முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தர்ஹா அருகே ஓம் காளி-ஜெய் காளி :காளித்தனம் செய்த மூன்று பேர் கைது !!!

அக்டோபர் 24: முத்துப்பேட்டையில் இருந்து தில்லைவிளாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பள்ளியமேட்டை சேர்ந்த ராஜீவ் (வயது22) என்பவரும், தில்லைவிளாகத்தை சேர்ந்த கணபதி (வயது26) என்பவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியில் ஊர், பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த ஒரு வாலிபர் தில்லைவிளாகம் வரை அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார். இவர்களும் ஏற்றி கொண்டு போனார்கள். போகும் வழியில் உள்ள ஜாம்புவானோடை தர்ஹா உள்ளது. அங்கு சென்றவுடன் பெயர் தெரியாத வாலிபர் ஜெய்காளி, ஓம்காளி என்று சத்தம் போட்டாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தர்ஹாவை சேர்ந்த சேக்தாவூது(32) என்பவர் ஏன் இங்கு வந்து சத்தம் போடுகிறார் என்று கேட்டு கையால் அடித்தாராம். அந்த வாலிபர் ஒடிவிட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து சேக்தாவூது, ராஜீவ், கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து, திருத்துறைப்பூண்டி  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். தப்பியோடிய வாலிபரை தேடிவருகின்றனர்.

வீதியில் இறங்கி துப்புரவு பனி செய்யும் 6-வது வார்டு கவுன்சிலர்

இயற்கை வளமும் 
ஆறுகள்;; கடல்கள்..!! சூழ்ந்த நிலமும் 
தனதாக்கி கொண்ட பகுதிதான் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை..... 

அவ் பேரூராச்சிக்கு 6 வது வார்டின் கவ்ன்சிலராக இருப்பவர்தான் ஜகபருநிஷா பஹுருதீன்.....
இவரின் கணவர் அதிகாலை எழுந்து தனது
மனைவின் வார்டுக்குள் புகுந்து..!!!!!
இவரே துப்பரவு செய்வது..!!!!!
கழிவு நீர் குழாய்கள் சுத்தம் பண்ண
ஆட்களோடு நின்று கொண்டு பணி செய்வது
போன்ற பணிகளை செய்து வருகிறார் 

அவர் கூறும் போது நாம் மற்றவர்க்கும் பிறந்த இந்த பூமிக்கும் உதவி செய்திடவும் பிறந்தவர் என்பதை நினைவில் கொன்டாலே மண்ணுக்கும்.. மனிதனுக்கும்... உதவிட முடியும் அதனால் தான் 
எங்கள் பகுதில் சந்துகளில் உள்ள மண் சாலைகளை அதிகாலையிலே எழுந்து துப்புரவு செய்து விடுவது..!!!!!!
சிலர் என்னிடமே குப்பை பைகளை தருவார்கள் நானே அதனை சேமித்து பிறகு மாற்று இடத்திற்கு அனுப்பி வைப்பது எனது அன்றாட பணிகளில் ஒன்றாகும் ......
பந்தா பண்ணுவது அல்ல கவன்சிலர் 
வேலை செய்பதுதான் கவன்சிலர் 
என்று சொன்னதுடன் எதிரே வந்த 
ஒரு அம்மாவிடம் அவரை பற்றி கேட்க்கவும் 
சொன்னார்.. அந்த அம்மாவோ ..!!!!!

பகுருதீனா விறகு கூட வாங்கி தருவானே ..!!!!
சிலிண்டர் இல்லாட்டி கூட்ட வாங்கிதர்வானே..!!!
இப்படி தருவானே..!!! தருவானே..!!!! என்று அடுக்கி கொண்டே போனது .


அவர் சொன்னது போலவே அவர் நிற்கும் சாலை யின் பகுதி 
6 வார்ட் மிக தூய்மையாக இருக்கிறது அவருக்கு எதிரே உள்ள பகுதி 
கழிவுநீர் தொட்டி கூட மூட படாமலும் சாலைகள் சுத்தம் செய்ய படாமல் இருப்பதையும் ..!!!இருப்பதையும் ..!!! அவரே சுத்தம்..!!! செய்வதையும் நீங்களே இந்த புகை படத்தில் பார்க்கலாம் 

ஒன்றுக்கு பலமுறை தன்னை வந்து சந்தித்தால் தான் 
எதையும் செய்வேன் என்று சொல்லும் 
சாதாரண வட்டத்திற்கு மத்தியில் ....

சர்வ சாதரணமாய் மக்களை சந்திப்பது மட்டும் அல்ல துப்புரவு 
பணி யிலும் ஈடுபடும் இவர் அல்ல பஹுரூதீன்

இவர்தான் அரசியல் வாதிக்கும் கவ்ன்சிலர்களுக்கும் முன் உதாரணமான ஜீன் 

பஷீர்

முத்துப்பேட்டை தர்ஹா குளத்தில் சூலாயுதம்? -கலவரத்தை ஏற்ப்படுத்த பாஜக வினர் சதியா ?

முத்துப்பேட்டை, அக்டோபர் 22: முத்துப்பேட்டை தர்காவுக்கு எதிர்புறம் இருக்கும் பள்ளிவாசலுக்கு  பின்புறம் உள்ள குளத்தின் மேல் கரையில் பட்டாமணியார் ஜீவானந்தத்திற்கு சொந்தமான இடத்தில் நேற்று  (20.10.13) பகல் 3 மணியளவில் பூமி அதிர்ந்து சூலம் வெளிப்பட்டதாக பாண்டியன் என்கிற சேகர் (மனநலம் பாதிக்கப்பட்டவர்) பரபரப்பை ஏற்படுத்தினார். 



இந்த சம்பவத்தை அறிந்த பாரதிய ஜனதாவினர் அந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி சிலைகள் இருந்தால் அந்த இடத்தில் நாங்கள் கோவில் கட்டுவோம் என்ற கலவரத்திற்கான விதையை விதைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இருதரப்பும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையும், வருவாய்துறையும், இரண்டு நாள் கழித்து தோண்டலாம் என்று அறிவுத்தியதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சூலத்தை வருவாய்துறையினர் வசம் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தர்கா பகுதி முஸ்லிம்கள் கூறுகையில்: இது ப.ஜா.க.வினரின் திட்டமிட்ட சதியே தவிர வேறொன்றும் இல்லை, அவர்கள் முன்பே திட்டமிட்டு பூமிக்குள் சிலையை புதைத்துவிட்டு தற்பொழுது பிரச்சனையை கிளப்புகிறார்கள். மேலும் பாண்டியன் என்கிற சேகர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகையால் உடனே தமிழக அரசு தலையிட்டு ஆரம்பத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

அமைதியா இருந்த ஊரில் முதன் முதலில் விநாயக ஊர்வலம் என்ற பெயரில் முத்துப்பேட்டையை கலவர பூமியாக மாற்றிய சங்பரிவார சக்திகள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெரியதாக கலவரம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் ஆகையால் தற்பொழுது அமைதியை சீர்குலைக்க புதியதாக ஒரு வழியை தேடுகின்றனர் அதனுடைய வெளிப்பாடே இந்த சூலாயுத நாடகம்.

நரேந்திர மோடியை தூக்கில் போடவேண்டும் -நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி !!!





சென்னை, அக்டோபர் 21: திரைத்துறையில் "வீரப்பனாக "வீர வசனம் பேசி தனது கம்பீர குரல் மூலம் அத்துனை பேரையும் மிரட்டி போட்டவரும் ,வில்லன்களை எல்லாம் புரட்டி போட்டவரும் ,வில்லன்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தையும்,தனி முத்திரையையும் பதித்தவர் .விமர்சனங்களுக்கு பஞ்சமில்லாதவர் .வில்லத்தனத்தை சினிமாவில் மட்டுமல்ல ,நிஜவாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் .வில்லன் போன்றே நடை உடை பாவனைகள் உடையவர் .முரட்டுத்தனத்தை தனது மூல தனமாய் கொண்டவர் .தனது பஞ்ச் டயலாக் மூலம் வில்லன் கேரக்டருக்கே ஒரு தனி அடையாளத்தை கண்டுபிடித்தவர் .இத்தனைக்கும் சொந்தக்காரர் யார் தெரியுமா ?

அவர்தான் நடிகர் மன்சூர் அலிகான் :

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி எடுப்பதற்காக கடந்த ஒரு மாத காலமாக தொடர் முயற்சிகள்  எடுத்தோம். ஒவ்வொரு முறையும் நாம் தொடர்பு கொண்ட போது,வெவ்வேறு ஊர்களில் படுபிஸியாக ஷூட்டிங்கில் இருப்பதாக கூறினார்  மன்சூர் அலிகான் .

ஹஜ் பெருநாள் அன்று நமது அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது .அந்த அழைப்பில் "ஈத் முபாரக் பாய் "இன்று மதியம் என் வீட்டில் உங்களுக்கு ஒட்டக பிரியாணி விருந்து வந்துடுங்க என்று கரடு முரடான ஒரு குரல் ஒலித்தது .திடுக்கிட்ட நாம் யாரென்று அறிய முற்பட்டோம் .

பின்னர் நாந்தான் மன்சூரலிகான் பேசுறேன் என்று  "கேப்டன் பிரபாகரன் "படத்துல "பச்சபுள்ள நிலாவ புடிக்க ஆச படறமாதிரி நீ என்ன புடிக்க ஆசைபடுற "என்ற வசனத்திற்கு பின் சிரிப்பது போல நம்மிடம் ஐந்து நிமிடத்திற்கு குறையாமல் வில்லத்தன சிரிப்புடன் பேச துவங்கினார் .அன்போடு விருந்தை தவிர்த்த நாம் ,இரவில் வந்து சந்திப்பதாக உரிதியளித்தோம்.அடைமழையையும் பொருட்படுத்தாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது பங்களாவிற்கு நேரில் சென்று சந்தித்தோம் .நம்மை அன்போடு வரவேற்ற மன்சூர் ,தனது பங்களாவின் மேல் தளத்திற்கு அழைத்து சென்று நாம் கேட்ட பல சூடான  கேள்விகளுக்கு வில்லத்தனமாக பதிலளித்தார் .

கே :  உங்களுடைய  சொந்த ஊர் எது ?

பதில் :  என்னோட சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி .

கே :   உங்களின் பள்ளி படிப்பு பற்றி ?

பதில் :   நான் பள்ளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்புவரை படித்துள்ளேன் .

கே :   நீங்கள் சினிமாவிற்கு வர காரணம் யார் ?

பதில் :  எனது அண்ணன் முஹம்மது அலிதான் காரணம் .

கே :   உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி ?

பதில் :   ஒரு நாள் எங்கள் ஊரில் ரவுடிகள் மாமூல் வசூலித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது மாமூல் கொடுக்க மறுத்த ஒரு இஸ்லாமிய பெரியவரின் கழுத்து சட்டையை  பிடித்து 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் மிரட்டிகொண்டிருன்தனர். இதனை கண்ட நான் அந்த நான்கு பேரையும் துரத்தி துரத்தி, ஓட ஓட விரட்டியடித்தேன். இந்த சம்பவத்தை நீண்ட நேரம் உற்று கவனித்த ஒரு நபர், என்னை கூப்பிட்டார் ,பின்னர்  சென்னையில் இந்த முகவரிக்கு வந்து சந்திக்குமாறு கூறினார் .நான் அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது அவர்தான் ஆ.செ.இப்ராஹிம் ரவுத்தர்னு .நீ சினிமாவில் வில்லனாக நடிப்பாயா எண்டு கேட்டார் .அதற்க்கு தயங்கியபடி நான் எப்படின்னு இழுத்தபடி  நின்றேன் . உன் முரட்டுத்தனமும் ,மூர்க்கத்தனமும் வில்லனுக்கு பொருத்தமாக இருக்கும் என்றவர் அடுத்து நான் தயாரிக்கும் படத்தில் நீதான் வில்லன் ,அடுத்த மாதம் ஷூட்டிங் என்று கூறிவிட்டு சென்று விட்டார் .

கே :  மன்சூரலிகான் வீரப்பன் ஆனது எப்படி ?

பதில் :   புரட்சிகலைஞர் விஜயகாந்தின் 100-ஆவது படமான "கேப்டன் பிரபாகரன் "படத்தில்தான் நான் வீரப்பன் ஆனேன் .நான் நடித்த இந்த வீரப்பன் கேரக்டர் தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது .இந்த படம் பல வெற்றிகளை அள்ளித்தந்தது .ஏன் இன்னும் சொல்ல போனால் விஜயகாந்த்திற்கு "கேப்டன் "என்ற அடைமொழி சொல் வந்ததே கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பின்னர்தான் 

கே :  முத்துப்பேட்டை தெற்கு தெரு நண்பர்களை பற்றி ?

பதில் : என் சகோதரர்கள். துணிச்சலானவர்கள். வீரமிக்கவர்கள். இறக்க குணமுடையவர்கள். எனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் வைத்து என்னை அழகு பார்த்தவர்கள்.

கே :   பாபர் மசூதி இடிப்பு பற்றி ?

பதில் :  இது நாட்டில் நடந்த மிகவும் கேவலமான செயல் .மதச்சார்பின்மைக்கு  விடப்பட்ட சவால் .நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் ,இந்த மா பாதக ,தேசவிரோத ,செயலை செய்ய வந்த அத்துனை பேரையும் சுட்டு தள்ளியிருப்பேன் .சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருப்பேன் .

கே :   பாபர் மசூதி இடிப்பை கண்டித்து நீங்கள் நடத்திய போராட்டம் பற்றி ?

பதில் :   கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பை கண்டித்து சென்னையில் உள்ள கவர்னர் மாளிகை முன் நான் என் குடும்பத்தாருடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டேன் .

கே :நீங்கள் ஒரு பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக கூறப்படுகிறதே ?

பதில் :   இது முழுக்க முழுக்க ஜோடிக்கபட்டவையாகும் .என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும் .

கே :   தமுமுக தலைமையகத்திற்கு நீங்கள் நேரில் சென்றது பற்றியும் -அரசியல் ஆர்வம் பற்றியும் ?

பதில் :   நான் தமுமுக ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவன் .பழனி பாபா படுகொலைக்கு பின் பாமக விலிருந்து வெளியேறினேன் .பின்னர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனியில் போட்டியிட்டு  ஒரு லட்சம் ஓட்டுக்கள் எடுத்தேன் .ஆதிமுக வில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன் .திருமாவளவனிடம் நெருக்கமாக இருந்திருக்கிறேன் .கடந்த பாராளுமன்ற தேர்தலில் டி.ராஜேந்தர் கட்சி சார்பில் திருச்சியில் போட்டியிட்டேன் .இதற்காகத்தான் தமுமுக தலைமையகம் சென்று ஆதரவு கேட்டேன் .ஆனால் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை .

கே : உங்களை SDPI  கட்சியினர் அழைத்தால் ?

பதில் :   அப்படி அழைத்தால் பாப்போம். ஆனால் அது நடக்காது.

கே :  குஜராத் கலவரம் பற்றியும் -பாஜக வின் பிரதமர் வேட்பாளர் மோடி பற்றியும் ?

பதில்;  இந்தியாவில் நடந்த மிகவும் கொடூரமான மனித படுகொலை அது நிறைமாத கர்ப்பிணியை சூலாயுதத்தால் குத்து சிசுவை எடுத்து, எரியும் நெருப்பில் வீசினார்கள். இதற்க்கு காரணம் நரேந்திர மோடிதான். நரேந்திர மோடியை தூக்கில் போட வேண்டும்.

கே :  நரேந்திர மோடி இஸ்லாமியர்களை நாய் என்ற வர்னிதுள்ளாரே ?

பதில் :   ஏங்க திருடன் என்னா செய்வான் .அடுத்தவன பார்த்துதான் திருடேன்பான்.அதே போல் மோடி பிறரை நாய் என்று கூறினால் இவர் யாராக இருக்க முடியும் ? இவ்வாறு பதிலளித்தார் .



சந்திப்பு :ஜே :ஷேக்பரீத்

               

ஆதார் அட்டையும் பின் விளைவுகளும்..!


அக்டோபர் 21: விவரங்கள் வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013 15:25


நண்பர் ஒருவர் ஆதார் அட்டை ஜோக் என்று ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதன் தமிழ் வடிவம் இதோ..

2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

ஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்..

கஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

கஸ்டமர் : வாட்..? எதுக்குங்க..?

ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

கஸ்டமர் : வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..

ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்..

கஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

கஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

கஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

கஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..?

ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

கஸ்டமர் : வாட்..?

ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்படிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்)

நமது நிருபர்:

அலி அஹமது (லண்டன்)

முத்துப்பேட்டையில் குடிபோதையில் ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது!பெருநாள் தினத்தில் கலவரத்தை ஏற்ப்படுத்த முயற்சி ?

முத்துப்பேட்டை, அக்டோபர் 19: முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள நியூ ஹோட்டலில் நேற்று முன்தினம் (15/10/13) இரவு 11 மணி அளவில் கோவிலூரை சேர்ந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் ஹோட்டல் ஊழியரை தாக்கி பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மூவரும் குடிபோதையில் ஹோட்டலுக்கு வந்துள்ளனர், அடுத்தநாள் பெருநாள் என்பதால் சற்று கூட்டமாக இருந்துள்ளது. கடையின் உரிமையாளர் மற்றும் சப்ளையர் மணிகண்டன் ஆகிய இரண்டு பேர் மட்டும் இருந்து கூட்டத்தை சமாளித்துக்கொண்டு இருந்துள்ளனர். அந்த நேரத்தில் குடிபோதையில் சாப்பிட வந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் சாப்பாடு கேட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் மணிகண்டன் மட்டுமே அனைவரையும் கவனித்துகொண்டு இருந்ததால் கொஞ்சம் பொறுங்கள் தருகிறேன் என்று கூறியுள்ளார் அதற்கு குடிபோதையில் இருந்த மூவரும் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளனர்.

தலையில் பலமாக தாக்கப்பட்ட மணிகண்டன் பலத்த காயத்துடன் மயக்கமடைந்தார். உடனே 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர், 108 வந்து பார்த்துவிட்டு முத்துப்பேட்டையில் அரசு மருத்துவமனை இருப்பதால் நாங்கள் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டனர்.

எனவே தமுமுக ஆம்புலன்சை அழைத்தனர் உடனே வந்த அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலை நடத்திய பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடையின் உரிமையாளர் முஹம்மத் அலி  கொடுத்த புகாரின் பேரில் பிரபு மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று கோர்ட் விடுமுறை என்பதால் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அவர்களின் மீது Sec : 294(b), 323, 324, 427, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நோன்பு பெருநாளை சீர்குலைக்க நினைத்து பரபரப்பை ஏற்படுத்தினர் அதேபோல இந்த பெருநாளை சீர்குலைக்க திட்டமாக இருக்குமோ? என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

மோடிக்கு எதிராக மெரினா -அண்ணாசாலை -சென்ட்ரல் -உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்







சென்னை, அக்டோபர் 18: நரேந்திர மோடி இன்று சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் எதிரில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டு  தள்ளு முள்ளு நடந்தது.   இதில், மாதர்சங்கத்தை சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.

ஒரு மாணவரின் சட்டையை கிழித்து லத்தியால் தாக்கினர் போலீசார்.  இதனால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பிறகு துணை கமிஷனர் கிரி மாணவர்களை சமாதானம் செய்து அனைவரையும் கைது செய்தனர்.  இதனால் அண்ணாசாலை பரபரப்புடன் காணப்பட்டது.

  புரட்சிகர் மாணவர் - இளைஞர் முன்னணி யினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செண்ட்ரலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது டாடா, அம்பானிகளின் எடுபிடி, இந்துமதவெறி பாசிஸ்ட் மோடியே தமிழகத்தில் நுழையாதே என்று கோஷம் எழுப்பினர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தலைமை ஆசிரியரை கொன்ற மனைவி 5 மாதங்களுக்கு பின் போலீசில் சரண்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தலைமை ஆசிரியரை கொன்ற மனைவி 5 மாதங்களுக்கு பின் போலீசில் சரண்

திருவாரூர், அக்டோபர் 17: திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் மரக்கடையில் வசித்து வந்தவர் தனசேகரன் (45). இவர் கூத்தா நல்லூர் அருகே உள்ள நாகராஜன் கோட்டகம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சுமதி (42). இவர் பழையனூரில உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனசேகரன் கடந்த மே மாதம் 15–ந் தேதி மர்மமான 
முறையில் இறந்து கிடந்தார்
.
அவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனசேகரன் மனைவி சுமதி திருவாரூர் டி.எஸ்.பி. வைத்தியலிங்கத்திடம் சரண் அடைந்தார். அப்போது அவர் தனது கணவரை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
தனக்கும் தான் பணிபுரியும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக போலீசில் கூறினார்.
சரண் அடைந்த சுமதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கணவரை கொன்றதாக 5 மாதங்களுக்கு பின் மனைவி போலீசில் சரண் அடைந்துள்ள சம்பவம் கூத்தா நல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முத்துப்பேட்டை மக்கள் லண்டனில் பெருநாள் கொண்டாடிய காட்சி ஓர் பார்வை.!!!








லண்டன், அக்டோபர் 17:  தியாக திருநாள் லண்டன் மாநகரில் அணைத்து பள்ளிவாசல்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது , அணைத்து பள்ளிவாசல்களிலும் மூன்று நான்கு ஜமாஅத் தொழுகை நடைபெற்றது , அணைத்து பள்ளிவாசல்களிலும் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது . லண்டன் மாநகரில் வாழும் பல நாடுகளை சேர்ந்த நம் சமுதயா மக்கள் அவர்கள் நாட்டு பாரம்பரிய புதிய உடைகள் அணிந்து வந்து தொழுகையில் கலந்து கொண்டும் வாழ்த்துகளை பரிமாரிகொன்டர்கள் . அல்லாஹ் இந்த நல்ல நாளில் நம் சமுதயா மக்கள் ஒற்றுமையுடன் இருக்க எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெற ஏக இறைவன் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்
நமது ஊர் ஒற்றுமைக்காகவும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்

லண்டன் வாழ் முத்துப்பேட்டை மக்கள் 

லண்டனில்ருந்து
அப்துல் ரஹ்மான்
ஜமால் முஹமது
அலி அஹமது
ஆசிம் முஹமது
அசார் முஹமது

கோவையில் வெடிகுண்டு நாடகம் -பாஜக ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி SDPI ஆர்ப்பாட்டம் :

covaiகோவை , அக்டோபர் 17: கோவை வடவள்ளியில் வெடிகுண்டு நாடகமாடிய பிஜேபி செயலாளர் ராமனாதனையும் ஏனைய சங்கபரிவாரர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி,ஐ கட்சியின் சார்பில் சீர்குலைக்கும் விதமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பிஜேபி யும் சங்பரிவார கும்பலும் திட்டமிட்டு சமுகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பகண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1
பொது அமைதிக்கு எதிராக, மத நல்லிணக்கத்தை து வேதனையே. அவர்களாகவே திட்டமிட்டு நிகழ்வுகளை எர்ப்படுத்தவும், அதை வைத்து பந்த் நடத்துவதும், அரசு பேருந்துகளை அடித்து நொறுக்குவதும், வணிக நிறுவனங்களை அடைக்கச் செய்வதும், எதிர்ப்பவர்களின் நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவதும் சமீபகாலமாக தொடர் கதையாகிவிட்டது.
அண்மையில் அவர்கள் நடத்திய பந்த் ஒன்றில் கணபதியில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் பெட்ரோல் குண்டுகளை பட்டப்பகலில் வீசியது பொது மனித சமுகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அனுமன் சேனாவை சேர்ந்த சக்திவேல் தன்னை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என்று போலியாக நாடக மாடி பொது சமுகத்தின் அமைதியை சீர்குலைத்து மத மோதல்களை ஏற்ப்படுத்த முயற்சி செய்தது , அதன் தொடர்ச்சியாக செல்வபுரம் பகுதியில் ஒரு வியாபாரியின் வீட்டில் விஷ்வ ஹிந்து பரிசத்தை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டை வீசியதும், வட வள்ளியைச் சார்ந்த ராமநாதன்(மண்டல பாரதிய ஜனதா செயலாளர்)தன்னுடைய வீட்டில் தானாகவே பெட்ரோல் குண்டை வீசி விட்டு மதகலவரத்தை ஏற்ப்படுத்த முயற்சித்ததும், தொடந்து சங்பரிவார கும்பலின் வாடிக்கையாகிவிட்டது. இவர்களின் ஒவ்வொரு விசயத்திலும் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் பிஜேபி யும் சங்கப்பரிவார கும்பலை சார்ந்தவர்கள் என்றும் பொது சமுகத்திற்கு அடையாளம் காட்டியது .
எனவே தமிழக அரசு இந்த சுயநலவாதிகளையும், மாதவாத கும்பலையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் , கடுமையான(குண்டர்)சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் குமாரசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலவைர் சிவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். கிணத்துக்கடவு தொகுதி துணைத் தலைவர் தளபதி கிருஷ்ணன் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், எஸ்.டி.டி.யூ மாவட்ட தலைவர் அன்சர் செரிப், மாவட்ட செயலாளர் கிஸ்மி அலி மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகளும் ,செயல் வீரர்களும், திரளாக பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தகவல் :ஜே :ஷேக்பரீத் 
 IMG_5278 IMG_5287
IMG_5267 

முத்துப்பேட்டையில் பேரூராட்சியின் மெத்தன போக்கால் சீர்கெட்டு கிடக்கும் தெரு.




முத்துப்பேட்டை, அக்டோபர் 17: முத்துப்பேட்டை PKT ரோடு ஓடக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் செல்லும் பகுதி அருகில் குழி வெட்டப்பட்டு அதனை முழுமையாக பணியை முடிக்காமல் மெத்தனபோக்கை கையாளும் முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அந்த பகுதி வார்டு மெம்பர் இவற்றை உடனே சரிசெய்தி மக்கள் நடமாடும் இடத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பேன கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பள்ளத்தை உடனே மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவாறு இருப்பதனால் தான் பல்வேறு விபத்துகள் மற்றும் இரவில் பயணம் செய்பவர்கள் இந்த குழிக்குள் விழ வாயிப்புகள் உள்ளன.

நமது நிருபர் 

AKLT. அப்துல் ரஹ்மான் 

லண்டனில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை ஓர் பார்வை...




லண்டன், அக்டோபர் 16: முத்துப்பேட்டை நண்பர்கள் லண்டனில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு பின்னர் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி 

ஜவாஹிருல்லாஹ் வந்த கார் விபத்துக்குள்ளானது :

தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக வரும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் கார் விபத்துக்குள்ளானது. இறைவனின் கிருபையால் பேராசிரியர் அவர்கள் நலமுடன் உள்ளார்கள். எந்த பாதிப்பும் இல்லை. காரை ஓட்டி வந்த டிரைவர் ஆதில் அவர்களுக்கு காது அருகில் லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நலமுடன் உள்ளார்கள்.

டி.ஜி.பி. ராமானுஜத்தை பொய்யராக்கிய போலீசார்!

சென்னை, அக்டோபர் 10: பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை''

மேற்கண்ட இந்த வரிகளை பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் தமது முகநூல் பதிவில் போட்டிருக்கிறார்.எவ்வளவு எதார்த்தமான வரிகள் இவை.உண்மையில் மீடியாக்கள் இந்த விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் மருந்துக்கு கூட அவற்றிடம் ஊடக தர்மம் இல்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல் ஒருவித வன்மத்துடன் இந்த செய்திகள் எழுதப்படுகின்றன.

பிடிபட்ட மூவரும் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ இல்லை.இவர்கள் பயங்கரவாதிகள் என்று போலீஸ் இந்த நிமிடம் வரை நிரூபிக்கவில்லை.போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் வெறும் விசாரணை தான் மேற்கொண்டிருக்கிறோம்.பயங்கரவாதிகள் ,தீவிரவாதிகள் என்று நாங்கள் சொல்லவில்லை.ஊடகங்கள் தான் சொல்லுகின்றன என்கிறார்கள்..பின்னர் எந்த அடிப்படையில் இந்த ஊடகங்கள் சர்வதேச பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்து காலையிலும்,மாலையிலும் புது புது செய்திகளை தரவேண்டும்?இப்படி வெளியிடும் செய்திகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா ஊடகங்களிடம்?ஊடகங்களிடம் கேட்டால் போலீஸ் தரும் செய்திகளை தான் நாங்கள் வெளியிடுகிறோம் என்கின்றன?போலீசும் ஊடகங்களும் சேர்ந்து நடத்தும் நாடகமா இது?

அக் 7, 2013 ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ஒரு செய்தியை பார்த்தால் டி.ஜி.பி. ராமானுஜம் பொய் சொல்கிறாரா அல்லது இந்த வழக்கை விசாரிக்கும் காவல் படை பிரிவுகள் பொய் சொல்கின்றனவா என்றும் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள அல்லது போடப்போகும் வழக்குகள் பொய் என்று ஒரு தரப்பினரால் போலீஸ் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உன்மைதானா என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

தி இந்து நாளிதழில், வந்துள்ள அந்த செய்தி படி,போலீஸ் பக்ருதீனை வேலூர் ஜேஎம் 3 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை போலீஸ் கஸ்டடியில் எடுப்பதற்காக சமர்ப்பித்த மனுவில்,

''கடந்த 2012 அக்டோபர் மாதம் வேலூரில் பா.ஜ.க. மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடியில் முருகன் என்ற முருகேசன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்குடன் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையில் போலீஸ் பக்ருதீன் ஒப்புக்கொண்டார். அவர் பதுங்கி இருந்த வீட்டிலிருந்து வெடி மருந்துகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது கூட்டாளிகள் குறித்து விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரை 13 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.''

போலீஸ் வாங்கும் வாக்குமூலத்தின் லட்சணம் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்தது தான்.ஆனால் இங்கே போலீஸ் சமர்பித்த மனு மிக அவசர கோலத்தில் எதையும் ஆராயாமல் சமர்பித்ருக்கிறது என்பதற்கும் இது நல்லஆதாரம்.வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டி,பரமக்குடி முருகேசன் ஆகியோரை கொலை செய்ததாக பக்ருதீன் வாக்குமூலம் தந்தார் என்று போலீசார் சொல்கிறார்கள்.ஆனால் இந்த இருவரையும் யார் கொன்றார்கள் என்பதை டி.ஜி.பி.ராமானுஜம் கடந்த ஜூலை 26 அன்று வெளியிட்ட அறிக்கையல் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்....
.
'வேலூரில் கடந்த 23.10.2012 அன்று பா.ஜக. மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல்– வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், எம்.எல்.ஏ. ராஜா, பிச்சைபெருமாள், தரணிகுமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது'

'பரமக்குடியில் கடந்த 19.3.2013 அன்று நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய் கடை முருகன் படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் இந்த கொலை நடந்திருந்தது. இது தொடர்பாக ராஜா முகம்மது, மனோகரன், ரபீக் ராஜா, சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'

இப்போது சொல்லுங்கள் டி.ஜி.பி,ராமானுஜம் பொய் சொல்கிறாரா? பக்ருதீனை விசாரிக்கும் போலீசார் பொய் சொல்கிறார்களா? இனி டி.ஜி.பி.எது சொன்னாலும் அதில் பொதுமக்களுக்கு நம்பிக்கை வராது... காவல்துறை மட்டத்திலும்,அமைப்புகள்,கட்சிகள் மட்டத்திலும் பெரிதும் மதிக்கப்படுபவர் டி.ஜி.பி.ராமானுஜம்.சிறந்த அதிகாரியாவார்.இவருக்கு கீழ் நிலை அதிகாரிகளால் போற்றப்படுபவர்.இவர் பல உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரோல் மாடலாகவும் இருக்கிறார்.இப்போது சி.பி.ஐ.யில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரே நம்மிடம் ஒருமுறை ''எனக்கு ராமானுஜம் சார் தான் ரோல் மாடல்'' என்று சொல்லியிருந்தார்.இத்தனை சிறப்புகள் கொண்டதாலும்,சிறந்த
அதிகாரி என்பதாலும் தான் இவரது பதவியை நீட்டித்தார் முதல்வர்.பாவம் இன்னும் கொஞ்ச காலம் அவர் பதவி வகிக்க
இருக்கிறார்.அதற்குள் அவரது பெயரை டேமேஜ் செய்யும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.டி.ஜி.பி.யின் அறிக்கை

கேலிக்கூத்தாக்கி அவரை பொய்யராக்கியுள்ளனர் போலீசார்.இத்தனைக்கும் காரணம் பக்ருதீன் மீது எப்படியாவது ஏதாவது வழக்கை போட்டு விடவேண்டும் என்கிற போலீசின் வன்மம் கொண்ட முனைப்பு என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

தவிர,பண்ண இஸ்மாயில்,பிலால் மாளிகை பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந்தப்படுத்தி தேடிவந்த போலீசார், இப்போது அதை பற்றி பேசாமல் இவர்களையும் சேலம்.ஆடிட்டர் ரமேஷ்,இந்து முன்னணி நிர்வாகி வேலூர்

வெள்ளையப்பன் கொலை வழக்கில் சேர்த்து விட துடிக்கிறது.அதன் பின்னால் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பிலும் சேர்ப்பார்கள்.
ஆதாரம் பற்றியோ அப்பாவிகளின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பது பற்றியோ இவர்களுக்கு என்ன கவலை?

நாம் இப்போதும் சொல்கிறோம்,பக்ருதீன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தரட்டும்.இஸ்லாமியார்களாக இருந்து கொண்டு இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற வகையில் அவர்கள் மீது நமக்கு வெறுப்பு தான் ஏற்படும்.ஆனால் அவர்கள் அப்பாவிகளாக இருந்து விட்டால் ...? இந்த சிந்தனை போலீசாரின் நடவடிக்கைகளால் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லையே!

பதவி உயர்வு,விருதுகளுக்காக மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் தமது பெயரும் இடம் பெற்று விடவேண்டும் என்ற சுயநலம் தான் போலீசாரிடம் விஞ்சி நிற்கிறது என்று சொல்வதில் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்.

எனது பார்வையில் போலீஸ் பக்ருதீனோ அவரது குழுவினரோ அல்ல;போலீசார் தான் பயங்கரவாதிகளாக தெரிகிறார்கள்!ஊடகங்களும் தான்!

போலீஸ் பக்ருதீனும்- புத்தூர் கைதுகளும் போலீசின் நடவடிக்கைகளும்!


''உன்னை கொல்லாம விடமாட்டேன்.இது வரைக்கும்
21பேரை சுட்டிருக்கேன். உன்னையும்
சுடாம விடமாட்டேன்.நான் சுடவில்லை
என்றால் ஆம்பளையே இல்லை''

-என்கவுன்ட்டர் வெள்ளத்துரை
======================================
''என்மரணம் அல்லாஹ் கையில் இருக்கிறது.
அது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.
நீ என்னை அநியாயமாக கொன்றால் நானும்
உன்னை கொல்வேன''
-போலீஸ் பக்ருதீன்
======================================

அதெப்படி என்று தெரியவில்லை....என்கவுண்டர் பண்ணச் செல்லும் போதெல்லாம் போலீசார் வெட்டுக்காயம் படுவது!இந்த கதையை தொடர்ந்து காவல்துறை ஒவ்வொரு சம்பவத்திலும் எழுதிக் கொண்டிருக்கிறது.

போலீசின் டார்ச்சருக்கு பயந்து தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் நெருங்கும் போது அவர்கள் பீதியுடன் தான் காணப்படுவார்கள்.இதுதான் மனோதத்துவ ரீதியாக யதார்தமானது. துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் பெரும் படையோடு வரும் காவல்துறையை எதிர்க்க முடியாது என்பது இப்படி தலைமறைவாக இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

போலீசையோ இராணுவத்தையோ எதிர்த்து நிற்பவர்கள் நவீன ஆயுதங்களுடன் தலைமறைவாக இருக்கும் போராளி குழுக்கள்
தான்.போலீசிடம் சிக்கினால் பின்னி எடுத்துவிடுவார்கள் என்று பயந்து போய் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களல்ல.இந்த
வகையை சேர்ந்தவர்கள் தான் பண்ணா இஸ்மாயில்,போலிஸ் பக்ருதீன்,பிலால் மாலிக்.

இவர்களால் அரிவாளாலும் (?!) குக்கர் கைப்பிடியாலும் (?!)தாக்கப்பட்டதாக கூறப்படும் போலீசாரின் படங்களை காவல்துறையால் வெளியிட முடியவில்லை என்பதே போலிசின் பொய் வாதத்திற்கு சான்று.

தமிழக ஹிந்துத்துவா தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில்,ஒரு சமுதாயத்தை குறி வைத்து
ஹிந்துத்துவாவும் மீடியாக்களும் பரப்புரை மேற்கொண்ட நேரத்தில் தமிழக டி.ஜி.பி ராமானுஜத்தின் அறிக்கை வெளியாகி இந்த பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.பொய் பரப்புரைகளை மேற்கொண்டவர்கள் அவமானத்திற்குள்ளாகி மௌனம் காத்தனர்,காரணம் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களே கொலையாளிகள் என்பதையும் இந்த கொலைகள் மத விவகாரங்களுக்காக நடை பெறவில்லை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தது என்பதையும் டி.ஜி.பி தெளிவு படுத்தி இருந்தது தான்.

டி.ஜி.பி யின் அறிக்கையில் வேலூர் வெள்ளையப்பன்,சேலம் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை கொன்றவர்கள் யார் என்று
தெரியவில்லை.அவர்களை பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு இருபது லட்சம் பரிசளிக்கப்படும் என்ற தமிழக அரசின் செய்தியும் சொல்லப்பட்டிருந்தது.இந்த சமயத்தில் தான் போலிஸ் ஒரு கேம் ஆடியது.இந்த பரிசு அறிவிப்போடு சேர்த்து பண்ணா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன்.பிலால் மாலிக் படங்களைப் போட்டு மீடியாக்களுக்கு செய்தி தந்தது போலிஸ். அதாவது டி.ஜி.பியின் அறிக்கையில் இல்லாத இவர்களின் பெயர்கள் போலிஸ் ஆடிய கேம்மில் படங்களுடன் வெளியாகி,சேலம் ரமேஷ் கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று கட்டமைக்கப்பட்டது

மீடியாக்களில் மூவரது படங்களும் வெளியான நிலையில்,இது குறித்து சேலம் கமிஷனர் மஹாலியிடம்,சேலம் மாலை முரசு
நிருபர் கேட்டபோது இந்த படங்களையும் இந்த செய்தியையும் போலீஸ் வெளியிடவில்லை;அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என ஜகா என்றார் கமிஷனர்.போலிஸ் வெளியிடவில்லை என்றால் வேறு யார் வெளியிட்டது?

ஆனால் அப்போது மேற்கண்ட மூவரும் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கிற்காக போலீசாரால் தேடப்பபட்டு
வந்தவர்கள்.இந்துத்துவா தலைவர்களின் படுகொலைகளை கண்டித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்திய காரணத்தால் அவர்களை திருப்திபடுத்தவோ அல்லது உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் தலைமறைவாக இருக்கும் இந்த மூவரில் பக்ருதீன் மீது இந்த பழியை தூக்கி போட்டு ரமேஷ் கொலையின் குற்றவாளியை போலிஸ் கண்டுபிடித்துவிட்டதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவோ முயற்சி செய்திருக்கிறது போலிஸ் என்று தான் புரிய முடிகிறது.

ரமேஷ் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான காவலாளி,வந்தவர்கள் 20-23 வயது கொண்டவர்கள் என்று வாக்கு மூலம் கொடுத்திருப்பது இங்கேகவனிக்கத்தக்கது. மேற்கண்ட மூவரும் குறைந்த பட்சம் 35 ஐ கடந்தவர்கள்.

ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வேலூர் வெள்ளையப்பன் கொலைக்கு காரணமானவர்கள் இது வரை கண்டு
பிடிக்கப்படவில்லை.இந்நிலையில் தலைமறைவாக இருந்த பக்ருத்தீன் தான் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை குற்றவாளி என்றால் பக்ருதீன் சேலத்திற்கு வந்து ரமேஷை போட்டு தள்ளி விட்டு போய் இருக்கிறார் அல்லது எங்கோ இருந்து கொண்டு கூலிப்படையை அனுப்பி கொலை செய்திருக்கிறார் என்று பொருள் கொள்ள முடியும்.இதில் இரண்டாவதை இப்போது போலீஸ் சொல்கிறது.முதலாவதை சொன்னால்,தலைமறைவாக இருக்கும் ஒருவர்,அதுவும் காவல்துறையின் பல பிரிவுகளால் தேடப்படும் ஒருவர் சேலம் நகருக்குள் பிரவேசித்து கொலை செய்து விட்டு போய் இருக்கிறார் போலிஸ் என்ன பிடுங்கிக்கொண்டிருந்ததா என்ற கேள்விகள் போலிசை நாறடித்து விடும்.கமிஷனர் மஹாலி காவல்துறை தலைமையால் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவார்.

பக்ருதீன் எங்கிருந்தோ கூலிப்படையை ஏவி கொலை செய்தார் என்று போலிஸ் சொல்வதற்கும் ஆதாரம் இல்லை.இதுவரை எந்த கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டு,பக்ருதீன்தான் எங்களை அனுப்பினார் என்றும் வாக்குமூலம் தரவில்லை.குறைந்த பட்சம் இப்படி ஒரு ஜோடிப்பை கூட காவல்துறையால் செய்முடியவில்லை. மறந்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஆக, திட்டமிட்டு இந்த படுகொலை வழக்குகளை தலைமறைவாக இருந்த பக்ருதீன் மீது போட்டிருக்கிறது போலீஸ் என்று கருத இடமுண்டு இவர்களை பயங்கரவாதிகளாக போலீசும் மீடியாக்களும் சித்தரிக்கின்றன....மதுரை பைப் வெடி குண்டு வழக்கு பக்ருத்தீன் மீது சுமத்தப்படுவதற்கு முன்பு வரை சில வழக்குகளில் சிறை சென்று விடுதலையாகி மதுரை நெல்பேட்டை பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தவர்தான் பக்ருதீன்.அப்போது வரை இவர் காவல்துறையின் பார்வையில் பயங்கரவாதி இல்லை. இவருக்கும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரைக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இவர் மதுரையை விட்டு தலைமறைவான பின்னர் தான் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டார்.இதற்கு காரணம் மதுரை காவல்துறையோடு இவருக்கு ஏற்பட்ட மோதல் போக்குதான்.

கடந்த 07/04/2010 அன்று மதுரை கரீம்ஷா பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு வீட்டில் திருட வந்த திருடனை பிடித்து போலீசில்
ஒப்படைத்திருக்கிறார் பக்ருதீன்.இந்த வழக்கை பக்ருதீன் மீதே திருப்பி இருக்கிறது நெல்பேட்டை போலீஸ்.

மதுரை ஜே.எம்.கோர்ட்டில் இதற்காக கையெழுத்து போட்டு வந்த நிலையில் மதுரையில் இருந்த பக்ருதீன் அக்காலகட்டத்தில், கலவர வழக்கு ஒன்றின்
ட்ரையலுக்காக ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராக தென்காசியிலிருந்து மதுரைக்கு 5 பேர் வந்தனர்.இவர்கள் பக்ருதீனுக்கு ஏற்கெனவே சிறையில் பழக்கமானவர்கள் என்பதால் இவர்களை மதிய உணவிற்காக நெல்பேட்டைக்கு கூட்டி வந்தார் பக்ருதீன்.இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அங்கே வந்த மதுரை B1காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பால குமார்,''யாருடா நீங்க எல்லாம் வண்டியிலே ஏறுங்கடா''என்று சொல்ல,''அவங்க ட்ரையலுக்கு வந்திருக்காங்க.நான் தான் இங்க கூட்டி வந்தேன் சாப்பிட.வேணும்னா மதுரை தென்காசி உளவு பிரிவு போலீசை கேட்டு பாருங்க''என்று பக்ருதீன் சொல்லி இருக்கிறார்.''அப்ப நீ வண்டியிலே ஏறு'' என்று இன்ஸ்.பாலகுமார் பக்ருதீனிடம் சொல்ல..''ஏற்கெனவே உங்களை நம்பி வந்தேன்.வந்த இடத்துல எம்மேல இரண்டு வழக்கை போட்டீங்க ஒரு குண்டாஸ் போட்டீங்க.அதை உடைச்சிட்டு இப்பதான் வெளியில வந்திருக்கேன்.உங்களை நான் நம்பமாட்டேன்'' என்று பகுருதீன் சொல்லிக்கிட்டிருந்த போதே அங்கே வந்த மதுரை A.C என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை(அப்போது இவர் மதுரை A.C ) ''என்னடா வண்டியில ஏறுன்ன்னா ஏறமாட்டேன்குற'' என்று சொல்லிக்கொண்டே பக்ருதீனின் பனியனை கொத்தாக பிடித்து துப்பாக்கியை அவர் நெற்றிப்பொட்டில் வைத்து ''நீ வண்டியில ஏறலைன்னா சுட்டுருவேன்'' என மிரட்டி இருக்கிறார்.இதற்கும் அசையாத பக்ருதீன்...''நான் செத்தாலும் இந்த ஏரியாவ விட்டு வரமாட்டேன்'' என்று எகிற...இருவருக்கும் வாய்த்தகராறு
ஏற்பட்டிருக்கிறது.அப்போது வெள்ளதுரையுடன் இருந்த 2 எஸ்.ஐ.,ஒரு இன்ஸ்பெக்டர்,20 காவலர்கள் சேர்ந்து பக்ருதீனை
அடித்திருக்கிறார்கள்.

இதனைப் பார்த்த அப்பகுதி கடைக்காரர்கள் இடை மறித்து பக்ருதீனை போலீசிடமிருந்து மீட்டுள்ளனர்.பக்ருதீனை அடித்தபோது பக்ருதீன் தள்ளிவிட்டதில் வெள்ளத்துரை கீழே விழுந்திருக்கிறார்.இது வெள்ளதுரைக்கு அவமான உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அப்பொழுது வெள்ளத்துரை,''உன்னை கொல்லாம விடமாட்டேன்.இது வரைக்கும் 21பேரை சுட்டிருக்கேன்.உன்னையும் சுடாம விடமாட்டேன்.நான் சுடவில்லை என்றால் ஆம்பளையே இல்லை'' என கோபத்தில் கொந்தளிக்க, பக்ருதீனோ,''என்மரணம் அல்லாஹ் கையில் இருக்கிறது.அது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.நீ என்னை அநியாயமாக கொன்றால் நானும் உன்னை கொல்வேன'' என பதிலுக்கு எகிறி இருக்கிறார்.இந்த செய்தியை ஜூலை 23-29 தேதியிட்ட மக்கள் ரிப்போர்ட்டில், 'பண்றதை சொல்ல மாட்டேன்;சொல்றதை பண்ண மாட்டேன்-வைகை நகரை வெலவெலக்க வைக்கும் என்கவுன்ட்டர் வெள்ளத்துரை' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.இதில்,பக்ருதீன் குடும்பத்தினர்,வெள்ளத்துரை என இரு தரப்பையும் தொடர்பு கொண்டு அவர்களின் விளக்கங்களை அப்படியே பதிவும் செய்திருந்தோம்.

இந்நிலையில்,மறுநாளிலிருந்து பக்ருதீனை தீவிரமாக தேடத் துவங்கியது மதுரை காக்கி டீம்.பக்ருதீனின் சகோதரன் தர்வீசை
.பிடித்து சென்று துன்புறுத்தியது.குடும்பத்தினரையும் மிரட்டியது.இது குறித்து முதல்வரின் தனி பிரிவுக்கு கூட அவர்கள் கடிதம் எழுதினர்.போலீசின் பிடியில் சிக்காமல் அப்போது தலைமறைவான பக்ருதீனை தான் இப்போது சென்னை பெரிய மேட்டில் பிடித்ததாக சொல்கிறது போலீஸ்.

பக்ருதீன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில்,அத்வானியின் வருகையையடுத்து பைப் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது.இந்த வழக்கை பக்ருதீன் மீது போட்டது மதுரை போலீஸ்.ஆனால்,மதுரையின் முக்கிய பி.ஜே.பி பிரமுகர் ஒருவரே முஸ்லிம்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.இந்த வழக்கு திசை திருப்பப் படுகிறது.மதுரை முஸ்லிம்களில் பலர் எனது நண்பர்கள் என்று நம்மிடம் சொன்ன அவர், அத்வானி பயணத்தில் சென்ற கான்வாய்க்கு ஓட்டுனர்களாக இருந்த அனைவரின் மொபைல் எண்கள்,அவர்களின் விபரங்களை போலீஸ் அதிகாரிகள் என்னிடம் தான் வாங்கினார்கள்.இதற்கு முன் அத்வானி போகும் பாதையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்தனர் போலீசார்.என்றும் சொன்னார்.இதையும் அப்போது மக்கள் ரிப்போர்ட்டில் எழுதி இருந்தோம்.

பக்ருதீன் தலைமறைவானதன் விளைவு,இன்று அவர் மீது ஆடிட்டர் ரமேஷ்,வெள்ளையப்பன் கொலை வழக்கும்
சுமத்தப்பட்டிருக்கிறது.ஆயினும் அவரை போலீசார் மற்றும் மீடியா சொல்வது போல் பயங்கரவாதி என்று ஏற்றுக்கொள்ள
முடியாது.அவர் மீது போலீஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு சந்தேகத்திற்கிடமின்றி நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கவில்லை.அதனால்,ஒருவரது குற்றம் நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளியல்ல.என்ற சட்ட நெறிமுறைபடி பக்ருதீன் பயங்கரவாதியோ,போலீஸ் சுமத்தும் வழக்குகளில் குற்றவாளியோ அல்ல.

இதே போல மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கு சுமத்தப்பட்டுள்ள பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் ஆகியோருக்கும் இதே நிலை தான்.மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு போலீஸ் சொல்லும் ஒரே ஆதாரம்,பா.ஜ.க அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவான மங்கலான படக்காட்சி தான்.இதில் இருப்பது பண்ணா இஸ்மாயில் என்கிறது போலீஸ்.

ஆனால்,இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கிசான் புஹாரி உள்ளிட்டவர்கள் அந்த படத்தை பார்த்து இவர்
பண்ணா இஸ்மாயில் இல்லை என தெரிவித்துள்ளனர் என்கின்றனர் இவர்களது வழக்கறிஞர்கள்.இப்போது பண்ணா இஸ்மாயில் கைதாகி இருக்கும் நிலையில் காமிரா பதிவில் இருப்பது இவர் தானா என தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகமற நிரூபிக்க வேண்டியது போலீஸ் தான்.இந்த வழக்கில் நிறைய சந்தேகங்களை போலீஸ்தெளிவுபடுத்தவில்லை.குண்டு வெடிப்பு நடத்த பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு சொந்தமானது என்று சொல்லும் போலீஸ் அது குறித்து விசாரிக்கவே இல்லை என்பது உட்பட பல சந்தேகங்கள் கர்நாடக முதல்வரிடம் தமிழக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சமர்பிக்கப் பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனால் இப்போது வரை மதுரை பைப் வெடிகுண்டு,ஆடிட்டர் ரமேஷ் ,வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் பக்ருதீனும்,
மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் ஆகியோரும் போலீசாரால் சிக்க சிக்கவைக்கப்பட்திருக்கிறார்கள்.

என்ற கூற்றை மறுக்கும் ஆதாரங்கள் போலீசாரிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.உண்மை என்றால் அதனை நீதி மன்றத்தில் நிரூபித்து இவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.ஏனெனில் இவர்களால் மதுரை,மேலப்பாளையம்,கோவை முஸ்லிம்கள் பட்ட அவமானங்கள்,போலீஸ் சித்திரவதைகள்

கொஞ்ச நஞ்சமல்ல.இவர்கள் அப்பாவிகளாக இருந்து தண்டனை அடைந்து விடக்கூடாது என்பது தான் நமது கவலையே
தவிர,இவர்கள் குற்றவாளிகள் என்றால் உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப் படவேண்டும்.இவர்களுக்காக எந்த முஸ்லிமும் குரல் எழுப்ப மாட்டார்கள்.

பக்ருதீனைப் பொறுத்தவரை மதுரையிலிருந்து தலைமறைவான சில நாட்களிலேயே அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து எதற்காக தலைமறைவாக நேர்ந்தது என்று விளக்கம் அளித்திருந்தால் இன்று அவரது நிலை வேறு கட்டத்தை அடைந்திருக்கும்.அதை அவர்

சியா தவறியதன் விளைவே இன்று பல வழக்குகளை தன மீது சுமந்து நிற்பது என்பதைத் தவிர இதில் வேறென்ன சொல்ல
முடியும்.?

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)