முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் -இந்து சகோதரர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் !!

 அனைவருக்கும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சென்றடையும் நோக்கில் முத்துப்பேட்டை சந்தைமுழுவதும் மற்றும் முத்துப்பேட்டை கடைவீதி ,பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.



உவைசியுடன் கைகோர்க்கும் தடா .ரஹீம் --இந்திய தேசிய லீக் கட்சி கலைப்பு!!

இந்திய தேசிய லீக் பார்ட்டி "ஆல் இந்தியா மஜ்லிஸ் எ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி " யாக மாற்றப்படுகிறது..!

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் .தடா ஜெ.அப்துல் ரஹிம் ,மௌலவி அலீம் அல்புஹாரி, ஏர்வாடி காசிம், அலி அப்துல்லாஹ் ,மதுரை அலி உள்ளிட்ட INLP -னர் 

ஹைதராபாத் - தாருஸ்ஸலாம் சென்று AIMIM இன் "அக்பருத்தீன் உவைசி " அவர்களை சந்தித்தனர்..! 

தமிழகத்தில் இயங்கும் தங்களின் அமைப்பான இந்திய தேசிய லீக் பார்ட்டி ஐ கலைத்து விட்டு "ஆல் இந்தியா மஜ்லிஸ் எ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி " யாக மாற்றிவிடுகிறோம் என்று உறுதி அளித்துள்ளதாக தாருஸ் ஸலாம் செய்திகள் தெரிவிக்கின்றன .


யுவன் ஷங்கர் ராஜாவை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் - கொந்தளிக்கும் பவதாரணி!!

கடந்த சில நாட்களாகவே யுவன் ஷங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணம் பற்றிய செய்திகள் வலைதளங்களில் உலாவி வருகின்றன. ஆனால் இந்த செய்திகள் குறித்து இதுவரை யுவன் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை
.
இந்நிலையில் யுவனின் சகோதரியும், பாடகியுமான பவதாரிணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ஆமாம் என்னுடைய சகோதரர் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார். நான், கார்த்திக் ராஜா, அப்பா அனைவருமே யுவனின் அந்த முடிவை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
அதேபோல் அவர் மூன்றாவது திருமணம் செய்ய இருக்கிறார். ஏனென்றால் அவர் செய்து கொண்ட இரண்டு திருமணங்களும் ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் அவருக்கு ஒத்து வரவில்லை. யுவனுக்கு குழந்தைகளும் இல்லை, யாரையும் அவர் ஏமாற்றவும் இல்லை. அவர் குடிப்பதோ, புகைப்பதோ கிடையாது.
15 வயதிலிருந்தே இசையமைத்துக் கொண்டிருக்கும் யுவன், எப்போதும் அப்பாவின் இசையைப் பின் பற்றியதே கிடையாது. அவருக்கென தனியாக ஒரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டு, அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் இப்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக இருக்கிறார்.
அவருடைய குடும்ப உறுப்பினர்களாலேயே யுவன் விமர்சிக்கப்படுவதைப் பார்க்கும்போது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. அவர் தன்னை நிரூபித்திருக்கிறார், இனிமேலும் நிரூபிப்பார், தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருப்பார். எல்லாவற்றையும் விட மனிதமே முக்கியமானது. யுவன் நல்ல மனிதரே!’’ என்று டுவிட் செய்துள்ளார்.

முத்துப்பேட்டையில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா -பைத்துல்மாலின் பாராட்டத்தக்க சீரிய முயற்சி !!

முத்துப்பேட்டையில் எதிர்வரும் 31-10-2014 வெள்ளியன்று முத்துப்பேட்டை பைத்துல் மாலின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது 



.கொய்யா மஹாலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் அனைத்து முஹல்லாவை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் ,மருத்துவ பெருமக்கள் ,இந்து கிறிஸ்தவ பெரியோர்கள் ,காவல்துறை அதிகாரிகள் ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் .


 முத்துப்பேட்டை பைத்துல்மாலின் நிர்வாகிகளான மீரா உசேன் ,இல்முல்லா சனுபர்,சலீம் ,நைனா முஹம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் .

முத்துப்பேட்டையில் TNTJ நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் !!!













முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த 19-10-2014 அன்று மாற்று மதத்தவருக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தியது .

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு மாற்று மத சகோதரர்கள் எழுப்பிய இஸ்லாம் சம்பந்தப்பட்ட  பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் .

இதில் ஏராளமான இந்து சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கேள்விகளை முன்வைத்தனர் ,இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நகர நிர்வாகிகள் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

முத்துப்பேட்டையில் இஸ்லாமிய சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல் -மனித மிருகங்களின் கோர தாண்டவம் !!!

முத்துப்பேட்டை அருகே துளசியாப்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது அசாலின் .இவரது இளைய மகன் அப்துல் ரவூப் .வயது 12.இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயின்று வருகிறார் .

இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான துளசியாப்பட்டினத்திளிருந்து முத்துப்பேட்டைக்கு வருவதற்காக பேரூந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார் .அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு அந்த வாகனத்தில் இருவரும் வந்துள்ளனர் .

தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று இவர்கள் இருவரையும் வழிமறித்து தங்களது கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாள் ,இரும்பு குழாய் ,கத்தி ,போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு மூர்கத்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் .

காட்டுமிராண்டிகளின் கொடூர தாக்குதலில் சிறுவன் அப்துல் ரவூபின் மண்டை இரண்டாக பிளந்துள்ளது .மண்டையில் பலத்த காயம் அடைந்த அப்துல் ரவூப்  என்கிற சிறுவன் சம்பவ இடத்திலேயே சுய நினைவின்றி மயங்கி விழுந்துள்ளார் .



இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளனர் .பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிருக்கு போராடிகொண்டிருந்த சிறுவனை முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் .



பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவன் அப்துல் ரவூபை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .அங்கு சிறுவன் அப்துல் ரவூபுக்கு தலை அறுவைசிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர் .



தஞ்சையில் இருக்கும்  நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் ஆசிரியர் ஜே .ஷேக்பரீத் அவர்கள் இச்சம்பவத்தை அறிந்தவுடன் உடனடியாக சிறுவன் அப்துல் ரவூப் அனுமதிக்கப்பட்டுள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார் .சிறுவனின் நிலை குறித்தும்  மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார் .பின்னர் அங்கு இருந்தசிறுவனின் குடும்பத்தாரிடமும் ஆறுதல் கூறினார் .

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு சவுதி அரசு பாராட்டு!!!

இன்று ஹஜ் சங்கமம் நிறைவு !








உலக முழுவதும் ஹஜ் கடமையை நிறைவேற்ற 20 லட்ச இஸ்லாமியர் மக்காவுக்கு வருகை தந்தார்கள் . 

இவர்கள் அனைவரும் ஹஜ்கடமையை நிறைவேற்ற மினா அரபா முஸ்தலிபா

போன்ற இடங்களுக்கு ஒட்டுமொத்த ஹாஜிகளும் ஓன்று கூடுவார்கள் . 


இந்த இடங்களில் ஹாஜிகளுக்கு வழிதடங்கள் தடுமற்றம் , மற்றும் உடல் நிலை 

பாதிக்கப்பட்ட ஹாஜிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்தியா உள்ள இஸ்லாமிய 

அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா,முஸ்லிம் லீக் , தமுமுக , கேரளா 

சார்ந்த ஏ பி முஸ்லியார் அவர்களின் ஜமாத் ,கேரளா முஜாதீன் ஜமாத் , ஆகியோர் 

உறுப்பினர்கள்.

 ஐந்து நாட்கள் முழ நேரம் ஒய்வுயில்லாமல் ஹாஜிகளுக்கு உதவி செய்தார்கள் இதை

 பார்த்த சவுதி  ஹஜ் அமைச்சகம் அந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கு  நன்றி தொிவித்து உள்ளனர் .

ரஞ்சிதாவை தொடர்ந்து நயந்தாராவையும் துரத்தும் நித்தியானந்தா ?

நடிகை நயன்தாரா மன அமைதி பெறுவதற்காக தமது ஆசிரமத்துக்கு வருமாறு நித்யானந்தா ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாம்.


ஏற்கனவே நயன்தாரா காதல் விஷயங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவருக்கு முதல் காதல் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது காதலும் கைகூடவில்லை. இதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.

கதாநாயகர்கள் சிலர் இவருடன் நெருக்கமாக நட்பு வைத்துக்கொள்ள நெருங்கியும் அவர் பிடிகொடுக்கவில்லை. முழு கவனமும் சினிமாவிலேயே இருக்கிறது. நிறைய படங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஏமாற்றங்களால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவுக்கு மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்கு வந்து மன அமைதி பெறுங்கள் என்று அழைத்துள்ளனர்.

நயன்தாரா கிறிஸ்தவராக இருந்தாலும் காதலுக்காக இந்து மதத்துக்கு மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நித்யானந்தா ஆசிரம பக்தர்களின் அழைப்பை நயன்தாரா இதுவரை ஏற்கவில்லையாம்.

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் நடத்திய திடல் தொழுகை !!






 தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை புதுதெரு ASN திடலில் சரியாக 7.30 மனியளவில் நடைபெற்றது
நபிவழியில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுகவேண்டும் என்பதை அதிகமான மக்கள் விளங்கிவருவதால் மக்கள் கூட்டம் வருடா வருடம் அதிகரித்து வருகிரது
சுன்னத்தான முறையில் வனக்க வழிபாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மிக தெளிவாக புரிந்து கொண்டதால் பக்கத்தில் ஏசி வசதியோடு பள்ளிவாசல்கள் இருந்தும் காலையில் இருந்தே மைக் மூலம் அழைத்தும் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தவ்ஹித்ஜமாத் நடத்தும் திடல் தொழுகைக்கு சாரைசாரையாக வந்து குவிந்தனர்
தாயி ராஜிதீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் தெளிவாகவும் சுருக்கமாகவும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ் அதேபோல் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை ரஹ்மத் நகர் நடுமில் திடலில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் திருத்துறைப்பூண்டி மாலிக் அவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை பற்றி எடுத்துரைத்தார். ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர்


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)