முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்க்குரியது-இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் ஷிப்லி கண்டனம் !!

இந்திய செவிலியர்களை பத்திரமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் திருப்பி அனுப்பியதற்க்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சின்னம் பொறித்த பனியன் போட்ட விவகாரம்,கோவையில் மதகுரு உள்பட ஆறு பேரை பொய் வழக்கில் கைது செய்து இருப்பது,விசாரணை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்து அனுப்புவது,இது போன்ற காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்க்குரியது.

காவல்துறையிலுள்ள ஒரு சில அதிகாரிகளின் இது போன்ற செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையும் களங்கத்தை சுமந்து நிற்கிறது.வரம்புமீறும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பை பெறும் துறையாக,காவல்துறையை தமிழக அரசு மாற்ற வேண்டும். காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொள்ள தவறினால் அவரது ஆட்சிக்கு இத்தகைய செயல்கள் மிகப்பெரிய இழப்பை தேடி தரும் என்பதில் ஐயமில்லை

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)