முத்துப்பேட்டை, செப்டம்பர் 24 : முத்துப்பேட்டை ரயில்வேக்கு சொந்தமான புளிய மரம் ரயில்வே குடியிருப்பில் உள்ளது. இந்த மரம் அந்த இடத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த மரம் சுமார் 100 அடிக்கு பரந்தும் விரிந்தும் சுமார் 90 அடி உயரத்துக்கு
காணப்பட்ட புளிய மரம் அந்த பகுதி பொது மக்களுக்கு நிழலாக காணப்பட்டன. அப்போது அந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் உடும்பு ஒன்றை கண்டனர் அந்த உடும்பு மரத்திற்கு உள்ளே சென்றதால் அவற்றை பிடிக்க கம்பில் துணியை கட்டி அந்த மரத்து அடிப்பகுதியில் தீயை வைத்தனர். இதனால் அந்த மரம் மல மல வென தீ பற்றி பிடித்தது. இவற்றை அணைக்க முயன்றாலும் அவற்றை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் அந்த மரம் கீழே சாய்த்து.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை, செப்டம்பர் 24: அஸ்ஸாமில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட நமது இஸ்லாமிய சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 4 லட்சம் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உடுத்த ஆடைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் உடை இல்லாமல் அவதிப்படும் நிலையில் சென்னையில் உள்ள மக்கா பள்ளி தலைமை இமாம் சம்சுதீன் காசிமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தன்னார்வ தொண்டாக முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள குழுவினர்கள் கடந்த ஜும்மாஹ்
தொழுகைக்கு பிறகு முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜும்மாஹ் பள்ளி வாசலிலும் இது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட அனைத்து முஹல்லாவை சார்ந்த முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அதிகமான துணிகளை வாரி வழங்கியும் உள்ளனர். வசூல் செய்யப்பட்ட அனைத்து துணிகளையும் சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜித் தலைமை இமாமிடம்
கொண்டு சேர்க்கப்படும் வந்த துணிகளை பிரித்து அவற்றை சரி செய்யும் பணி நேற்று காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து இளைஞர்கள் மூலம் அவற்றை பிரித்தெடுத்து சரி செய்யப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரசீத் அலி (சிங்கப்பூர்)
முத்துப்பேட்டை, செப்டம்பர் 21: ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 28 , 16.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜனாப்.மர்ஹும் சுல்தான் மைதீன் ஓடாவி அவர்களின் பேரன் தீங்குலச்செல்வன் N. தீன் முஹம்மது முத்துப்பேட்டை ஆசாத் நகர் PM. முஹம்மது இபுறாஹீம் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M. ரிஜ்வானா அஜீம் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஆசாத் நகர் இமாம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)source from: www.muthupettaiexpress.comநமது நிருபர்ரிப்போர்ட்டர் AKL .அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டை, செப்டம்பர் 21: ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 28 , 16.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜனாப்.மர்ஹும் சுல்தான் மைதீன் ஓடாவி அவர்களின் பேரன் தீங்குலச்செல்வன் N. தமீம் அன்சாரி M.sc,(CS ) PDNTமுத்துப்பேட்டை ஆசாத் நகர் ஹாஜி S. முஹம்மது ஹனிபா அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M.பஜிலா பேகம் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஆசாத் நகர் இமாம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்
ரிப்போர்ட்டர் AKL .அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டை, செப்டம்பர் 20 : பேட்டை ரோடு அலியார் சந்து மர்ஹும் நா.சே. சேக் தாவூது அவர்களின் மகளும், மர்ஹும் S. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் நா.சே. முஹம்மது யூசுப் ராவுத்தர், மர்ஹும் நா.சே. ஹமீது சுல்தான், மர்ஹும் நா.சே. நாகூர் கனி, மர்ஹும் நா.சே. அப்துல் காதர், மர்ஹும், நா.சே. சாகுல் ஹமீது, ஆகியோரின் சகோதரியும், பர்வின் சைக்கிள் கம்பெனி S. அப்துல் அஜீஸ் அவர்களின் தாயாரும், A. முசுபூர் ரஹ்மான், A. நிஜாமுதீன், A. பாக்கர் அலி ஆகியோரின் பாட்டியுமாகிய "S. சுபைதா அம்மாள்"அவர்கள் இன்று காலை 11 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அண்ணாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் நமது முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from: www.muthupettaiexpress.com
பர்வின் சைக்கிள் கம்பெனி S. அப்துல் அஜீஸ்





சென்னை, செப்டம்பர் 18: முஹம்மது நபியை கேலிசெய்து சினிமா வெளியிட்ட யூதனைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட அண்ணாசாலையில் ஜமாதுல் உலமா, SDPI , TMMK . INTJ , ஜமாத்தே இஸ்லாமி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், INL , சுன்னத்துல் ஜமாஅத், ஜாமியத்துள் உலமா, முஸ்லிம் லீக், ஐக்கிய சமாதான பேரவை உள்பட 23 இயக்கங்கள் ஒன்று கூடி சாலைமறியலில் ஈடுபட்டு வந்தனர். இதில் போலிசாரால் இவற்றை கட்டுபடுத்த முடியாமல் திணறினர் மேலும், 23 இஸ்லாமிய அமைப்புகள் மீது தடியடி அடித்து மண்டைகள் உடைந்தது போராட்டகாரரகளை களைக்க போலீஸ் நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பதட்டநிலை அந்த பகுதியில் நிலவி வருவதால் மேலும் போலீஸ் அதிகமாக குவிக்கப்பட்டு சென்னை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்
வழக்கறிஞர் இல்யாஸ் (சென்னை)





முத்துப்பேட்டை, செப்டம்பர் 18 : முத்துப்பேட்டையில் அமெரிக்கா நாட்டில் முஹம்மது நபியை சித்தரித்து குறும்படம் வெளியிட்ட சம்பவம் நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ப்தி அடைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை தர்ஹா முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் தர்ஹாவை சுற்றி உள்ள அனைத்து வீடுகளிலும் மீதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கார், வேன், ஆட்டோ, இருசக்கர வானகம், ஆகிய வாகனங்களிலும் சிலர் கருப்பு பேஜ்களை அணிவித்து வளம் வருவதால் முத்துப்பேட்டையில் பெரும் பரப்பானது.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த தர்ஹா டிரஸ்டி முதன்மை அரங்காவலர் S.S. பாக்கர் அலி சாஹிப் அவர்கள். அமெரிக்காவின் அடாவடிக்கு எல்லையே இல்லாமல் போகிவிட்டது என்றும், அண்டை நாடுகளுடன் சீண்டுவதையே தொழிலாக கொண்டிருந்த அமெரிக்கா இன்று இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வேளையில் இறங்கியது மிகவும் வேதனையான விசயமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்கா அரசு இது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் மட்டுமல்லாது அந்த கொடிய செயலுக்காக உலக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கறுப்புக் கொடி போராட்டம் தொடர்ந்து மூன்று நாளைக்கு நடைபெறும் என்றும் இதன் மூலம் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை












உலகம், செப்டம்பர் 17 : நமது உயிரிலும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இழிவு படுத்தும் விதமாக சினிமாவை வெளியிட்ட யூத இரு பயங்கரவாதிகளைக் கண்டித்து உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த சகோதரர்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ள மாற்று மத சகோதரர்களும் நம்முடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் சவூதி அரேபியா, துபாய், சூடன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா, குவைத், மலேசிய, பஹ்ரைன், எகிப்த், ஆப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா, அமெரிக்க, லண்டன் ஆகிய நாடுகளில் மாபெரும் எதிர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் இந்த கொடியவனை தூக்கில் போடா வேண்டும் என்று உலக மக்கள் கோசங்களையும் எழுப்பி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.







முத்துப்பேட்டை,
செப்டம்பர் 17 :
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை,
மாவட்டத்தின் கடைக்கோடி ஊராகும்,
இந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் லகூன் எனும் தீவுகள் நிறைந்த அலையாத்தி காடுகள்,
முத்துப்பேட்டை தர்ஹா,
மற்றும் கோவில்கள் என சுற்றுலா தளங்கள் நிறைந்த பகுதியாகும்.
இதுக்கு எடுத்துக் காட்டாக புதிய பேருந்து நிலையம் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையம் 1990
ல் கட்டிதிறக்கப்பட்டது என்றாலும் இன்னும் அதை புதிய பேருந்து நிலையம் என்று தான் அனைத்து மக்களாலும் அழைக்கப்படுகிறது.
மேலும் இன்னும் முறையாக செயல் படாததால் ஒவ்வொரு ஆட்சிகாலத்திலும் ஒவ்வொரு வருடத்திலும் புதிப்பிக்கப்பட்டு இந்த பேருந்து நிலையத்தை நடைமுரைப்படுத்துவார்கள்.
சில நாட்கள்,
சில மாதங்கள் ஆனதும் பழைய குருடி கதவ திரடி என்ற பல மொழிக்கொப்ப மறுபடியும் பேருந்துகள் இங்கு வந்து செல்லாமல் இருந்தது.
இதனால் புதிய பேருந்து வளாகம் அப்படியே வெறிச்சோடி போகிவிடும்,
மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும்.
இதுதான் இந்த புதிய பேருந்து நிலையத்தின் 20
வருட பரிதாப நிலையாகும்.
ஆனால் அ.
தி.
மு.
க.
ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கம் போல் இந்த புதிய பேருந்து நிலையத்தை முறைபடுத்த எண்ணியபோது முத்துப்பேட்டை நகரத்தில் உள்ள பொது நல அமைப்புகள் சீரமைத்து போட்டால் பத்தாது என்றும்,
இவற்றை நிரந்தரமான நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அதன் விளைவாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு படி பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தை முழுமையாக சீரமைத்து,
சில சகல வசதிகளுடன் சில மாதங்களுக்கு முன்பு புது பொலிவுடன் திறக்கப்பட்டது.
இதில் காவல்துறை,
போக்குவரத்து துறை உதவியுடன் பேருந்துகளும் முறையாக உள்ளே வந்து சென்றது.
இதன் மூலம் சுமார் இருபது ஆண்டுகால கனவு நனவாகியதை கண்டு பொது மக்களும்,
பயணிகளும் மற்றும் அப்பகுதி வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இந்த மகிழ்ச்சி அடைந்த சில மாதங்களில் மகிழ்ச்சியில் "
இடி"
விழுந்தது போல் பேருந்துகள் இங்கு சரிவர வராமல் போனதுடன் இதனால் பயணிகளின் கூட்டம் குறைந்தது.
இதனால் பழைய நிலைக்கு பேருந்து நிலையம் திரும்பி விடுமோ என்ற கேள்விக்குறியில் உள்ளது.
மேலும் பேருந்து நிலையம் புதுபிக்கும் போது பெயரளவில் போடப்பட்ட சாலை கப்பிசாலையாக மாறி ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்,
குழியுமாகவும் மேலும் சேரும்,
சகதிமாகவும் மாறி பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
பேருந்து நிலையத்துக்குள் வரும் பயணிகள்,
மற்றும் இரண்டு சக்கரத்தில் வருபவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள் இதனால் பயணிகள் பேருந்து நிலையத்தில் கூட்டம் மிக குறைவாகத்தான் காணப்படுகிறது.
இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம்,
மறைவாக இருப்பதால் பயணிகளுக்கு தெரியாத வகையில் அமைத்திருந்தாலும் அவற்றை பார்பதற்கு ஆட்கள் இல்லாததால் இலவசமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த இடத்தில் மாற்று திறநாளிகளுக்கு கட்டப்பட்ட கழிப்பறையும் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தா.
மு.
எ.
ச.
நிருவாகயும் சமூக ஆர்வலருமான P.
உலக நாதன் அவர்கள் கூறியதாவது,
தமிழ் நாட்டில் எந்த ஒரு பேருந்து நிலையமும் முத்துப்பேட்டை பேருந்து நிலையம் போல் குண்டு குழியுமாக மிக மோசமான நிலையை காண முடியாது என்றும், 1990
ல் திறக்கப்பட்ட பின் பேருந்தே செல்லாமல் மோசமான நிலை உருவாகி உள்ளது என்றும்,
சென்ற ஏப்ரல் 20
ஆம் தேதி முதல் நலச்சங்கம் முயற்சியால் பஸ் மறியல் செய்து பேருந்து நிலையம் உயிர் பெற்று வரும் நிலையில் மழைக்காலம் தொடங்கி விட்டதால் சேரும் சகதியும்,
குண்டும்,
குழியுமாக காட்சி தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஓட்டுனர்கள் வேதனையுடன் பேருந்தை இயக்குவதுடன் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் பேரூராட்சி நிர்வாகம் இன்னும் நடவடிக்கை எடுக்காதது பேருந்து நிலையம் மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுமோ என்று மக்களுடன் நாங்களும் ஏங்குகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வர்த்தகக் கழக கெளரவ தலைவர் இரா.
திருஞானம் அவர்கள் கூறியதாவது,
பேருந்து நிலையம் நடைமுரைபடுத்தியத்தில் வியாபாரிகள் மிகுந்த சந்தோசம் அடைந்தார்கள் என்றும்,
அந்த பகுதியும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் எனவே இவற்றை பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து அவற்றை தக்க வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த SDPI
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A.
அபூபக்கர் சித்திக் அவர்கள் கூறியதாவது,
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை தர்ஹா டிரஸ்டி முதன்மை அரங்காவலர் S.S.
பாக்கர் அலி அவர்கள் கூறியதாவது,
தர்ஹா,
லகூன் சிறப்பு மிக்க பகுதிகளின் சுற்றுலா தளமாக காணப்படும் இந்த ஊருக்கு அடையாள சின்னமாக இந்த பேருந்து நிலையம் காணப்படுகின்றன என்றும்,
தற்போதைய நிலைமையை காணும் பொது வரும் சுற்றுலா பயணிகள் கேவலமாக நினைக்கும் நிலமை உருவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் கோ.
அரூனாச்சலம் அவர்கள் கூறியதாவது,
பேருந்து நிலையங்கள் இல்லாத எத்துணையோ ஊர்கள் இருக்கும் வேளையில் இருக்கின்ற இந்த பேருந்து நிலையத்தை நடைமுறையில் தக்க வைத்துக்கொள்வதுதான் புத்திசாலி தனம் ஆகும்.
சென்ற ஆட்சியில் இந்த நகரத்தை தனி தாலுக்காவாக அறிவித்து விரைவில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
இதில் இந்த பேரூராட்சியை நகராட்சியாகவும் மாற்ற திட்டமும் பரிசீலனையில் இருக்கும் இந்த வேளையில் இந்த பேருந்து நிலையம் சுற்று புறமும் சிமெண்ட் சாலையாகவும் மாற்றி,
சுற்று சுவரும் எழுப்பி சுற்றுப்புற காலி இடங்களில் வணிக வளாகமும் கட்டி வண்ண விளக்குகள் அமைத்து அலங்கரித்தால் இந்த ஊரின் பெருமை தமிழகம் முழுவதும் உள்ள சில கேவலமான பேரூராட்சிகள் நம்ம ஊரை ஓர் பாடமாக எடுத்துக் கொள்வார்கள்.
இதற்க்கு நிரந்தர் தீர்வு தான் என்ன என்று பொறுத்திருந்து பாப்போம்...
source from:
www.
muthupettaiexpress.
com,
www.
mttexpress.
com,
www.
muthupettaixpress.
com,
தொகுப்புரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை