வணிக வளாகமும் கட்டி வண்ண விளக்குகள் அமைத்து அலங்கரித்தால் இந்த ஊரின் பெருமை தமிழகம் முழுவதும் உள்ள சில கேவலமான பேரூராட்சிகள் நம்ம ஊரை ஓர் பாடமாக எடுத்துக் கொள்வார்கள். இதற்க்கு நிரந்தர் தீர்வு தான் என்ன என்று பொறுத்திருந்து பாப்போம்...
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com, www.muthupettaixpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முஹம்மது நபியை இழிவு படுத்திய யூத நாயை கண்டிக்க ஒன்றிணைந்த இஸ்லாமிய இயக்கங்கள்...







உலகம், செப்டம்பர் 16 : உலக முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் அல்லாஹ்வின் தூதர் முகம்மத்(ஸல்) அவர்களையும், அல்லாஹ் உலக மக்களுக்கு அருட்கொடையாக வழங்கிய இஸ்லாம் மார்க்கத்தையும் இழிவுபடுத்தி யூத பயங்கரவாதிகள் சினிமா எடுத்துள்ளனர்.

முஸ்லிம்களின் மனம் புண்படும்படியாக நீலப்படங்களில் நடிப்பவர்களைக் கொண்டு யூத பயங்கரவாதியால் இயக்கப்பட்டு அதனை முன்னோட்டமாக விட்டு உலக மக்களின் எதிர்ப்பை யூத பயங்கரவாதிகள் எதிர் கொண்டுள்ளனர். படத்தில் கிருத்துவர்களையும் இஸ்லாமியர்களையும் எதிரிகளாகக் காட்ட சில காட்சிகள் அமைக்கப்பட்டு முஸ்லிம்களின் மீது வெறுப்பைத் தூண்டும் அளவுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. கிருத்துவத்தின் தனித் தன்மையை இது போன்ற கதைகளைக் கொண்டு பைபிளையே மாற்றியமைத்து கிருத்துவத்தை ஒழித்துக் கட்டிய யூதன் ஜான் பால் போல அவ்வப்போது யூத பயங்கரவாதிகள் இஸ்லாத்தினை தீண்டுவது வழக்கமாக உள்ளது,

அமெரிக்காவைப் பொறுத்தவரை யூத பயங்கரவாதிகளே ஆட்சியை நிறுவுகின்றனர். தங்களுக்கு ஒத்து வராத அதிபர்கள் படுகொலை செய்யப்பட்டே இறந்துள்ளனர் என்பது உலகமறிந்த உண்மை. 90% சதவீத அமெரிக்க அதிபர்கள் படுகொலை செய்யப்பட்டே இறந்துள்ளனர் ஆனாலும் யூத பயங்கரவாதிகளிடம் உள்ள ஊடகங்கள் அமெரிக்க அதிபர்கள் தங்களால் படுகொலை செய்யப்படுவதை வெவ்வேறு நிழலில் மறைத்து அமேரிக்காவ கைக்குள் வைத்துக் கொண்டு உலகை மிரட்டுகின்றனர்.

வரும் தேர்தலில் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒபாமாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் யூத ஆதரவாளர்களுக்கும் ஒபாமாவுக்கும் ஒரே செல்வாக்கு தான் உள்ளது என்றாலும் ஒபாமாவிற்கு சில சதவீதம் கூடுதலான செல்வாக்கு உள்ளது. அமெரிக்க முஸ்லிம்கள் ஒபாமாவை முஸ்லிமாகவே கருதுவதால் அவர்களின் ஓட்டுக்கள் குறைவாகவே இருந்தாலும் ஒபாமாவிற்குத் தான் ஆதரவளிப்பார்கள்.

இந்நிலையில் இஸ்லாத்தை இழிந்துரைத்து உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள்(ஸல்) அவர்களை கேவலமாக சித்தரித்து படம் வெளியிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் யூதர்களின் ஆதரவை பெருக்கிக் கொள்ளும் நோக்கத்துடனும் யூத பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.ஒபாமா சினிமா எடுத்த யூத பயங்கரவாதியை இது வரை கண்டிக்காததும், லிபியாவிற்கு போர்க்கப்பல்களை அனுப்புவதும் தேர்தல் கருதப்படுகிறது. ஒபாமா இஸ்லாமியர்களுக்கு அதரவாக பேசிவிட்டால் நடுநிலை அமெரிக்க மக்கள் மனதும் திசை திரும்பிவிடும் என்பதால் ஒபாமாவிற்கு நெருக்கடி கொடுக்கவே யூத பயங்கரவாதம் மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது.

காவி பயங்கரவாதிகளால் பாபர் மசூதி வெடி வைத்து தரைமட்டமாக்கும் போது முஸ்லிம்கள் மீது பரிதாபம் ஏற்பட்டு விடக்கூடாது என்று காவி பயங்கரவாதிகளின் எடுபிடி தாவூத் இபுராஹிமினால் பம்பாய் வணிக வளாகத்தில் வெடி குண்டு வைத்து,பல்லாயிரம் கோடிகளை சுருட்டிய ஹர்ஷத் மேத்தாவின் கணக்கு வழக்குகள் அழிக்கப்பட்டு, முஸ்லிம்களை வெறி கொண்டவர்கள் போல் சித்தரித்து கலவரம் போன்று காவி பயங்கரவாத ஊடகங்களில் செய்தித் திணிப்பு செய்து, மணி இரத்னம் போன்ற பயங்கரவாதியைக் கொண்டு முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் காட்டி காவி பயங்கரவாதி பால்தாக்கரே மணி ரத்தினத்திற்கு விருது வழங்கியது நினைவிருக்கலாம்.காவி பயங்கரவாதிகள் பின்பற்றும் யூத பயங்கரவாதம் அமெரிக்க தேர்தலை ஒட்டி உலக முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி அவர்களது எதிர்ப்பை வெறி கொண்டவர்கள் போல் காட்டுவதற்கு இஸ்லாத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் யூத பயங்கரவாதி எழுதிய பைபிள்"பிட்" போல படம் எடுக்கப்பட்டுள்ளது.

இரட்டை கட்டிடத்தை யூத பயங்கரவாதிகள் தகர்த்த பிறகு முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் காட்டி வெற்றி கொண்டதாக என்னும் நேரத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பா கண்டத்திலும் பல்லாயிரக் கணக்கில் இஸலாம் தழுவநிர் என்பது குறிப்பிடத் தக்கது. தேர்தலை ஒட்டி யூத பயங்கரவாதிகளின் சின்னத் தனமான செயலால் அமெரிக்க மக்கள் மேலும் இஸ்லாம் தழுவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளடைவில் அமெரிக்கா " Islam republic of United States" என்ற நிலைக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலக முஸ்லிம்களின் உயீரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை மோசமாக சித்தரித்து படம் எடுத்ததையும், அதைக் கண்டிக்காத அமெரிக்க அரசையும் எதிர்த்து தமிழகத்தில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய முஸ்லிம் லீக், சுன்னத் அல் ஜமாஅத் ஆகிய அனைத்து இஸ்லாமிய அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டம்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.


மவுத்து அறிவிப்பு: "ஹபீபுல்லாஹ்"



முத்துப்பேட்டை, செப்டம்பர் 16 : தெற்குத் தெரு மர்ஹும் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது மைதீன் அவர்களின் மருமகனும், முஹம்மது அலியார், நெய்னா முஹம்மது, மர்ஹும் குத்புதீன் ஆகியோரின் மைத்துனரும், முஹம்மது பாரூக், பசீர் அஹமது, நெய்னா முஹம்மது ஆகியோரின் மச்சானும், முஹம்மது ரக்கீப், முஹம்மது ஆசிப் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹும் முத்து மரைக்காயர், துல்கர்னை ஆகோயோரின் சகோதரருமாகிய ஹபீபுல்லாஹ் அவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் துபையில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்).
source from: www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்

துல்கர்னை

திருமணச் செய்திகள்: H.இம்ரான்கான்.M sc,H.ஜாஸ்மின் M.sc






முத்துப்பேட்டை, செப்டம்பர் 16 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 27 , 15.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை புதுத் தெரு ஜனாப். E.K.M. ஹபீப் முஹம்மது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் H. இம்ரான்கான் M.sc, (UK), தஞ்சாவூர் மாவட்டம் செம்பியம் மாகாதேவிபட்டினம் (கட்டுமாவாடி) அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி H. ஜாஸ்மின் M.sc மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து கட்டுமாவாடி அஸ்ரப் அலி ஹுசைன் இமாம், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் உமர் முக்தார்

தொடர்புக்கு


முத்துப்பேட்டை, செப்டம்பர் 12: இந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து உள்ளங்களுக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு, கல்வி, வேலை வாய்ப்பு, உலகம், சமுதாயம், வளைகுடா, முத்துப்பேட்டை மவுத்து செய்திகள், திருமணச் செய்திகள் மற்றும் அனைத்து விதமான செய்தி, தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் இவையாவும் public.mttexpress@gmail.com  என்ற மின் அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு: 
அ. முஹம்மது இல்யாஸ். MBA. MA. (Journalism & Mass Communication)

முத்துப்பேட்டை பாமணி ஆற்றில் இந்துகளின் சிலை ஒன்றை போலீசார் மீட்டனர்...



முத்துப்பேட்டை, செப்டம்பர் 11: முத்துப்பேட்டை அடுத்து செம்படவன் காடு பாமணி ஆற்று பாலத்தின் கீழே சாமி சிலை ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த செய்தியை கேட்டு பின்னர் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் தனி பிரிவு காவலர் கோபால் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பார்வை இட்டனர். பின்னர் அங்குள்ள பொது மக்கள் உதவியுடன் ஆற்றில் உள்ள சிலையை தூக்கி கரையில் வைத்தனர். அப்போது மூன்று அடி உயரமான சிலை என்று தெரிய வந்தது. இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. இந்தனை அறிந்த முத்துப்பேட்டை வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம்,கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம், உதவியாளர்கள் கண்ணையன், சங்கர் ஆகியோர் அட்சிலையை கைப்பற்றி முத்துப்பேட்டை வி.ஏ.ஒ. அலுவலகத்தில் வைக்கப்பட்டனர்.

இந்த சிலையை பாலத்திற்கு மேற்புறத்திலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் ஏனெனில் அந்த சிலையில் பாசிபிடித்து காணப்படுகிறது. இந்த ஆற்றில் தண்ணீர் வற்றியதால் தான் இந்த சிலை கிடந்தது தெரியவந்தது. இதை தூக்கி வீசப்பட்டதின் காரணம் என்ன? இந்த சிலை ஐபோன் சிலை என்று திருடிவிட்டு பிறகு திருடன் இது கல் சிலைதான் என்று ஏமாந்த நிலையில் நள்ளிரவில் வந்து இதை ஆற்றில் வீசி விட்டு சென்றார்களா?

முத்துப்பேட்டை நகரில் அது போன்ற சிலையை யாரும் பார்க்கவில்லை என்றும் எந்த சிலைகளும் திருட்டு போக வில்லை என்றும் வேறு எங்கேயாவது திருடி வந்துள்ளது என்று பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் தெரிகிறது. இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பானது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)