முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நாகை காங்கிரஸ் வேட்பாளருக்கு வரவேற்பு. முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

முத்துப்பேட்டைக்கு நேற்று மாலை நாகை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செந்தில் பாண்டியன் வந்தார். அவருக்கு வட்டார நகர காங்கிரஸ் சார்பில் வட்டார நிர்வாகி காமராஜ், நகர தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, மாவட்ட முன்னால் பொது செயலாளர் பகுருதீன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், சட்ட மன்ற இளைஞர் சாங்கிரஸ் நிர்வாகிகள் முகைதீன், காந்தி நாராயணன், விவசாயி பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுந்தரராமன், நகர காங்கிரஸ் செயலாளர் ஜெகபர்அலி, நிர்வாகிகள் பேட்டை ராஜு, அஜ்மல் கான், பேட்டை கோபி, மாவட்ட செயற்குழு உருப்பினர் தினகரன் வட்டார காங்கிரஸ் உப்பூர் கோவன்னா, அய்யப்பன், அன்னாதுரை, சாமிநாதன், கண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பின்னர் வேட்பாளர் முத்துப்பேட்டை வட்டாரம் முழுவதும் ஒவ்வொறு கிராமத்தின் முக்கிய பிரமகர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். 

அதேப் போல் ஜாம்புவானோடை தர்ஹா சென்று அங்கு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொருப்பாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவருடன் திருவாரூர் சக்தி, திருத்துறைப்பூண்டி மதியரசு மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

முத்துப்பேட்டையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்படுமா?

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கடைத்தெரு பகுதியில் கடந்த 2 தினங்களாக சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்தரிகிறார். 

சிவப்புக் கலர் டாப்ஸ் கருப்பு பேண்ட் உள்ள சுடிதார் அணிந்திருக்கும் சிறுமி சமீபத்தில்தான் மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் தெரிகிறது. வெளிமாநில மொழி பேசுவதால் சிறுமி பேசுவது என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தின இரவு அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் மற்றும் சாலையில் செல்லும் காம வெறியர்கள் தங்களது காம பசிக்கு துரத்தியுள்ளனர். 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மீட்டு பாதுகாத்துள்ளனர். இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்நிலைத்திற்கும், வருவாய்த்துறைக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு ஒப்படைக்கவில்லை. இதனால் மீண்டும் சிறுமி அப்பகுதியை சுற்றி வருகிறார். சிறுமியின் பாதுகாப்பு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த சிறுமியை மீட்டு தக்க நேரத்தில் காப்பகத்தில் சம்மந்தபட்ட அதிகாரிகள் சேர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

முத்துப்பேட்டையில் ஆப்பிள் வியாபாரியின் பொது நல பார்வை !!

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை பகுதி பழக்கடைகளுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யபப்டுகிறது. 

ஒரு கிலோ 150 முதல் 220 வரை விற்கப்படும் ஆப்பிள்கள், விற்பனை கவர்ச்சிக்காக ஆப்பிள் மீது பாலிஸ் கொடுப்பது, தனித்தனியாக உறைகள் மாட்டுவது, ஸ்டிக்கர்கள் ஒட்டி பார்வையாக அமைப்பது போன்ற செயல்களில் ஆப்பிள் மொத்த வியாபாரிகள் செய்து வருகிறார்கள். 

ஆப்பிள் மீது பாலிஸ் கொடுக்கும் மெழுகுகள் உடலுக்கு கெடுதல் என்று உணராமல் மக்கள் ஆப்பிள்களை ஆசையுடன் சென்று அப்படியே கடித்து சாப்பிடுவதும,; சிலர் பெயரளவில் தண்ணீரில் நனைத்துவிட்டு சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பலவகை கெடுதல்கள் எற்படுவதை உணராமல் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். 


சமீபத்தில் நடந்த ஆய்வில் ஆப்பிள் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும,; பல்வேறு கெடுதல்கள் உடல் நலத்திற்கு ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

ஆனாலும் மக்கள் கடைகளில் கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதால் வேறு எந்தவொரு மாநிலத்திலும் விற்காத அளவிற்கு தமிழகத்தில் அதிக அளவில் விற்பனை ஆகுவதாக மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்ட் அருகில் பழக்கடை வைத்திருக்கும் பாலகுமார் என்பவர் கடையில் ஏகப்பட்ட பலவித ரகங்கள் கொண்ட ஆப்பிள்கள் குவிக்கப்பட்டுள்ளது. 



தினமும் அதிக அளவில் ஆப்பிள்களை விற்பனை செய்யும் பாலகுமார் ஒவ்வொரு முறையும் தான் கடையில் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆப்பிள் மீது பூசப்பட்டுள்ள மெழுகை கத்தியால் சுரண்டி காட்டி அதனை கெடுதலையும் உணர்த்துகிறார். மேலும் ஆப்பிள் சாப்பிடும்பொழுது இப்படி சுரண்டிவிட்டு சாப்பிடனும் என்றும,; அல்லது தோலை அகற்றிவிட்டு சாப்பிடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார். 

மக்களின் உடல் நலத்தில் மீது அக்கறை கொண்டு வியாபாரம் செய்யும் பாலகுமார் கடையில் ஆப்பிள் வாங்குவதற்கென மக்;கள் கூட்டமாக காணப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களும் பாலகுமாரை பாராட்டி செல்கிறார்கள்.

முத்துப்பேட்டையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் AKS .விஜயன் --பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !!

முத்துப்பேட்டையில் முக்கிய பிரமுகர்களை நாகை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் ஏ.கே.எஸ் விஜயன் சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் சென்ற விஜயன் அங்கு நகர தலைவர் நைனா முகம்மது, நகர செயலாளர் வக்கில் தீன்முகம்மது, தமுமுக ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் பைசல், நகர பொருளாளர் தாவூதுஷா, முன்னால் தலைவாகள்; துவான் அப்துல் ரஹ்மான், தாவூது மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். 



பின்னர் ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிக்கு சென்று தொழுகை முடிந்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் பிரிலியண்ட் பள்ளிக்கு சென்று முதல்வர் முகம்மது யாகூபை சந்தித்தார், முஸ்லிம் லிக் அலுவலகம் சென்று மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை, நிர்வாகி முகம்மது அலி, கவுன்சிலர் தம்பி மறைக்காயர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அப்பொழுது தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் நகர துணைச் செயலாளர் நவாஸ் கான்,மாவட்ட பிரதிநிதிகள் இபுராஹிம், மகாராஜா தமீம், நிர்வாகிகள் செல்வம், பாலு ஆகியோர் உடன் இருந்தனர். 

முத்துப்பேட்டை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முரண்பாடான பேச்சால் குழம்பி போன அதிமுக தொண்டர்கள். பரபரப்பு...

முத்தப்பேட்டையில் நேற்று முன்தினம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்பொழுது பேசிய தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து 'நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர்.கோபால் யாரென்று உங்களுக்கு தெரியுமா அவர் இந்த தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வேதையனின் மருமகன்தான் அதனால் நிச்சயம் வெற்றி பெறுவார்' என்று அறிமுகம் செய்து வைத்தார். 

இதனால் பேச்சைக் கேட்ட தொண்டர்கள் 'காங்கிரஸ் கட்சி நமக்கு எதிரணி ஏன் இவர் இந்த நேரத்தில் இப்படி சொல்றார்' என்று தொண்டர்கள் முனுமுனுத்தனர். அடுத்ததாக பேசிய அமைச்சர் காமராஜ் 'ஒன்றியச் செயலாளர் நடராஜன் பேசும்போது அதிக ஓட்டு வாங்கித்தரும் பொறுப்பாளர்களுக்கு ஒரு பவுன் என்றார். 

அதற்கு நான் 2 பவுன் தருகிறேன் என்றேன். இது தேர்தல் விதிமுறைக்கு ஒத்துவராது என்பதால் ஒன்றியச் செயலாளர் அந்த பவுனை வழங்குவார்' என்றார். மீண்டும் தொண்டர்கள் 'எப்படியெல்லாம் அமைச்சர் தப்பிக்க பாரக்கிறார் பார் இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்காமலா இருக்கிறார்கள்' என்று பேசிக் கொண்டனர். 

அடுத்ததாக பேசிய வேட்பாளர் கோபால் 'அமைச்சர் எனது வெற்றிக்காக அயராது பாடுபடுகிறார். இரண்டு தினங்களுக்கு முன் நன்னிலம் ஜமாத் பிரமுகர் பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது அவர்கள் அரசு மருத்துவமனையில் இரவில் டாக்டர்கள் இல்லை என்று கோரிக்கை விடுத்தனர். உடன் அமைச்சர் சுகாதாரத்துறை அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு இரவில் டாக்டரை உடன் நியமனம் செய்ய உத்தரவிட்டார். 

உடன் சுகாதாரத்துறை டாக்டர் ஒருவரை நியமனம் செய்தது அவர் என்று பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்' என்றார். தேர்தல் விதிமுறையை மீறி பேசிய வேட்பாளரின் இந்த தவலை கூட்டத்தை கண்காணிக்க வந்த தேர்தல் அலுவலர்கள் பதிவு செய்து கொண்டனர். இப்படி கூட்டத்தில் தலைவர்கள் பெரும் குழப்பத்துடன் பேசிய தலைவர்களால் அதிமுக தொண்டர்கள் பலரும் எரிச்சலடைந்து குழப்பத்தில காணப்பட்டனர். 

முத்துப்பேட்டை தெற்கு தெரு கோரையாற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு !!






முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை தெற்குத் தெரு அரபுசாகிப் பள்ளிவாசல் அருகில் உள்ள கோரையாறு வாய்க்காலில் நேற்று காலை பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதிக்கு காலை கடன் முடிக்கச் சென்ற ஒருசிலர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், பெர்னான்டஸ், ராமலிங்கம் கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உதவியோடு பிணம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 

அப்பொழுது நடத்திய விசாரணையில் முத்துப்பேட்டை சின்னக்கட்சி மரைக்காயர் தெருவைச் சேரந்த கமால் என்பவரது மகன் அன்சாரி என்கிற ஷேக் அப்துல்லா(27) என்று தெரிய வந்தது. ஷேக் அப்துல்லா நேற்று அதிகாலை காலைக்கடன் முடிப்பதற்காக கோரையாற்றுக்கு வந்து பிறகு கால் அலசுவதற்காக வாய்க்காலுக்குள் இறங்கியதில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. மேலும் ஷேக் அப்துல்லாவுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் நடுக்கம் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. முத்துப்பேட்டை போலிசார் ஷேக் அப்துல்லா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

எனது திருமணத்தில் அனைத்து நண்பர்களும் கலந்துகொள்ளுங்கள் ---- முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் A .முஹம்மது இலியாஸ் MBA .அழைப்பு !!!!


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1001120_653224951367944_1534064672_n.jpg




முத்துப்பேட்டை, மார்ச் 10: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் அவ்வல்  பிறை 14,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை முஹைதீன்  பள்ளிவாசல்  மதரசாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு:  A. முஹம்மது இலியாஸ். MBA.,MA. (Journalism & Mass Communication) 

மேலும் தொடர்புக்கு:


A. முஹம்மது இலியாஸ்


துபாய் தொடர்புக்கு: 00971 - 55 786 5516.

இந்தியா தொடர்புக்கு: 0091 - 98426 81426.  

முத்துப்பேட்டையில் பள்ளியின் முன்பு வாகனங்களை நிறுத்தாமல் இருக்க தலைமையாசிரியர் அதிரடி விளம்பர போர்டு.



முத்துப்பேட்டை, மார்ச் 10: பழைய பேருந்து நிலையத்தில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே காவல் நிலையம,; அரசு மருத்துவமனை, ரிஜிஸ்டர் ஆபிஸ் போன்றவைகள்  இருப்பதால் அலுவலகங்களுக்கு வருபவர்களும், மற்றும் அப்பகுதிக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் தங்களது வானங்களை பள்ளியின் முன்பு நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இது மாணவ மாணவிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் இடையூறாக தொடர்ந்து இருந்து வந்தன. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பலமுறை சம்பந்தப்பட்டவர்களை தடுத்தும் பயனில்லை. காவல் நிலையத்தில் புகார் கூறியும் யாரும் தங்களது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. வெறுத்துப்போன பள்ளி தலைமையசிரியர் ராமலிங்கம் நீங்கள் மிகவும் நல்லவர். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இரைடயூறாக தயவு செய்து இங்கே வாகனங்களை நிறுத்தாதீர் என்று ஒரு விளம்பர போர்டை பள்ளி முகப்பு கேட்டில் மாட்டி உள்ளார். அதன் பிறகு வாகனங்கள் நிறுத்துபவர்கள் இந்த பக்கம் வருவதில்லை. தினமும் பள்ளி திறக்கும் நேரத்தில் அந்த விளம்பர போர்டை மாட்டி விடுவதும் பிறகு பள்ளி நேரம் முடிந்ததும் எடுத்து பள்ளிக்குள் வைத்துக் கொள்ளும் நடைமுறையை பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது. 

FLASH NEWS :மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி : இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் :

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தங்களது வேட்பாளர் பெயர்களை அறிவித்துள்ளது  .



திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலைசிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகளும் ,புதிய தமிழகம்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ,மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன .



ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற சிதம்பரம் தொகுதியில்  விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவனும் ,தென்காசி தொகுதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிட உள்ளனர் .



இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, தங்களின் வேட்பாளரின் பெயர்களை இன்று அறிவித்தது .



அதன்படி, ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற அப்துல் ரஹ்மான்  வேலூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் KM .காதர் மொஹைதீன் சென்னையில் இன்று அறிவித்தார் .



அதேபோல் ,மனித நேயமக்கள் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் ,அக்கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி போட்டியிட உள்ளதாக ,அக்கட்சியின் தலைவர் ஜே .எஸ் .ரிபாயி சென்னையில் இன்று அறிவித்தார் .






முத்துப்பேட்டை சாலை ஓரத்தில் ஆண் உடல் ! விபத்தா ? அல்லது அடித்து கொலையா ? போலீசார் விசாரனை !

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை, படித்துறை அருகே சாலை ஓர வாய்க்காலில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். 

உடன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப-;இன்ஸ்பெக்டர் சாமிநாதன், வருவாய் ஆய்வாளர் ராமசந்திரன், வி.ஏ.ஓ ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.
 அப்பொழுது கருப்பு சட்டை கைலி அணிந்து கிடந்த உடல் அருகே சால்வையும் அவரது செல் போனும் கிடந்ததை வைத்து விசாரித்ததில் அவர் வேதாரன்யம் தாலுக்கா, தென்னடார் நடுக்காடு, கிராமத்தை சேர்ந்த செவந்தான் மகன் சுப்பிரமணியன்(43) என்று தெரிந்தது. 


சுப்பிரமணியன் ஆலங்காடு பகுதியில் ஒரு துக்க வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்ததாக கூறப்படுகிறது. துக்க வீட்டிற்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்றபோது அடயாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? அல்லது யாரும் அடித்து கொன்று விட்டார்களா ? என்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர்.

FLASH NEWS : ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சைபாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிரை உமர்தம்பி அறிவிக்கபட்டார் !!!! உமர்தம்பிக்கு முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் வாழ்த்து !!!



தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி  சார்பாக அதிரையை சேர்ந்த உமர்தம்பி போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மியின் தலைமை அறிவித்துள்ளது .

கடந்த இரண்டு நாட்களுக்குமுன் நடந்த நேர்காணலின் பொழுது தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்பியவர்களிடம் ஆம் ஆத்மி தலைமை நேர்காணல் நடத்தியது இதில் கலந்து கொண்டவர்களில் தகுத்தியில் அடிப்படையில் இவரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது .

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பெண்களுக்கான வாராந்திர பயான்-- ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர் !!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2014 அன்று வாரந்திர பெண்கள் பயான் தமானியா தோப்பில் உள்ள சகோதரர் சமது அவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது






பெண்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு வெளியே பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்து சொற்பொழிவு நடத்தப்பட்டது பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்

அதில் சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் இதோடு பல சிறுமிகளும் ஆர்வத்துடன் உரைநிகழ்த்தினார்கள்

இதில் கிருஸ்த்துவ மதத்தை சேர்ந்த பழனி அவர்களின் மகள் காயத்திரி அவர்கள் தானாக முன்வந்து நான் இதுவரை அறிந்த இஸ்லாத்தை பற்றிகூறுகிறேன் என்று மேடையில் ஏறி மிக அருமையாக இஸ்லாத்தை பற்றி விளக்கிகூறினார்

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் 10–ந்தேதி அறிவிப்பு--மீண்டும் களத்தில் இரக்கபடுவாரா தமீமுன் அன்சாரி ?



சென்னை, மார்ச். 6–
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறது.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் வருகிற 10–ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் அந்த கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது.
கடந்த பாராளு மன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் தனித்து போட்டியிட்டது. இதனால் அந்த கட்சி இந்த முறையும் அதே தொகுதியை தேர்வு செய்துள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பாரதிமோகன் போட்டியிடுகிறார்.

முஸ்லீம் லீக்கிற்கு வேலூர் --முத்துபேட்டை அப்துல் ரஹ்மான் MP மீண்டும் போட்டியா?

வேலூர், மார்ச்.6–
வேலூர் தொகுதியில் மீண்டும் அப்துல் ரகுமான் போட்டி?வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக அப்துல்ரகுமான் எம்.பி. மீண்டும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
தி.மு.க. கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்க தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து ஒப்பந்த அறிக்கையில் கருணாநிதி முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கையெழுத்திட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் வேலூர் தொகுதியில் ஏற்கனவே காதர் மொய்தீன், அப்துல் ரகுமான் ஆகியோர் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றுள்ளனர். 3வது முறையாக அக்கட்சி வேலூர் தொகுதியில் களத்தில் இறங்கியுள்ளது.
கட்சியில் வேட்பாளர் தேர்வு மும்முரமாக நடக்கிறது. கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு அவர் போட்டியிட சாத்தியமில்லை எனக் கூறுகின்றனர்.
இதனால் அப்துல் ரகுமான் எம்.பி. மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளூர் பிரமுகர்கள் தொடர்பு, வேலூர் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிந்தவர் அப்துல்ரகுமான், மேலும் அவரது சாதனைகளை கூறி ஓட்டு கேட்டால் எளிதில் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என கட்சி மேலிடம் கருதுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 8ந் தேதி நடக்கிறது. இதில் வேலூர் தொகுதி வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அப்துல் ரகுமான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓட்டு விவரம் வருமாறு:–

அப்துல் ரகுமான் – 3,60,474, எல்.கே.எம்.பி.வாசு (அ.தி.மு.க.) – 2,53,081, சவுகத் செரீப் (தே.மு.தி.க.) – 62,696, ஏ.கே.ராஜேந்திரன் (பா.ஜ.க.) – 11,184.

5 தொகுதிகளை கேட்டு அடம் பிடித்த திருமாவளவன் --2 தொகுதிகளை கொடுத்து விசுவாசத்தை நிரூபித்த கருணாநிதி !!

சென்னை, மார்ச். 6–
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5 தொகுதிகள் கேட்டு கடிதம் கொடுத்திருந்தார்.


இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அப்போது சிதம்பரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 5 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தினார்.

ஆனால் 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் திருமாவளவன் சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகளையாவது ஒதுக்கி தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த தொடங்கினார். இதனால் நேற்று உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலை ஏற்பட்டது. எந்த முடிவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த திருமாவளவன் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.

இதன் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமாவளவனுடன் இரவில் போனில் பேசியதாக தெரிகிறது. இதில் 2 தொகுதிகளை பெற திருமாவளவன் சம்மதித்து விட்டார்.
அவருக்கு சிதம்பரம், திருவள்ளூர், தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று அறிவாலயத்தில் இதற்கான உடன்பாடு ஏற்படுகிறது.

முஸ்லீம்களுக்கு மீண்டும் இதய சிறை --மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒரு தொகுதி --இஸ்லாமியர்களை இளிச்சவாயர்களாக பார்க்க விரும்பும் கருணாநிதி !!

சென்னை, மார்ச்.5–
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடு துறை, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொகுதி பங்கீடு: கூட்டணி தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை

LAST UPDATED ( TUESDAY, 04 MARC


விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
2–வது நாளான இன்று தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கலிபூங்குன்றன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து மற்றும் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தொகுதி பங்கீட்டை உறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆண்மைக்குறைவும் -அதனை முறியடிக்கும் முறைகளும் !!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல் !! ஆண்கள் anaivarum கட்டாயம் படியுங்கள் !! +18

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.
விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.
ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.
ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

குஜராத் கலவர வேட்டைக்காரன் மோச்சியும்-உயிர்பிச்சை கேட்ட அன்சாரியும் ஒரே மேடையில் தோன்றிய அதிசயம்-- கேராளாவில் நிகழ்ந்த அபூர்வம் !!

2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரேமேடையில் தோன்றினார்கள்.
PEACE NOW: Qutubuddin Ansari (right) and Ashok Mochi, two faces of the 2002 Gujarat violence, at a function at Taliparamba in Kannur on Monday.
சங்க்பரிவார வெறியர்களுக்கு முன்னால் உயிர் பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடது கையில் சூலமும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் சங்க்பரிவார ஹிம்சையின் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்கள்.
பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் “இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்” என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
முஸ்லிம் இனப்படுகொலையின் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி மனம் வெதும்பி இறுதியில் சங்க்பரிவாரத்தின் துவேச அரசியலுக்கு எதிராக குரல் எழுப்ப முதன் முதலாக மேடையில் தோன்றியுள்ளார்.
வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் அபூர்வமான காட்சியை காண ஏராளமானோர் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
கலவரத்தின் அக்னிக்கு பதிலாக நேற்று அன்ஸாரிக்கு, மோச்சி சுகந்தம் மிகுந்த ரோஜாப்பூவை வழங்கினார். அன்றும், இன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் மோச்சி, செலவுகள் தாங்க முடியாததால் திருமணம் கூட செய்யாமல் இருக்கிறார். அவருடைய முகத்தில் பழைய கொடூரம் இன்று இல்லை. புன்சிரிப்புடன் காணப்பட்டார். மோச்சியின் வார்த்தைகளில் அன்பு கலந்திருந்தது. மனிதநேயத்தை விளக்க எந்த மொழியும் தடையில்லை என்று கூறி அன்ஸாரியை கட்டி அனைத்து மோச்சி கூறினார்.
மோச்சி மேலும் கூறும்போது; ‘இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும். இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையால் விழிப்புணர்வு பெற்ற நான் அதன் பிறகு யாருக்கும் வாக்கு அளிக்கவில்லை. எனது மனதில் உள்ள எதிர்ப்பை நான் தெரிவித்தேன். நான் என்னையே கொள்ளையடித்தேன். இனியாவது எனக்கு அதில் இருந்து விடுதலை வேண்டும்.’ என உரக்கக் கூறினார்.
குத்புதீன் அன்ஸாரி பேசும்போது; ‘இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும். கேரளாவின் அன்பு தாங்கமுடியாமல் தவிக்கிறேன். குஜராத் இன்று அமைதியாக உள்ளது. காரணம், மோடி பிரதமராக துடிப்பதே. வளர்ச்சியின் மந்திரங்களை அவர் கட்டவிழ்த்து விடுகிறார். அவ்வாறு குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் எனது மாநிலத்தவரான அசோக் மோச்சிக்கு செருப்பு தைத்து பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா?’ என்று கேள்வி எழுப்பிய அன்ஸாரி தனது உரையில் குஜராத் மோடியின் வளர்ச்சி என்ற மாயையை தோலுத்துக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஸஈத் ரூமி எழுதிய ‘நான் குத்புதீன் அன்ஸாரி’ என்ற சுய சரிதை நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு இடதுசாரி ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வேலூர் கிடைக்காத விரக்த்தியில் முஸ்லீம் லீக் -நெல்லையை நோக்கி நகர்கிறது பிறைகொடி -ராமநாதபுரம் மற்றும் திருச்சி தொகுதிகளை கேட்டு பச்சைக்கொடி விடாப்பிடி !!

சென்னை, மார்ச், 4–
இன்று நடந்த தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டனர். ஏற்கனவே 2 முறை அந்த தொகுதியை கொடுத்து இருப்பதால் இந்த முறை ராமநாதபுரத்தில் போட்டியிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதை முஸ்லிம் லீக் ஏற்கவில்லை.

இதையடுத்து திண்டுக்கல் தொகுதியையும் ஏற்கவில்லை. திருச்சியை கேட்டனர். அங்கு மாநாடு நடத்தியதால் விட்டுக்கொடுக்க தி.மு.க. விரும்பவில்லை என்று தெரிகிறது. பின்னர், நெல்லை தொகுதியை ஒதுக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, புதிய தமிழகம் கட்சி தென்காசியும், மனிதநேய கட்சிக்கு மயிலாடுதுறையும் ஒதுக்கப்படலாம் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி -மகிழ்ச்சியளிக்கவில்லை என காதர் மொஹைதீன் பேட்டி!!

சென்னை, மார்ச். 4–
தி.மு.க. நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. 40 தொகுதிகளுக்கு நடந்த நேர்காணலுக்கு 300 பெண்கள் உள்பட 1,500 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 887 பேர் நேரில் பங்கேற்றனர்.
நேற்று வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடந்தது. இது வரை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடத்திய நேர்காணலுக்கு வந்தவர்களின் தகுதி அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியல் தயார் ஆகி வருகிறது.
Prof. Kader Mohideen, president of the Indian Union Muslim League, confirmed that his party had received an invitation for talks. File Photo

நேர்காணலையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரை சாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன. இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவாலயத்திற்கு தனித்தனியாக வந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாநில தலைவர் காதர் மொய்தீன், பொது செயலாளர் அபுபக்கர், பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலேசனைக்குப்பின் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவாவது:–

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறது. இந்த முறை சிறுபான்மையினருக்கு 4 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் ஒரு தொகுதி ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். இதில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொண்டோம். வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, நெல்லை, திருச்சி ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறோம்.
இதில் எந்த தொகுதி என்பதை இன்று இரவு 7 மணிக்கு தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை எங்கள் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த சின்னத்தில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

11.30 மணிக்கு விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. கட்சித்தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 12.30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மாலையில் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நாளை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கூடி தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி; எந்த கட்சிக்கு என்ன தொகுதி என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)