முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தொடரும் பா ஜ க வினர் கொலை...பின்னணி என்ன? ஓர் பார்வை!!!


தமிழகம், ஜூலை 23: தொடரும் பா ஜ க வினர் கொலை, உண்மையில் மேற்படி கொலைகளை யார், எதற்காக செய்தார்கள் ? ஓர் அலசல் ரிப்போர்ட். 

‪‎கோயம்பேடு‬ விட்டல் கொலை 27.4.2012 .

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127-வது வட்ட பா.ஜனதா தலைவராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் விட்டல் பிணமாக கிடந்தார்.


கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தரபாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல் சுந்தரபாண்டியன் வீட்டுக்கு சென்று வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியுள்ளான் .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன் அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

‪டாக்டர்‬ அரவிந்த் ரெட்டி கொலை 23.10.12 .

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24ம்இரவு 7.30 மணியளவில்,பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .


கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர் . உடனே முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள் .


விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார் .
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .


‪#‎ராமேஸ்வரம்‬ குட்டநம்பு கொலை 7.7.13 ,

ராமேசுவரத்தை சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வந்தார்.சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.


விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது .இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் .

‪#‎நாகப்பட்டிணம்‬ புகழேந்தி கொலை 5.7.12 .

நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53),காலை நடைபயணம் சென்ற போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.


சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது:-
கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர் .இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினான். ஆனால் போலீஸ் விசாரணையில் .

கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து நில ஆக்கிரமிப்பு அடாவடி செயலில் ஈடுபடுவதும் , சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது . இவனால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது . முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார் .

‪#‎பரமக்குடி‬ முருகன் கொலை 19.3.13

பரமக்குடி. பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகன்இவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது .

‪#‎வேலூர்‬ வெள்ளையப்பன் கொலை .

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது.


வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர் .


இது தொடர்பாக ஜூலை 02,2013 வெளிவந்த தினமலர் செய்தியில் ''


வேலூர், புது பஸ்நிலையம் அருகே, இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், 45, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில், கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப் பட்டிருந்த வெடி குண்டை, கொலைக்கு அல்லது தப்பி செல்லும் போது, பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பைப் வெடிகுண்டுகள், தென் மாவட்டங்களில் பிரபலம் என்பதால், தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர், இதில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.


இப்படியாக இந்த பிஜேபி இந்து முன்னணியினர் குடிபோதை கந்துவட்டி கள்ளத்தொடர்பு நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு பாதிகப் பட்டவனால் துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்யப் பட்டபோது அந்த பழியை மற்றவர்கள் மீது போட்டு , பஸ் எரிப்பு கடையடைப்பு பந்த் நடத்தி அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் அடைகின்றனர் .இவர்களை அடக்கி ஒடுக்காமல் அதிமுக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று புரியவில்லை . 
கொலையாளிகள் யாராக இருந்தாலும் இதற்கு முற்று புள்ளி வைத்து மக்கள் முன் தெளிவு படுத்தினால் தான் பதற்றம் தணியும். அரசு செய்யுமா ???


நன்றி - தமிசுதீன் என்கிற முஹைதீன் (நாகை) 

முத்துப்பேட்டையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி- பா.ஜ.க. வினர் கைது



முத்துப்பேட்டை, ஜூலை 22: பா.ஜ.க. வின் மாநில பொதுச் செயலாளர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் என்பவர் கடந்த வெள்ளியன்று அவரின் அலுவலகத்திற்கு வெளியே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இந்த படுகொலையை கண்டித்து முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினர் பஸ் றியலில் ஈடுபட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர்.  மனித சமூகத்தில் மனிதர்களின் உயிர் பலியிடப்படுவதை எந்த ஒரு மனித சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. இந்த கொலையை காட்டி இஸ்லாமியர்கள் மீது வீன் பலி போட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும். 

ஆடிட்டர் ரமேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருவதாக கூறப்படுகிறது. இப்படுகொலையின் பின்னணியில் தொழில் போட்டிகள் ஏதும் உள்ளனவா என விசாரிக்கப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுருக்கும் நிலையில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் இக்கொலையை "ஜிஹாதிகள்" தான் செய்தார்கள் என கற்பனையான ஒரு கருத்தை கூறி இரு சமுதாய மக்களிடையே மத மோதலை தூண்ட முயற்சி செய்து வருகிறார்கள். 

மேலும் ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து சேலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் மகளிரணி தலைவி ராஜ ராஜேஸ்வரி என்பவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையின் பின்னணியும், ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கும் நேரடி தொடர்புகள் உள்ளனவா என்று எண்ண தோன்றுகிறது. இந்த கொலைக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. ஏனெனில் குஜராத்தில் பல்லாயிரக்கனக்கான மனித உயிர்கள் மிக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்டு நரபளியாக்கப்பட்டது இந்த மோடியின் ஆட்சியில் தான்.

எதுவாயினும் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமியர்களின் கருத்தாகும். ஆனால் வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் மீது பலி போடுவதை R.S.S., பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற மதவாத சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு:

ஜே. ஷேக் பரீத்

தமிழகத்தில் SDPI கட்சியை கண்டு பயந்து நடுங்கும் பா.ஜ.க.


தமிழகம், ஜூலை 22: சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் காலூன்ற மதவாத கட்சியான பாரதீய ஜனதாகட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சி தாங்கள் தான் எனவும்,நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறிக் கொண்டு கூட்டங்கள் போடுவதும்,இந்துத்வா தலைவர்களுக்கு ஏற்படும் சொந்தப் பிரச்சனைகளை மத ரீதியாக திசை திருப்புவதும் தொடர் கதையாகி போனது.  இவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் காவல்துறையும் அப்பாவி பொதுஜனங்கள் மீது வழக்கு போடுவதும் பிறகு நீதிமன்றம் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மோடி வேண்டுமானால் பாஜகவுக்கு தலைவராக இருக்கலாம்.இந்தியாவுக்கு அவர் தலைவரில்லை. அவரை விட சிறப்பான ஏன் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியான தலைவர்கள் நமது தமிழகத்தில் உண்டு.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பதில் சொல்ல பலமுறை தயங்கும் மோடியை, முன்னுக்கு பின் முரணாக பேட்டி கொடுக்கும் மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது என்ற செய்தி இந்துத்வா வாதிகள் மூலம் கசிவதை பார்த்தால் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு வேறு ஆள் இல்லாதாதால் மோடியை வேறு வழியின்றி தேர்ந் தெடுத்திருப்பார்களோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேரு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த வேளையில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மதச்சார்பற்ற இந்திய தேசத்தை மதவெறி கொண்டு பிளப்பதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே இந்து மகாசபையும், முஸ்லீம் லீக்கும் செய்த தவறை இனி இந்த தேசத்தில் அனுமதிக்க முடியாது.

ஆனால் பாஜக வின் செயல்பாடுகள் பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளது.

வேறு எந்த கட்சிகளும் செய்யத்துணியாத காரியத்தை பாஜக செய்ய துணிகிறது. ஆகவே எஸ்.டி.பி.ஐ கட்சி இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதனை பொறுக்க முடியாமல் பாஜக மறைமுகமாக இந்து முண்ணனியினரை தூண்டி விட்டு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு எதிராக நெல்லையில் புகார் செய்துள்ளது.  அந்த புகார் என்னவெனில் வருங்கால பிரதமர் மோடியினை எஸ்.டி.பி.ஐ கட்சி அவதூராக பிரச்சாரம் செய்வதாக புகார்.

இந்த கேடு கெட்ட புகாரையும் வாங்கி கொண்டு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜகவின் மோடியை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் விமர்சித்தார்கள் என்று பாஜக காரன் புகார் கொடுத்தால் கூட ஒரு வழியில் பார்த்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இந்து முண்ணனி மூலம் புகார் கொடுத்து, அதன் மூலம் மோடிக்கு அனுதாபத்தை பெற்றுக்கொள்ள பாஜக முயல்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகள் காட்டுகிரது என்றே கருதுகிறேன்.

எது எப்படியோ காங்கிரஸ் கட்சி பாஜக வை கண்டு பயப்படுவதை போல், பாஜக எஸ்.டி.பி.ஐ கட்சியினை கண்டு பயப்படுகிறது என்பதே உண்மை, மடியினில் கணம் இல்லையெனில் அரசியல் வழியில் பாஜகவுக்கு பயம் எதுக்கு.

நன்றி 


மாநில செய்தி தொடர்பாளர், BSI. கனி 

முத்துப்பேட்டையில் ரயில்வே ரிசர்வேசன் வர காரணம் TNTJ தான் ஆதாரங்கள் பல உள்ளன.





முத்துப்பேட்டை, ஜூலை 19: முத்துப்பேட்டையில் அகற்றப்பட்ட ரயில்வே முன்பதிவு மையத்தை மீண்டும் கொண்டுவர தவ்ஹித்ஜமாத் பலகட்ட முயற்ச்சிகளை மேற்கொண்டது அதன் பலனாக மறுபடியும் ரயில்வே முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது

உடனே ஊரில் உள்ள அனைத்து தரப்பினரும் தாங்கள்தான் இதற்கு காரணம் என போஸ்டரும் பிட் நோட்டீசும் போட்டு வருவதால் இதன் உண்மை நிலையை ஆதாரத்தோடு வெளி யிட்டுள்ளோம் இந்த உண்மையை அதிகமான மக்களுக்கு ஷேர் செய்து கொண்டு செல்லவும்.

ஆதாரம் 1

நாம் முதல் முதலில் இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊர் முழுவதும் ஒட்டிய லித்தோஸ் போஸ்டர் அப்போது நம் இனையதளத்தில் வெளியிட்ட செய்தி

http://www.tntjmtt.blogspot.com
ஆதாரம் 2

இந்த கோரிக்கையை வழியுறுத்தி முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் திருச்சி சென்று டிவிசனல் ரயிவே மேனாஜரை சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில் அது சம்மந்தமாக வெளியிட்ட செய்தி

http://www.tntjmtt.blogspot.com

ஆதாரம் 3

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வழியுறுத்தி தொகுதி எம் பி ஏகேஎஸ் விஜயன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில் அது சம்மந்தமாக வெளியிட்ட செய்தி
நன்றி 

செய்து இபுராஹிம் 

செக்ஸில் உச்சம் அடைதல் என்பது ஆணைவிட பெண்ணுக்கு, தாமதப்படுவது ஏன்? மருத்துவர்கள் தரும் தகவல்கள்.







மருத்துவம், ஜூலை 19: ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல்  வெளி ப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல்  இருக்கி ன்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libi dinal Energy), பெண்களை மன நோய்க்கு ஆளாக்கி வருகிறது என்றும் பாலியல் ஆய்வு சொல்கி றது.
மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைக ளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வ தில் தொடங்கி  பிள்ளைகளை அடிப்ப துவரை 40 வகைகள் எனச் சொல்கி றது அந்த ஆய்வு. மேலும், பெண்ணை உச்சகட்டம்  அடையவைப்பது தொழில் நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட் வரை அது தொடர்கிறது.
ஆண் பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அதாவது, ஒரு பெண் கலவியில் சுதந்தரமாக ஈடுபட்டு தன் மனநிலை மற்று ம் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சக் கட்டத்துக்கு ஆண்  உதவுவதுதான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள், புற விளையாட்டுகளில் (Foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண் கள் விரும்புகிறார்கள்.
பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக் (Erotic Site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக()மாற்ற வே ண்டும். பாலியலை  நமது தன்னமை வில் இருந்து (Sexual Act) கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல் (Basic Instinct) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாலுறவில் பெண் உச்ச நிலையை அடைய, பாலுறவில் கட்ட மைக்கப்பட் டுள்ள அனைத்து ஒழுங்கு விதிமுறைக ளையும்  உடைக்க வேண்டும். அதாவது, பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம்  அற்ற புரிதலுடன் சந்தோஷ மாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில்  உச்சக்கட்டத்தை அனுப விக்க முடியும்.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


உலகம், ஜூலை 19: உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் தங்களுடைய கணவன் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக சமையல், மற்றும் இன்னபெற செயல் பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி அசத்துவார்கள். எனவே கணவனிடமிருந்து மனைவிமார்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்று இங்கே காணலாம். 
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றைமனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்...!

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ் 

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி நடத்தும் 4-ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி அழைப்பு..


முத்துப்பேட்டை, ஜூலை 19: துபாய் வாழ் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் நான்காம் ஆண்டு நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி வருகிற 26-07-2013 ஆம் தேதி நடைபெற உள்ளது. இடம்: அல் தவார் பார்க் யூனியன் கோ ஆப்ரடிவ் பின் புறம். எனவே அனைவரும் தவறாது கலந்து கொண்டு இப்தார் விருந்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

இங்ஙனம்:

முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி 

துபாயில் உள்ள சில நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது..


துபாய், ஜூலை 18: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு துபாய், ஷார்ஜாஹ், அபுதாபி ஆகிய இடங்களுக்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. 

1)   ACCOUNTS: (Abu Dhabi)
      2 years experience required for a company.
      immediate joining, salary from 3000 - 4500
     Accommodation also provided. 
     Mail to your CV: sweetlandgmuae@gmail.com

2)   ACCOUNTS: 
      He should have experience of accountancy in fabrication field
      Salary from: 3000 - 5000 
      Mail to your CV: henstecher@yahoo.com

3)   IT STAFF, TRAINEE ENGINEER (Dubai)
      minimum one year experience in dubai 
      IT Security system like: CCTV camera, Access control, gates.
      Salary from: 3000 - 5000 
      Mail to your CV: henstecher@yahoo.com

4)  WEB & GRAPHIC DESIGNER; (Sharjah)
      IT Solutions company 
     salary starting form 2000- + benefits,
     Mail to your CV: 1xstudio1x@gmail.com
     Mobile #: 00971- 50 - 546 2040.

5)  WEB DESIGN DEVELOP & ACCOUNTING BACKGROUND: (Dubai) 
      Mail to your CV: hi_haja@hotmail.com.

6)  IT ADMINISTRATOR:
     Male with experience in related industry 
     Mail to your CV: itjobs@asiabolt.ae
     Mobile #: 00971 - 55 991 0207.

7)  DATA ENTRY OPERATOR: (Dubai)
      A well known online E commerce company is looking.
      minimum 2-3 year experience data entries with knowledge in excel, internet browsing.
      Mail to your CV: hrsouq@yahoo.com

8)  OFFICE ADMIN STAFF NEEDED
      Male / Female commerce Graduate with
      Experience in Admin responsibilities Indian.
      Salary from: 3,000 - 5,000
      Mail to your CV: henstecher@yahoo.com

9)  STOREKEEPER / OFFICE ASSISTANT, MALE GRADUATE:
      storekeeper / office assistant. male graduate with knowledge of MS Office,
      good communication skills required.
      Mail to your CV: hr_ed@hotmail.com

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ் 

ஏழை குடும்ப இஸ்லாமிய பெண்ணின் திருமண உதவி குறித்து நமது இணையத்தளத்திற்கு வந்த கடிதம்



திருநெல்வேலி, ஜூலை 16: அன்பார்ந்த எக்ஸ்பிரஸ் இணையத்தள வாகர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நமது எக்ஸ்பிரஸ் இணையத் தளத்திற்கு உதவி நாடி வந்த கடிதத்தை உங்கள் முன்பு பகிர்ந்து கொள்கிறோம். 

என் மூத்த சகோதரிக்கு மூன்று பெண் குழந்தைகள் , இரண்டாவது பெண் பொறியியல் கல்வி பயில கடந்த வருடம் உதவி கேட்டு நமது குழுவில் விண்ணப்பித்து இருந்தேன் . நல் உள்ளம் கொண்ட  சகோதர் கடந்த இரு வருடங்களாக கல்வி உதவி தொகை வழங்கி வருகிறார் . அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக .
சகோதரியின் மூன்றாவது பெண் இவ்வருட SSLC  தேர்வில் 483 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார் . அவரையும் + 1 வகுப்பில் சேர்த்துள்ளார் என் சகோதரி.

இப்பொழுது தனது முதல் மகள் சாஜிதா அவர்களுக்கு நிக்காஹ் செய்ய மணமகன் தேடி வந்தார் . அல்லாஹ் கிருபையால் ஒரு மணமகன் அமைந்துள்ளார். இன்ஸா அல்லாஹ் வரும் ரமலான் பெருநாள் முடிந்ததும் நிக்காஹ் வைக்க நினைத்துள்ளார் .

சகோதர்களுக்கு ஒரு வேண்டுகோள் .எனது மச்சான் (சகோதரி கணவர் ).தினசரி கூலி  ( drum  பெட்டி ) வேலை பார்க்கும் தொழிலாளி . என் சகோதரிக்கு தான் கஷ்டபட்டாலும் தன் குழந்தைகள் ஒரு பட்ட படிப்பு படித்து விட வேண்டும் என்ற எண்ணத்தால் தனது மூன்று பெண்குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.

முதல் பெண் Bsc படிப்பு முடித்துள்ளார். அவருக்குதான் இப்பொழுது நிக்காஹ் செய்ய தீர்மானித்துள்ளார் . நிக்காஹ் செய்ய பணமுடை உள்ளது . சகோதர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன் .

அதே சமயம் ஏழை குமாருக்கு திருமண உதவி செய்யும் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களையும் தந்தால் உதவியாக இருக்கும் .


நிக்காஹ் தேதி குறித்து இன்னும் என் சகோதரி தகவல் சொல்லவில்லை . இன்ஸா அல்லாஹ் எல்லாம் முடிவான பிறகு மறுபடியும் உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.


மேலும் தொடர்புக்கு:

அப்துல் ரஹ்மான் 

00974-33586521..........

நரேந்திரா மோடியை கண்டித்து பாஜக அலுவலகம் முற்றுகை: இந்திய தேசிய லீக் கட்சியினர் கைது:






சென்னை, ஜூலை 14: ஒரு தனியார் தொலைக்காட்சியில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு நரேந்திர மோடி  பதிலளிக்கையில், முஸ்லிம்களை நாயுடன் ஒப்பிட்டு கூறினார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன .


இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியினர் அதன் பொது செயலாளர் தடா அப்துல் ரஹீம் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜ க அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .
தமிழக பாஜக அலுவலகம் அமைந்துள்ள திநகர் வைதியராம் தெரு முழுவதுமே நூற்றுக்கும் மேற்ப்பட்ட  காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டனர் .



இதனால் அந்த பகுதி முழுவதுமே பதற்றமான சூழல் காணப்பட்டது .சரியாக மாலை 4 மணிக்கெல்லாம் தடா அப்துல் ரஹீம் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாகன அணிவகுப்புடன் வந்தனர் .
நாரே தக்பீர்  அல்லாஹ் அக்பர் -மோடியே உனக்கு எச்சரிக்கை -என்ற கோஷம் விண்ணை பிளந்தது .மோடியின் நாய்  வடிவிலான உருவபொம்மை கொளுத்தப்பட்டபோது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது .




 இறுதியாக பாஜக அலுவலகம் நோக்கி முன்னேற முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர் .பின்னர் காவல் துறை வாகனங்களில் அனைவரும் கைதுசெய்யப்பட்டு தி நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்க பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் .நோன்பு நேரம் என்று கூட பாராமல் மிகவும் குறுகிய நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்திய இந்திய தேசிய லீக் கட்சியினரை சமூதாய தலைவர்கள் ,மனித உரிமை ஆர்வலர்கள் ,வெகுவாக பாராட்டினார்கள் .



நேரடி களதொகுப்பு: ஜே: ஷேக் பரீத் 


தஞ்சையில் போலீஸ் அதிரடி: விபசாரத்தில் ஈடுபட்ட 5 அழகிகள் கைது


தஞ்சாவூர், ஜூலை. 14: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் லாட்ஜிகளில் தங்கி, லாட்ஜி உரிமையாளர் மற்றும் மேலாளர் அனுமதியுடன் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. அர்ச்சுணன் மேற்பார்வையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் லாட்ஜிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 தனியார் லாட்ஜிகளில் உரிமையாளர் மற்றும் மேலாளர் அனுமதியுடன் இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுப்பட்ட 5 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் லாட்ஜ் உரிமையாளர்களின் அனுமதியுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 தனியார் லாட்ஜிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பாலுச்சாமி, ராமலிங்கம், முரளிதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பட்டறை குளம் தூர்வாரும் பணியில் ஊழல்: திட்டத்தை கைவிட MMK, SDPI, VC ஆகிய கட்சிகள் கோரிக்கை.


முத்துப்பேட்டை, ஜூலை 14: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சி பராமரிப்பில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் நீர் ஆதாரமாக இருக்க கூடிய இந்த குளங்களில் வரும் வருமானம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள் கழிவு நீர் சூழ்ந்து குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனை ஆகிய அனைத்து கழிவுகளும் குளங்களில் கொட்டுவதால் அசுத்தமாக காட்சியளிக்கிறது. பல குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பால் குட்டைகளாக மாறி வருகிறது. 

பல குளங்கள் காணாமலும் போய் உள்ளது. இந்த நிலையில் நகரில் முக்கிய வீதியில் இருக்கும் பட்டறை குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் குளம் ஆறு போல் சாக்கடை தொட்டிபோல் மாறி காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இல்லாமலேயே போனது. சென்ற ஆண்டு இந்த குளத்தை தூர்வார 15 இலட்சம் செலவிடப்பட்டது. அதுவும் பொது மக்களுக்கு திருப்தியளிக்க வில்லை. பிறகு 5 இலட்ச ரூபாயில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அதுவும் பாலாகி அந்தரத்தில் தொங்குகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் குளத்தை முழுவதும் தூர்வாறி பயன்பாட்டிற்கு கொண்டு வர ரூபாய் 27 இலட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் மக்களுக்கு பயனில்லாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் பணி தொடராமலே கிடப்பில் கிடந்தது. இந்த நிலையில் அந்த நிதியைக்கொண்டு குளத்தை தூர்வாராமல் குளத்தின் கரை ஓரம் துப்புறவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டி மக்கள் வாக்கிங் செல்ல நடைபாதை டயல்ஸ் ஒட்டப்பட்டு நிறைவேற்ற பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து நேற்று பணியை துவக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் தடுத்தி நிறுத்தினர். 


இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் அவர்கள் கூறுகையில், ஏற்கனவே தூர்வாருகிறோம் என்ற பெயரில் மணலை எடுத்து விற்று கொள்ளை லாபம் அடைந்துவிட்டார்கள். மீண்டும் கொல்லையா? வேண்டவே வேண்டாம் என்றும், இந்த நிதி தற்பொழுது உள்ள குளத்தின் நிலைமையை முறையாக பராமரித்தாலே குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்றார். 


இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள், 27 இலட்ச ரூபாயை சொன்ன வேலைக்கு பயன்படுத்தாமல் பன்றிகள் நிறைந்து மலம் கழிக்கும் கருவைக் காட்டிற்க்குள் பொதுமக்கள் வாக்கிங் செல்ல நடைபாதை அமைக்க பயன்படுத்துவது பெரும் காமடியாக உள்ளது என்றும், காசு பார்க்கவே இந்த பணியை தொடர நினைப்பது கண்டிப்பிற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் குளத்தை முறையாக தூர்வாரி சுத்தம் செய்யாவிட்டால் எங்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார். 



இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் மகாலிங்கம் கூறுகையில், நகருக்கு நீர் ஆதாரம் விளங்கக் கூடிய இந்த குளத்தை இலாபகரமாக பார்க்காமல் மக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கின்ற குளத்தை அளவை வைத்து முறையான பணியை மேற் கொள்ளாவிட்டால் குளத்தின் நடுவே அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். 



தற்பொழுது குளத்தின் அளவு தனியார் ஆக்கிரமிப்பால் சுருங்கி இருந்தாலும் குளம் இயற்க்கை தோற்றத்திலிருந்து மாறவில்லை என்பது உண்மை. இந்த 27 இலட்ச ரூபாய் நிதியைக் கொண்டு குளத்தின் தூரை வாரி அந்த மணலை சுற்றுப்புறம் முழுவதும் அனைத்து கருங்கல் பிளேட் கொண்டு பரப்பி தளம் அமைத்து தடுப்புச்சுவர் கட்டப்பட்டால் கழிவு நீர் வடிவதை முழுவதும் தவர்க்கப்படலாம். அதன் மூலம் குளம் முழுவதும் சுத்தமாகி விடும். அதன் மூலம் குளம் மக்களுக்கு முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம் நகரில் வாழும் மக்களுக்கு நிலத்தடி நீர் சீராக கிடைக்கும் என்றார்கள் சமூக ஆர்வலர்கள். எனவே 27 இலட்சம் நிதியை கொண்டு குளத்தின் பராமரிப்புக்கு மட்டுமே செலவிடப்படுமா? முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம். 
source from: www.muthupettaiexpress.com

முத்துப்பேட்டையில் நாளை மத நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி...


முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை ஜாம்புவோனோடை தர்ஹா கமிட்டி சார்பில் மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, தமிழக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் இரா. காமராஜ் அவர்கள், தமிழக அரசு வக்பு வாரிய தலைவர் அ. தமிழ்மகன் உசேன், திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் கே. உலகநாதன், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். நாள்: 14-07-2013 மாலை 5 மணி, இடம்: முத்துப்பேட்டை ஜாம்புவோனோடை தர்ஹா.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டையில் பரபரப்பு குளம் தூறு வாராமல் வேறு பனி செய்ததை தடுத்து நிறுத்திய SDPI...







முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பேரூராட்சி பராமரிப்பில் குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பால் தூர்ந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில் நகரில் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பட்டறைக்குளம் சாக்கடை கழிவுநீரால் சூழ்ந்து ஆக்கிரமிப்புகள் நிறைந்து சாக்கடை குட்டையாக மாறியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு குளத்தை தூர்வார ஒதுக்கீடு செய்து தூர்வாரியதில் முறைகேடு நடந்ததாக குளம் தூர்வாரும் பனி நிறைவு பெறாமல் முடிந்தது. 

இந்த குளத்தின் தடுப்புச் சுவர் ஐந்து லட்சத்தில் கட்டியதும் தற்பொழுது சாதமாகி உள்ளது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த பட்டறை குளத்தை தூர்வார அரசு 27 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதில் சில குளறுபடி ஏற்பட்டதால் பனி தாமதமானது. இந்த நிலையில் ஒதுக்கப்பட்ட 27 இலட்ச ரூபாயில் தூர்வாரப்பட்டால் குளத்தின் துப்புறவு பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டி நடைபாதை அமைத்து டயல்ஸ் போட முடிவு செய்து பணியை நேற்று துவங்கினார். 

இதனால் பொது மக்கள் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் பனி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முத்துப்பேட்டை சோசியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக், மாவட்ட பொதுச் செயலாளர் நெய்னா முஹம்மது, நகரத் தலைவர் மைதீன், துணைத்தலைவர் நிஷார், செயலாளர் ஷேக் முகைதீன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சியின் பொறுப்பாளர்கள் பணியை தடுத்து ஜெ.சி.பி. இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேல் பேரூராட்சி பொறியாளர் முகம்மது ஆலிது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமூகம் ஏற்படவில்லை. இதனால் பணியை நிறுத்திவிட்டு ஜெ.சி.பி. இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கூறுகையில் இந்த திட்டம் வேண்டாம் என்று அமைப்பினர் கூறியதின் அடிப்படையில் பணியை நிருத்தியுள்ளோம் என்றார்.

மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த SDPI கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள், இந்த பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதனால் மக்கள் பணம் வீணாக சூறையாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு நல்ல முடிவை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு கடிதமும் எழுதி கொடுத்துள்ளோம் என்றும் அந்த கடிதத்தின் பதிலை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

தொகுப்பு:

ரிப்போட்டர் முகைதீன் பிச்சை   

முஸ்லீம்கள் மீது பழி போடுவதை ஆர்.எஸ்.எஸ்.நிறுத்திக் கொள்ள வேண்டும் !!!

கடந்த வாரம் வேலூரில் ஆர்.எஸ்.எஸ்.மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் படுகொலையைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 90 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளதற்கான புள்ளி விவரங்களை காவல்துறை வைத்துள்ளது.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் படுகொலையின் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினரே இருப்பதாக ரமகோபாலன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் வெள்ளையப்பனின் படுகொலையிலும் அது பிரதிபலித்துள்ளது. கடந்த சில நாட்களாக 'லவ் ஜிஹாத்' திற்கு எதிராக வெள்ளையப்பனின் கடும் எச்சரிக்கையே அவரின் படுகொலைக்குக் காரணம் என்று முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆனால் வேறு கோணங்களில் ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை என்று தெரியவில்லை. இந்து முன்னணியினருக்கு வேறு எதிரிகளே இல்லையா? அவர்களும் மனிதர்கள் தானே.! வட்டி, சொத்துப் பிரச்சனை, இன்னபிற தொடர்புகளில் எதிரிகள் எல்லோருக்கும் உண்டு.

ஆனால் மதப் பிரச்சனைதான் ஒரு மதம் சார்ந்த அமைப்பினரின் மரணத்திற்கு காரணம் என்று கூறுவதை முதலில் தவிற்க வேண்டும். எதிரிகளை அருகில் வைத்துக் கொண்டு எங்கேயோ தேடுவதுதான் தற்போதைய பல இழப்புகளுக்குக் காரணம். இது இந்து அமைப்பினர் என்று இல்லை. எல்லா அமைப்பினருக்கும் இது பொருந்தும்.

இந்தியா, ஜூலை 12: எதிரி இவனாகத்தான் இருக்கக் கூடும் என்று தன் பார்வை வேறொரு புறம் இருக்க உண்மையான எதிரி இதை சாதகமாகப் பயன் படுத்தி வெற்றி பெற்றுவிடுகிறான். இதை ஏன் நம் மக்கள் உணர்வதில்லை?

முஸ்லிம்களை சினிமா உள்ளிட்ட மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக தீவிரவாதியாக குத்தகை எடுத்துள்ளது அதைவிட கொடுமை.

இந்தியாவின் பெருந்தலைவர்களை கொன்றவர்கள் லிஸ்டில் எந்த முஸ்லிமும் இல்லை. காந்தி முதற்கொண்டு ராஜீவ் காந்தி கொல்லப் பட்டது வரையிலான வரலாற்றில் முஸ்லிம் அல்லாதவர்களே கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

தற்போது எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் அதில் முஸ்லிம்களை சம்மந்தப் படுத்தி திசை

திருப்புவதை அரசு முதற்கொண்டு செய்து வருகிறது.

ஏறகனவே பல ரூபங்களில் பழியை தாங்கி நிற்கும் முஸ்லிம்கள். தன் மீதுதான் பழி வரும் என்று அறிந்தும் இதுபோன்ற காரியங்களில் இறங்குவார்களா? என்ற நுண் அறிவுகூட இல்லாத அரசும் அதிகாரிகளும் இருக்கும் வரை இழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

கல்வியிலும் ஜாதியிலும் மேலோங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கவாதிகளுக்குமா இது புரியவில்லை?

முஸ்லிம்கள் மீது பழி போடுவதை முதலில் நிறுத்திவிட்டு உண்மையான குற்றவாளியை கண்டுபிடுக்க முனைப்புடன் களமிறங்க வேண்டியது அரசின் கடமை. பொதுமக்களும் இதில் அரசுக்கு உதவ வேண்டும். ஆர்.எஸ்.எஸும் இதற்கு விதிவிலக்கல்ல.


 தொகுப்பு:ஜே :ஷேக் பரீத் 

டீ கடை பெஞ்ச் : தமுமுக - ஜெயலலிதா: மோதலின் பின்னணி என்ன?







சென்னை, ஜூலை 11: படித்ததில் பிடித்தும்! தெரியாத தகவலும்? பேரணிக்கு தடை ஏன்? சவுக்கு பார்வையில் ”தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தோட கோரிக்கைப் பேரணியை தடை பண்ணிட்டாங்களே.. ஏன் மச்சான் ? எவ்வளவு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. தப்பு இல்லையா ? ” என்று வருத்தப்பட்டான் அப்துல் காதர்  .

”அதிமுகவோட வாக்குகளையும் வாங்கி 2 எம்.எல்ஏ சீட்டுல ஜெயிச்சு, கனிமொழிக்கு ஆதரவு குடுத்தாங்களே அது தப்பு இல்லையா” என்றான்அப்துல் நாசர்  .


”என்னதான் ஆச்சு… ? ஏன் அனுமதி குடுக்கலை ? ” என்று கேட்டான் ஹபீபுல்லா  .

”அனுமதிக்காக வியாழக்கிழமை காலையிலேர்ந்து தமுமுக நிர்வாகிகள் கமிஷனர் அலுவலகத்துலயே காத்துக் கிடந்தாங்க. எப்படியாவது கமிஷனரை சந்திச்சுடனும்னு முயற்சி பண்ணாங்க. ஆனா, கமிஷனர் இருந்துக்கிட்டே இல்லன்னு சொல்லச் சொல்லிட்டாரு. அரசாங்கத்துலேர்ந்து, பேரணிக்கு அனுமதி குடுக்கக் கூடாதுன்னு உத்தரவு வந்துடுச்சு. ”

”இந்த அளவுக்கு ஏன் ஜெயலலிதா உறுதியான நிலைபாட்டை எடுத்தாங்க.. ? ”

”ஜெயலலிதா தமுமுக, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நினைக்கிறாங்க. பெரும்பான்மை இந்துக்களோட விரோதத்தை சந்திச்சுக்கிட்டு, விஸ்வரூபம் படத்தை இஸ்லாமியர்களுக்காக தடை செஞ்சு கெட்ட பேர் வாங்கிக்கிட்டேன். ஆனா, கனிமொழிக்கு ஆதரவு குடுத்து, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நெனைக்கிறாங்க”

”சரி.. அந்த ரெண்டு ஓட்டு ஜெயலலிதாவுக்கு அவசியம் இல்லையே.. ”

”அவசியம் இல்லதான்.. ஆனா அந்த ரெண்டு ஓட்டு இல்லாம கனிமொழியும் தோத்துருந்தா, ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம் இல்லையா ? நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்… இப்போ எதிர் முகாமுக்கு போறியா… நான் ஏன் உன் பேரணிக்கு அனுமதி குடுக்கணும் அப்படின்னு ஜெயலலிதா நெனைக்கிறாங்க

அரசு விதிச்ச தடையை மீறி, தமுமுக பேரணிக்கு நீதிமன்றத்துலயும் அனுமதி கிடைக்காம போனதுக்கு முக்கிய காரணம், தமுமுக அமெரிக்க தூதரகத்துல நடத்துன தாக்குதல். இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள்தான், பேரணிக்கு அரசு விதிச்ச தடை சரிதான்னு தீர்ப்பளிச்சாங்க”

”சரி தமுமுகவுல என்ன நினைக்கிறாங்க… ? ”

”பேரணிக்கு அனுமதி குடுக்காததுக்கும், தங்களை அலைக்கழிச்சதுக்கும் சேத்து, கமிஷனர் ஜார்ஜ் மேல கடுமையான கோவத்துல இருக்காங்க… ஜார்ஜுக்கு சரியான பாடம் கத்துக்குடுக்கனும்னு நினைக்கிறாங்க..



தொகுப்பு:

ஜே :ஷேக் பரீத் 

முத்துப்பேட்டையில் வி.சி பிரமுகரை வெட்டியவனை உடனே கைதுசெய். கிராம மக்கள் சுடுகாட்டில் போராட்டம்






முத்துப்பேட்டை, ஜூலை 11: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாட்டை சேர்ந்தவர் வெற்றி (32) இவர் திருவாரூர் மாவட்ட விடுதலைகச் சிறுத்தை கட்சியின் துணைச் செயலாளராக உள்ளார். கடந்த 5-ம் தேதி இரவு முத்துப்பேட்டையிலிருந்து வீட்டுக்கு திரும்பும்போது காரில் வந்த 7 பேரைக்கொண்ட மர்ம கும்பல் வெற்றியை சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த வெற்றி தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் எதிரொலியாக அன்றைய தினம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து போலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறையை கண்டித்தும் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கோரியும் கம்மாளதெரு உட்பட 3 கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து,வீரப்பன், முருகானந்தம், சுந்தரி, வசந்தா, சரோஜா, முருகேஷ் உட்பட 30 குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர். 

மேலும் சமையல் செய்தும் சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய் துறையினரும், உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஈடுபட்டவர்களிடம் சுமூகம் ஏற்பட்டதால் போராட்டம் முடிவுற்றது. 


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)