முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை கலவரம் -இந்துமுன்னனிக்கு SDPI பொதுசெயலாளர் நிஜாம் முஹைதீன் எச்சரிக்கை !!

கடந்த 03.09.2014 அன்று முத்துப்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வணிக வளாகம் மற்றும் வீடுகளின் மீது சமூகவிரோதிகள் கல், உருட்டுக்கட்டை, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் முத்துபேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சதி திட்டம் தீட்டி மதக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், இந்து முன்னணி மற்றும் பிஜேபி கட்சியினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு தகுந்தாற்போல் இரவு நேரங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்க கூடிய பகுதிக்குள் ஊர்வலம் நடத்தி வன்முறையை தூண்டி வருகின்றனர். ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளின் மீது கற்களை வீசுவதும், ஆபாசமான முறையில் நடந்துகொண்டு, மத வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வன்முறை நடவடிக்கைகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்த கலவர கும்பலலுக்கு தலைமை ஏற்று நடத்திவருபவர் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு என்ற முருகனாந்தத்தம் ஆவார்.

ஆகவே கருப்பு முருகானந்தம் தலைமையில் வன்முறையை நிகழ்த்தும் சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, முத்துபேட்டையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டி, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் குழு புகார் மனுவினை அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கையினை மேற்க்கொள்வதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களையும் மற்றும் முத்துபேட்டை ஊர் ஜமாஅத் நிர்வாகிகளையும் நேரில் சென்று சந்தித்து சம்வத்தின் உண்மை நிலைமையை கண்டு அறிந்தனர்.

இந்த நேரடி ஆய்வில் திருவாரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் M.A.லத்தீப், மாவட்ட பொதுச் செயலாளர் நைனா முஹம்மது, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் குழு மற்றும் முத்துபேட்டை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முத்துப்பேட்டை கலவரத்திற்கு காவல்துறையும் உடந்தை -INTJ மாநில செயலாளர் பிர்தவ்சி பரபரப்பு குற்றச்சாட்டு !!!





முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி சார்பில் கடந்த 03-09-2014 அன்று விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டது .அப்போது ஊர்வலத்தில் வந்த ரவுடி கும்பல்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் மீது கல் வீசி தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டனர்.இதனால் முத்துப்பேட்டையில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு ,அமைதியற்ற சூழல் உருவாகி மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .இதனை அறிந்த இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் முத்துப்பேட்டை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் .இந்நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் பிர்தவ்சி முத்துப்பேட்டைக்கு வருகை தந்து இந்துமுன்னணி வன்முறை கும்பல்களால் தச்க்குதளுக்குள்ளான வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் .பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .

அப்போது பேசிய அவர் ,விநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்ற உத்தரவு மீரப்பட்டுள்ளதகவும் , விநாயகர் ஊர்வலம் செல்லும் நேரம் சரிவர பின்பற்ற படவில்லை என்றும் இதற்கு மாவட்ட காவல்துறையின் அலட்சிய போக்கே கரணம் என்றும் குற்றம் சாட்டினார் .கடந்த 20 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் விநாயகர் ஊர்வலம் சென்று வந்ததாகவும் ,இதனை நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண உதவியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ,இதற்கு பெரிதும் முயற்சி எடுத்து வெற்றி காண போராடியது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளரான முத்துபேட்டை ஷிப்லி என்றும் பெருமிதத்தோடு கூறினார் .

மேலும் வரக்கூடிய காலங்களில் இஸ்லாமியர்களின் பகுதிகளுக்குள் விநாயகர் ஊர்வலத்தை அறவே வர விடாமல் தடுப்பதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சட்ட ரீதியிலான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ,பிர்தவ்சி கூறினார் .

முன்னதாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் பிர்தவ்சி மற்றும் ரஸ்தா செல்வம் ,பியுட்டி நவாஸ்கான் , கவுன்சிலர் பாவா ,நிஜாம் ஆகியோர் திருத்துறைபூண்டியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரை சந்தித்து பேசினார் .

செய்தி :ஜே : ஷேக் பரீத்


முத்துப்பேட்டையில் இந்து முன்னணி வெறியாட்டம் -தமுமுக மாநில செயலாளர் கோவைசெயயது நேரில் ஆறுதல் !!















முத்துப்பேட்டையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 18 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது அவர்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட வீடு மற்றும் கடைகளை தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது அவர்கள் முத்துப்பேட்டை நகர தமுமுக நிர்வாகிகளிடம் நிலவரத்தை கேட்டரிந்தார் உடன் மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்


முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம் -TNTJ மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி நேரில் ஆய்வு !!!


முத்துப்பேட்டை வினாயகர் ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை தவ்ஹித்ஜமாத் மாநில செயளாலர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி மற்றும் மாவட்ட மாநில நிர்வச்கிகள் நேரில் சந்ந்திப்பு ஆறுதல்கூறினர்.
முத்துப்பேட்டை வினாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அடித்து நொருக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே!!

சம்பவம் நடந்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்க்கு சென்ற தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் நிலமையை நேரில் ஆய்வுசெய்தனார்

உடனடியாக மாவட்ட மாநில நிர்வாகிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது மாநில நிர்வாகிகள் மூலமாக சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது

மாவட்ட மாநில நிர்வாகிகளின் ஆலோசனைபடி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர்

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு ஆவேசமாக களத்தில் இறங்கிய சகோதரர்களிடம் எதையும் சட்டப்படி செய்வதில்தான் வெற்றிகிடைக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவ்ஹித்ஜமாத் ஆவனசெய்யும் என உறுதிகொடுக்கப்பட்டது

அப்பொழுதே மஸ்ஜித்நூரில் அவசர ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டது உடனடியாக பாதிக்கட்ட சகோதரர்களை அழைத்துத்துசென்று காவல்துரையில் புகார் செய்வது என முடிவு செய்யப்பட்டது

புகார்கொடுக்க காவல்நிலையம் சென்ற நிர்வாகிகளிடம் புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

நடந்த அசம்பாவிதங்களுக்கு காரனமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் தாமதாகும் பட்சத்தில் மாநில தலைமையின் ஆலோசனைபடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்!! என்று தவ்ஹீத் ஜமாஅத் எச்சரித்துள்ளது .


முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லீம்கள் வீடுகள் மீது தாக்குதல் -பாஜக மாநில பொது செயலாளர் முருகானந்தம் மீது வழக்கு பதிவு !!!

முத்துபேட்டை, செப்டம்பர் 04:  முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில ஊர்வலம் சென்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியது. இதுகுறித்து பாதிக்கப்பட்டபவர்கள் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஊர்வலத்தில் தலைமை வகித்த பொன்னுச்சாமி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் உப்பூர் இளமாறன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...!!!





முத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 மணிக்கு ஜாம்புவநோடையில் தொடங்கிய ஊர்வலம் மிகவும் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்று சரியாக 6:15 மணிக்கு ஆசாத் நகர் பாலத்தை வந்தடைந்தது. கடந்த 01-09-2014 அன்று மாவட்ட போலீஸ் சூப்பிராண்டு காளிராஜ் மகேஷ் குமார் தலைமையில் முத்துப்பேட்டையில் அனைத்து முஹல்லா வாசிகள் முன்னிலையில் நடைபெற்ற அமைதிக்கான வழிமுறைகள் கூட்டத்தில், விநாயகர் ஊர்வலத்தை 5 மணிக்கு முன்னதாகவே இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளை கடந்திட வேண்டும் என்றும், பள்ளிவாசல் அருகில் நெருங்குகின்ற வேளையில் பாங்கு சொல்லப்பட்டு முடியும் வரை ,பள்ளிவாசலில் இருந்து சிறிது தூரத்திற்கு முன்னால் நின்று செல்ல வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அதனடிப்படையில் சரியாக 6:15 மணிக்கு ஆசாத்நகர் மேம்பாலம் அருகில் வந்துகொண்டிருந்த ஊர்வலத்தை தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் நிறுத்தி வைத்தனர். இதனிடையே புதுக்காளியம்மன் கோயிலிலிரிந்து எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலை ஆசாத்நகர் தீன் பில்டிங் அருகிலும் ,அதே போல் ஆலங்காட்டிளிருந்து எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலை புதிய பேரூந்து நிலையம் அருகிலும் தடுப்பு வேலிகள் போடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே தீன் பில்டிங் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியினர், தங்களை ஆசாத் நகர் பாலம் அருகே செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி கூச்சல் குழப்பமிட்டனர் தடுப்பு வேலிகளை தகர்த்து முன்னேற முயற்சித்தவர்களிடம் தஞ்சை மாவட்ட எஸ்பி தர்மராஜ் சமாதான படுத்தினார் .

அப்போது அதிலிருந்த வன்முறையாளர்கள் துலுக்க நாய்களா போன்ற சட்டவிரோத கோஷங்களை எழுப்பினார்கள். இதனை கவனித்து கொண்டிருந்த தஞ்சை மாவட்ட எஸ்பி தர்மராஜன் கடும் எச்சரிக்கை விடுத்தார் .பின்னர் பாங்கு முடிந்தவுடன் ஆசாத் நகர் பாலம் அருகே நிருத்திவைக்கப்பட்டிருந்தவர்கள் பாலத்தின் வழியாக ஆசாத் நகர் முக்கத்தை கபாந்து சென்றனர் .

பின்னர் அங்கிருந்து ஆமை வேகத்தில் சென்ற ஊர்வலத்தினர் சரியாக இரவு 8 மணியளவில் பழைய பேரூந்து நிலையத்தை வந்தடைந்தனர் . பழைய பேரூந்து நிலையத்திலேயே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர் .அப்போது கலவரத்தை தூண்டும் விதமாக பழைய பேரூந்து நிலையத்தில் இயங்கி வரும் இஸ்லாமியருக்கு சொந்தமான அஜந்தா மளிகை கடையின் சட்டர் மீது கல்வீசி தாக்கினர் .இதில் அந்த கடையின் டியுபு லைட்சேதம் அடைந்தது .கூட்டத்திற்குள் நின்று செய்தி சேகரித்து கொண்டிருந்த என் மீதும் இன்னும் சக பத்திரிக்கையாளர்கள் மீதும் கல்வீசி தாக்கினார்கள் .இதில்balattha காயம் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினோம் .பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம் .

பேரூந்து நிலையத்தில் காவல்துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை காலால் எட்டிஉதைத்து அங்கிருந்து திபு திபு வென கட்டுப்பாட்டை இழந்த வன்முறை கூட்டத்தினர் ,புதுபள்ளிவாசல் வரை ஓட்டம் பிடித்தனர் .பின்னர் ஆமை வேகத்தில் வன்முறை கோஷங்களை எழுப்பிக்கொண்டு நகர்ந்த ஊர்வலகாரர்கள் சரியாக 8:30 மணிக்கு கொய்யா வீட்டின் அருகே உள்ள முக்கத்தை வந்தடைந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வன்முறை கும்பல் ,கொய்யா வீட்டிற்கு அருகே உள்ள நேனா மூஸா என்பவருக்கு சொந்தமான வீட்டின் கேட்டை காலால் எட்டி உதைத்து தாக்கினர் .இதனை காவல்துறையினர் kaifatti வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் .பின்னர் சரியாக 8:45 மணிக்கு பங்களாவாசலை வந்தடைந்த வன்முறை கும்பல் அப்பகுதில் உள்ள தீன் மளிகை உரிமையாளர் நவாஸ் வீடு , ASN புருகானுதீன் வீடு , SLM சாஹிபு மரைக்காயர் வீடு முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் இலியாஸ் மாமனார் வீடு , நதீம் வீடு ,உள்ளிட்ட 10 வீடுகளை ஊர்வலத்தில் வந்த வன்முறை கும்பல்களால் கல்வீசி தாக்கபட்டுள்ளன .இதில் பலர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின .
இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் பங்கலாவாசல் அருகே திரண்டனர் .பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும் ,சரியாக பாதுகாப்பு வழங்காத அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர் .

இந்துமுன்னணியினர் நடத்திய ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் முத்துப்பேட்டை முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் .இதனிடையே கொய்யா திருமண மண்டபம் அருகே மணி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை யாரோ சில மர்ம ஆசாமிகள் தீயிட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது .
வன்முறையில் தொடர்புடையவர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அமைதி பூங்காவை திகழும் முத்துபேட்டையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம் .


முத்துபேட்டையில் நடைபெற்ற இன்று விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்கள் வீடுகள் மீது கல்லெறிந்து தாக்குதல்

முத்துபேட்டை, செப்டம்பர் 03: முத்துபேட்டையில் நடைபெற்ற இன்று விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்கள் வீடுகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் முஸ்லிம்கள் வீடுகள் சேதமாகி உள்ளது. அந்த செயலை செய்த காவிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முத்துப்பேட்டையில் உள்ள அணைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அணைத்து முல்லாஹ்வைச் சேர்ந்த சகோதரர்களும் கலவரத்தில் ஈடுபட்ட காவிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருகிறார்கள். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பதற்றமாக உள்ளது.



ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் -நூறு இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றுவேன் !பாஜக எம்பி யின் தேச விரோத பேச்சு !!!

டெல்லி: இந்து பெண் ஒருவரை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டால் அதற்கு பதிலடியாக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. 
ஒரு இந்துபெண்ணுக்காக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றுக: பாஜக எம்.பி. பேச்சு!!
பாஜகவின் சர்ச்சை முகங்களில் ஒருவர்தான் யோகி ஆதித்யாநாத், நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றின் மீது பேசி கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார். 

கடந்த 2007ம் ஆண்டில், கோரக்பூரில் இன வன்முறையை தூண்டி விட்டதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறார், இந்த நிலையில் யோகி ஆதித்யாநாத் பேசிய வீடியோ பேச்சுதான் புது சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. 

அதாவது தேதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்றில் தனது ஆதரவாளர்கள் முன்பாக பேசுகையில், ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் பதிலுக்கு 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

 வீடியோவில் பதிவான இந்த காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் இன்று கேட்டதற்கு யோகி ஆதித்யாநாத் பதிலளிக்க மறுத்து விட்டார். அத்துடன், வீடியோ ஒன்றை வெளியிடுவதற்கு முன்பாக அது குறித்து தீர ஆய்வு செய்ய வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு என்றார்.

முத்துப்பேட்டைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்கிட உதவிக்கரம் நீட்டுங்கள் -தமுமுகவினர் வேண்டுகோள்!

நமது ஊரான முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 2006 முதல் 8 ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்துவருகிறது. சாலை விபத்துகள் மற்றும் எதிர்பாராத பாதிப்புகளிலும், மழைகாலங்கள் போன்ற இயற்கை பாதிப்புகளிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்துவந்துள்ளது.
















இந்நிலையில் 8 ஆண்டுகளை தாண்டிவிட்டதால் ஆம்புலன்ஸ் பழுதடைந்து தொடர்ந்து 
பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மிக குறைந்த கட்டணத்திலும், பல நேரங்களில் இலவசமாகவும், இலாப நோக்கற்ற அடிப்படையில் செயல்படுத்தியதாலும் போதிய இருப்பு நிர்வாகத்தில் இல்லாமல் போய்விட்டது. 


எனவே இன்ஷா அல்லாஹ் மீண்டும் நமது சமுதாய மக்களின் உதவியோடும், ஒத்துழைப்போடும், பிராத்தனைகளோடும் நமது ஊருக்கான புதிய ஆம்புலன்ஸ் வாங்க முடிவெடுத்துள்ளோம். ஆகவே தாங்கள் தாராளமாக நிதியுதவி செய்து சமுதாயப்பணிகளுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆம்புலன்ஸ்க்கான பொறுப்புக்குழுவை தொடர்புகொண்டு தங்களுடைய நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

S.ஹூமாயூன் கபீர் – 7845416011 
M.சம்சுதீன் – 7358159830 
N.R.அலி – 9791401101 
L.நிஜாம் – 9715394088 
வழக்கறிஞர் தீன் முஹம்மது – 9865557556 

உங்கள் நண்கொடைகளை கீழ்கண்ட பேங்க் அக்கவுண்டிற்கும் அனுப்பலாம்...
TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM AC NO - 122602000000503 INDIAN OVERSEAS BANK MUTHUPET BRANCH உங்கள் நண்கொடைகளை எதிர்பார்த்து மக்கள் சேவையில்... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முத்துப்பேட்டை நகரம், திருவாரூர் மாவட்டம்

பீகாரில் மண்ணை கவ்விய மதவாத சக்திகள் -இந்தியா முழுவதும் மண்ணை கவ்வ வைக்க முடியுமா ?

மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்றுவாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பா.ஜனதா 7 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் ஒரு

தொகுதியிலும் வென்றது. குறிப்பாக பீகாரில் தேர்தல் நடைபெற்ற 10 தொகுதிகளில் 4 இடங்களை மட்டுமே பா.ஜனதா பிடித்தது. 6 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி வசம் வந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளையும் பா.ஜனதா இழந்தது. இவற்றில் 3 தொகுதிகள் ஏற்கனவே அக்கட்சி வசம் இருந்தவை. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி குறித்து நிதிஷ் குமார் கூறுகையில், “நரேந்திர மோடி அரசு மீது வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்திய இந்த வெற்றி காட்டுகிறது. பா.ஜனதாவின் வகுப்புவாத செயல்பாடுகளை தடுக்க இந்த கூட்டணியில் இடதுசாரிகளையும் சேர்க்க வேண்டும்” என்றார்.

பீகாரில் லாலுவும் நித்திசும் இனைந்து வெற்றி பெற்று இருப்பது இந்தியா முழுவதிலும் உள்ள மதசார்பற்ற சக்திகளுக்கு ஒரு புதிய தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இதே போல் மாநிலத்தில் எதிரும் புதிருமாக பிரிந்து சிதறிக்கிடக்கும் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்தால் இந்தியாவையே பீகார் ஆக்கலாம் என்பதுதான் நிதரனமான உண்மை .

இன்றைய இளைஞர்களின் சிந்தனைப்போக்கு...?

கட்டுரை, ஆகஸ்ட் 20: இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் நாட்டம் குறைந்துள்ளமைக்கான அடிப்படைக் காரணமும் அது மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறையும்!


இன்று எமது இளைஞர்கள் மத்தியில்மேற்க்கத்திய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒருவகையான மோகம் மேலோங்கிய நிலையில் தமது வாழ்வினது மாடலாக  அவர்கள்நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் அடிப்படையாக கொள்வதனை சர்வசாதாரணமாக காணலாம்.

இத்தகைய குப்பார்களது நடை, உடை, பாவனை போன்றவற்றை “பேஷன் “ 
என்ற பெயரில் இவர்கள்பின்பற்ற நினைப்பதற்கு காரணம் இவர்களுக்குள் 
உள்ள இஸ்லாம் குறித்த அடிப்படைச் சிந்தனையில்உள்ள தெளிவின்மையும் 
இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாற்றையும் சரிவரபடிக்காமல் 
இருப்துமேயாகும்.

முதலில் எமது இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகவும் வெறும் வணக்க வழிபாடுகளில்ஈடுபடும் மார்க்கமாகவும் இவர்கள் நோக்குவதால் இவர்கள்
தொழுதால் போதும் அல்லது எப்படிவேண்டும் என்றாலும் தனது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைப்பது அவர்கள் இஸ்லாத்தை
விளங்கியுள்ள விதத்தில் உள்ள குறைபாடாகும

உண்மையில் இஸ்லாம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பைஒழுங்குபடுத்துவதுடன் நின்றுவிடாமல் அது பொதுவாழ்வில் மனிதன் எதிர்நோக்கும் அரசியல்,பொருளியல், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு

உறவுகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தத்தேவையான செயலாக்க அமைப்புக்களை கொண்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில் இவற்றைஒழுங்குபடுத்துகின்ற ஒரு வாழ்க்கைமுறையாக வாழ்கைச் சித்தாந்தமாக ஒரு முழுமையானஇஸ்லாமாக பார்க்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடாகவே நாம்
பார்க்கலாம்.

அவ்வாறு பார்க்கத்தவறுவதாலேயே மத ஒதுக்கல் சிந்தனையில் இருந்து பிறந்த முதலாளித்துவதாராண்மைவாதச் 
சிந்தனை, மற்றும் செயலாக்க அமைப்புகள் என்பவற்றினது தாக்கத்திற்கு 
அவன்“நாகரீகம்” எனும் பெயரில் கண்ட கண்ட ஜாஹிலிய்ய சிந்தனைகளைக் கொண்டு தனது இளமைப்பராயத்தை ஒழுங்குபடுத்த முற்படுகிறான்.

இதற்கு பிரதான காரணம் அவனுக்கு போதிக்கப்படும் இஸ்லாமும் அவன்
காணும் தாவாமுறைகளும் வெறும் இபாதாக்களை செய்யத்
தூண்டுவதுடன் நின்றுவிடுவதேயாகும்!

உண்மையில் இஸ்லாத்திற்கு அன்னியமான இஸ்லாத்தை குழிதோண்டிப்
புதைக்க முற்படும்மேற்கினது கலாச்சார படையெடுப்பும்,  வாழ்கை முறையையும்,  சிந்தனைப்படையெடுப்பையும், ஒரு முஸ்லிம் இளைஞன்
உணரவேண்டுமாயின் அதற்கு அவன் இஸ்லாத்தை ஒருமுழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாக (Ideology)  வாழ்க்கை முறையாக அவன் விளங்குவதும்அவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கு தன்னைப் பண்படுத்திக் கொள்வானாயின் அவன் இத்தகைய மேற்கினது ஜாஹிலியத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாத்தை மிகவும் அக்கறையுடன் தனது தனிப்பட்ட வாழ்வில் முடிந்தளவு பின்பற்ற முற்படுவதுடன் அது சமூகவாழ்வில் மலர்வதற்கான தடைக்கற்களையும் அறிய முற்பட்டு உரிய தாவாக்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு இஸ்லாமிய இளைஞனாக மாறுவான்.

அத்துடன் இஸ்லாம் சமூக வாழ்வில் முழுமையாக பின்பற்றப்படுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவன் உணர முற்படும்போது இன்று முஸ்லிம்களுக்கா ஒரே தலைமை உலகில் இல்லாததும், முஸ்லிம் உம்மத் தேசியவாதச் சிந்தனைக்குள்ளும், மேற்கினது முதலாளித்துவ ஜனனாயக விழுமியங்களிலும் கொண்டுள்ள நம்பிக்கை முறைபற்றியும் அவன் உணர ஆரம்பிப்பதுடன் அவற்றில் இருந்து உம்மத்தை விடுவிக்கத் தேவையான உரிய தாவாக்களையும் அவன் மேற்கொள்வான்.

அது அவன் வாழும் நாட்டில் உள்ள அரசியல் மற்றும் ஏனைய மேற்கினது
வாழ்க்கை முறைபற்றியஅடிப்படைப் பார்வையில் உள்ள சமூக, கலாச்சார
சீர்கேடுகளை கோடிட்டுக் காட்டி இஸ்லாத்தை ஒருமாற்றீட்டு வாழ்க்கைத்
திட்டமாக அவன் பிற சமூகத்திற்கு தாவா செய்ய வழிவகுக்கும்.

அத்துடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இஸ்லாம் ஒரே தலைமையின் கீழ்,இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்பட்டு, 
முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் அவசியம் குறித்தும்இஸ்லாமிய
வெளிநாட்டு கொள்கை மூலமாக  தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அவ்வரசு
உலகில்இஸ்லாம் மீள ஒழுங்குபடுத்தி இன்றுள்ள முதலாளித்துவ தலைமைத்துவத்தை மாற்றீடு செய்யும்ஒரு தலைமையாக  இஸ்லாம் மீண்டும் வரவேண்டும் எனும் “சீரியசான இஸ்லாமிய”இளைஞனாக அவன் மாறுவான்.

இத்தகைய சிந்தனைப்போக்கு அவனை நிச்சயம் வழிகேட்டில் இருந்து 
பாதுகாத்து மறுமையில்ஈடேற்றம் பெறவழிவகுப்பதுடன் இஸ்லாத்திற்கும் 
பலம் சேர்க்கும் இன்ஷா அல்லாஹ்..,

     

மயிலாடுதுறையில் திருமணத்திற்கு சென்ற இரண்டு பெண்கள் காரில் கடத்தல் -நகை மற்றும் பணம் பறிப்பு பதற்றம் !!!




































நாகை மாவட்டம் சோழசக்கரநல்லூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் மயிலாடுதுறையை அடுத்த கிளியனூருக்கு திருமணத்திற்கு சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்து கிளியனூர் கடைத்தெருவில் பேரூந்துக்காக காத்திருந்த போது அம்பாசிடரில் வந்த இருவர் நாங்கள் மயிலாடுதுறை செல்கிறோம் என்று சொனனதால் இருவரும் காரில் ஏறியுள்ளனர்.
மயிலாடுதுறை வருவதற்குள் நாங்கள் சிதம்பரம் செல்கிறோம் நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள் என்று கேட்க நாங்கள் சோழசக்கர நல்லுர் செல்கிறோம் என்று சொல்ல இவர்களை மிரட்டியவாறு கார் சிதம்பரம் சென்றது.

கார் மயிலாடுதுறையை தாண்டியபோது இன்னும் இரண்டுபேர் காரில் கத்தியுடன் ஏறி இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களை சிதம்பரம் கடத்தி சென்று அவர்கள் இருவருடமிருந்த 35 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவர்களிடமிருந்த செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டு சிதம்பரத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சோழசக்கர நல்லுர் வந்து பின்னர் மயிலாடுதுறையில் காவல்நிலையத்தில் புகார் செய்துயுள்னர்.
காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஆண் துணையின்றி பெண்கள் தனியாக செல்வதும், அறிமுகம் இல்லாத கார் மற்றும் வேன்களில் பிரயாணம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...
இது ஓர் விழிப்புணர்வு பதிவு, அதிகப்படியாக Share செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்...

பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் ஒத்திவைப்பு !!

இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ADSP முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் S.l. பிச்சை முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் வரும் 26-08-2014 அன்று மாற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துரில்லாஹ்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)